**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!

>> Tuesday, April 1, 2008

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை.

ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.

இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.

இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு.

வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் "கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது.

உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள்.

அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் - ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரததன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் அகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ ஆவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.

தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர்.

வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர்.

அதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை.
சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார்.

சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 அண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, "ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை எற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை எற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார்.

""பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Some Foirmans Sauads and parwawas(1578 -1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.

""ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் அகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஒர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.

அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள்.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது.

ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர்.

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது.

இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture)என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு.
நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஒர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும்.

இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.-
முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)
http://www.tmmkonline.org/tml/others/108576.htm

-------------------------------------------------------------------
ஒளரங்கசீப்: கண்காட்சி பெயரால் மதவெறி.

ஒளரங்கசீப் இந்துக்களை கொடுமைப்படுத்துவது போல

கடந்த வாரம் சென்னையில், முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றிய கண்காட்சி ஒன்று மத்திய அரசின் "லலித் கலா அகாடமி கண்காட்சி அரங்கில்' நடத்தப்பட இருப்பதாக பிரபல தின இதழ்களில் விளம்பரங்கள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து நாமும், மாணவர்களுக்கும் வரலாற்று பிரியர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் நமது "மக்கள் உரிமை' இதழில் கண்காட்சி தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

பின்னர் புதன்கிழமை 05.03.2008 அன்று கண்காட்சியை பார்வையிடலாம் என மக்கள் உரிமை ஆசிரியரும் மாநில செயலாளருமான அன்சாரியும், உதவி அசிரியரும் வழக்கறிஞருமான காஞ்சி ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருவரும் சுமார் 6:30 மணியளவில் சென்றனர்.

உள்ளே ஒளரங்கசீப் பற்றிய படங்கள் அவர் உத்தரவிட்டதாக கூறப்படும் ஆணைகள் ஆகியவை ஒவியங்களாக வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. முதல் ஒவியத்தை பார்த்தவுடன் தூக்கி வாரிப்போட்டது.

முதல் ஒவியமே, இந்துக் கோயில் ஒன்றை இடிக்கச் சொல்லி ஒளரங்கசீப் ஆணையிட்டதாக ஒரு கடிதத்தை மாட்டியிருந்தனர்.

அரங்கில் இருந்த அனைத்து ஒவியங்களும் ஒளரங்கசீப் இந்துக்களை கொடுமைப்படுத்துவது போலவும்

அவர்களை மதம் மாற்றச் சொல்லி ஆணையிடுவதாகவும்

இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அங்கு பள்ளிவாசல்களை கட்டுவது போலவும் தனது தம்பி தாராஹிகோவின் தலையை துண்டித்து அதை பார்வையிட்டு மகிழ்வது போலவும்,

சீக்கிய குருமார்களைக் கொன்று ரசிப்பது போலவும்

இவ்வாறாக ஒளரங்கசீப்பை பற்றி மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டுவதாகவும்

மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை எற்படுத்துவதாகவும்

அனைத்து ஒவியங்களும் இருக்க வெகுண்டெழுந்த இருவரும் கண்காட்சி அரங்கில் இருந்த ஏற்பாட்டாளர் இருவரிடம் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஏற்பாட்டாளர்கள் ஏதேதோ சொல்லி சமாளிக்க அங்கிருந்த பார்வையாளர் பதிவு புத்தகத்தில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

பின்னர் நேராக லலித் கலா அகாடமியின் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து, அரசு கட்டடத்தில் இதுபோன்ற கண்காட்சியை எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டதுடன் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் இந்த கண்காட்சியை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அதைப் பெற்றுக் கொண்ட கண்காணிப் பாளர் நாளைக்குள் (06.03.2008) கண்காட்சியை அகற்றுவதாக உறுதி அளித்தார். கண்காட்சி அகற்றப்பட வில்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டனர். அங்கே முதல் எதிர்ப்பை தமுமுக தான் தொடங்கியது.

உடனடியாக மார்க்ஸ் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு முன்னணியின் தோழர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு போன் மூலமும்... பேக்ஸ் மூலமும் கண்டனங்கள் பற‌ந்தன.

மக்கள் உரிமை சார்பில் செய்தியாளர் அத்தேஷும், ராபியும் அதை ரத்து செய்யக்கோரி பேக்ஸ் அனுப்பினர். இதனிடையே அடுத்த நாள், கண்காட்சியை அகற்ற எற்பாட்டாளர்களிடம் அகாடமியின் நிர்வாகிகள் கோரினர். ஆனால் ஒவியங்கள் அனைத்தும் பல லட்சம் மதிப்புள்ளவை அதனால் ஒரு நாளில் இவற்றை யெல்லாம் மாற்ற முடியாது என்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதனால் வியாழக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்துக் கோயில்களை இடித்து விட்டு அங்கு பள்ளிவாசல்களை கட்டுவது போல-


இதனிடையே கண்காட்சி தொடர்பான விவரங்கள் தமுமுகவினருக்கு எஸ்.எம். எஸ்.கள் மூலமாக பரவ வியாழனன்று தமுமுக மாநில துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி லலித் கலா அகாடமிக்குச் சென்றார். அவருடன் பேரா. ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்ட நண்பர்கள் சென்றனர்.

ஒவியக் கண்காட்சி பொறுப்பாளர்களிடம் வரலாற்றுத் திரிபு செய்யும் ஒவியங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கண்காட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த பொழுது முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மிக நெருக்க மானவருமான சந்திரலேகா மிகுந்த ஆவேசத்தோடு, இவரிடம் ஏன் விளக்கம் சொல்கிறீர்கள் என்று ஏற்பாட்டாளர்களிடம் எகிறினார். இதனால் வாக்கு வாதம் மேலும் முற்றியது.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காவல்துறை உடனடியாக களமிறங்கியது. உதவி ஆணையர் முரளி தலைமையில் காவலர்கள் கண்காட்சியை மூடியதுடன், பயந்து எங்கே உடைத்து விடுவார்களோ என்று பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கண்காட்சியில் சர்ச்சைகள் எற்பட்டவுடன் தான் தெரிந்தது. இதற்கு எற்பாடு செய்தது முழுக்க முழுக்க சங்பரிவார கும்பல் என்று. பிரான்கோயிஸ் கௌத்தியர் (?) என்ற பிரெஞ்சு ஆய்வாளர் (?) ஒருவரின் தலைமையில் சங் கும்பல் குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் இக்கண்காட்சியை நடத்தியுள்ளனர்.

தீவிரவாதத்திற் கெதிரான தொடர் போராட்ட குழு என்ற பெயரில் இந்த கண்காட்சிகளை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

கண்காட்சிக்கு எதிர்ப்பு என்று தெரிந்தவுடன் ராமகோபாலன், சந்திர லேகா போன்றவர்கள் கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என கத்தினர்.
சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வர் உட்பட சில ஒவியர்கள் கருத்துரிமை பாதிக்கப்படுவதாக குரலெழுப்பினர்.

பொய் வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இவ்வரலாற்று திரிபு கண்காட்சியை தடை செய்வது சரியே என பல்வேறு அமைப்புகளும், சமூக நல ஆர்வலர்களும் கூறியதால் தொடர்ந்து கண்காட்சி நடக்க லலித்கலா அகாடமியும், காவல்துறையும் அனுமதி மறுத்து விட்டன.

தமுமுகவின் தலையீட்டால் தமிழகத் தில் சமூக நல்லிணகத்தை கெடுக்க நினைத்த சக்திகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதுபோன்ற கண்காட்சிகளை வேறு இடங்களில் நடக்க, விடாமல் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.

பல்வேறு பெயர்களில் கலை கண்காட்சி என்ற பெயரில் ஊடுருவ நினைக்கும் சங்பரிவார சக்திகளை அடையாளம் கண்டு தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல்ல எண்ணத்தில் செய்தி வெளியிட்டோம்

கண்காட்சியை பார்வையிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சி.எம்.என் சலீம் உள்ளிட்ட பலர் தமுமுக தலைவர்களை தொடர்புக் கொண்டு கண்காட்சியின் விபரீதத்தை கூறினர்.

கண்காட்சிக்கு எதிராக தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் களப்பணி செய்ததை சன்நியூஸ், மக்கள் தொலைக்காட்சி, தமிழ் ஒசை, டெக்கான் க்ரானிக்கல் போன்ற செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சென்ற வார மக்கள் உரிமையில், நாளிதழ்களில் வந்த விளம்பரத்தைப் பார்த்தே ஒரு செய்தியாக ஒளரங்கசீப் கண்காட்சியை வெளியிட்டிருந்தோம்.

ஒளரங்கசீப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சி என்றே நாம் நம்பினோம். அனால் அதற்கு பின்னே ஆரிய சூழ்ச்சி இருப்பதை பிறகுதான் உணர்ந்தோம். அந்த பிழைக்காக வருந்துகிறோம்.

யார் பொறுக்கி?
ஒளரங்கசீப் கண்காட்சியை நடத்திய பிரான்ஸ் காயிஸ் கவுத்தியர் 10.03.2008 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெறித்தனமாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையை அவர் தான் எழுதினாரா அல்லது அருண் சோரி எழுதி அவர் பெயரில் வெளியிடப்பட்டதா? என்று தெரியவில்லை.

ஆற்காடு ஆளவரசர் நவாப் முஹம்மது அலி கண்காட்சியை பார்த்து சென்ற பிறகு அவர் தான் தமுமுக மற்றும் மனித நீதி பாசறைகளைச் சேர்ந்த பொறுக்கிகளை (Goons) தூண்டி விட்டார் என்றும்,

அவர்கள் அங்கு வந்த நல்ல குடும்பத்து பெண்களிடம் வாக்குவாதம் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். அதாவது மதவெறியை எதிர்த்த நம்மை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.

யார் பொறுக்கி? வரலாற்றைத் திரித்தவர்களா? அதை வைத்து ஆதாயம் பெறுபவர்களா? அல்லது நல்லிணகத்திற்காக குரல் கொடுப்பவர்களா?

இதை நியூ எக்ஸ்பிரஸ் நாளேடு தெளிவுபடுத்த வேண்டும்.
--இப்பி பக்கீர்
http://www.tmmkonline.org/tml/others/108600.htm
-------------------------------------
அவ்ரங்கசீப்பின் உயில்.

மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவ்ரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன.

எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன்.

அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) கபன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.

(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது கபன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது. நான் இசையை வெறுக்கிறேன்.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயில்லை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஒளரங்காபாத்தில் காணலாம்.

மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்ட 'பதஹ்' என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது. - THANKS TO SOURE : MARICAIR PAKKAM
--------------------

படிக்க:>>
அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.
------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

5 comments:

Asalamsmt April 1, 2008 at 2:38 PM  

உரிமையை, உண்மையும் எடுத்து சொன்னவர்களை பொறுக்கி என்று சொன்னவர்கள், இந்த பொறுக்கி தனமான செய்கைகளை முதலில் விட வேண்டும், இந்த சங் பரிவார்களுக்கு வேறு வேலையே இல்லையா! இப்படி இவர்கள் அடிக்கடி தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தால் ஏன் தீவிரவாதம் தலை தூக்காது? தீவிரவாதத்தை ஆரம்பித்து வைப்பவர்களே இந்த சங் பரிவார்கள் என்ற முடவர்கள் தான். முள்ளை முள்ளால் தான் எடுக்கனும் அதை தன்னுடைய உண்மையான சரித்திர எழுத்தால் வாஞ்ஜீரார் எழுதியது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
//பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஒர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.

அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள்.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது.

ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர்.

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.//

சங் பரிவார்களே இது போதுமா... இன்னும் வேண்டுமா உண்மை சம்பவம்கள் வெளி வரும் இறைவன் நாட்டபடி.

மரைக்காயர் April 1, 2008 at 6:26 PM  

இதை நான் பதிவிட எண்ணியிருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். நன்றி.

Hilaal ALAM April 16, 2008 at 2:35 PM  

Assalamu Aleikkum
I agree. There are many distortions in Indian History with reference to Muslim rulers. You should see this other way. The false propagators are consistently and smoothly changing the facts about Muslim rulers whereas Muslim Scholars and Intelligentsia are not focusing on defeating the propaganda equally. Rather Muslims raise their voice only when they find facts are distorted above a certain threshold level. These entire episodes projects the (false) propagators as the purveyor of truths while voice raisers (against falsehood) as trouble-mongers. I see this as flaws in attitude of Muslims in defeating these poisonous messages.

Muslims Scholars and Intelligentsia should periodically spread the news of Muslim Rulers such as Tippu and Aurangazeb, as such. This is not something to ignore for entire Islamic community living in India. On hearing (false) historical news about Muslim rulers, naturally Non – Muslims may sub-consciously be turning against the ordinary Muslims. Through academia, the so called historians are sawing falsehoods, to grow the actual weapons slit through Muslims’ throat in future.
Hilaal ALAM

தமிழ்மணி April 7, 2010 at 5:11 PM  

musilm mannargal hindu kovilai idikkavilla endu koorukirirgala?

Manasatchiudan sollungal..... Maduravill krishnar piranthathaga koorappadum sirai indru oru masuthi.... eppadi nadanthathu idu....

VANJOOR April 7, 2010 at 6:11 PM  

DEAR TAMILMANI,

PLEASE READ THE FOLLOWING:-

1. முஸ்லீம்கள் கோயில்களை இடித்தார்களா?



2.
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,



3. இந்தியாவில் மன்னர்கள் இந்துக்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக‌ மதம் மாற்றினார்களா?

******

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP