**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

Showing posts with label இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு. Show all posts
Showing posts with label இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு. Show all posts

வ.உ.சி கப்பலோட்டியது யாரால்? மறைக்கப்படுவதேன்?

>> Tuesday, November 19, 2013

வ.உ.சி. க்கு கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.


கப்பலோட்டிய தமிழன் யார்?


அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாரதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான்.

ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியை இன்றைய பாடப்புத்தகங்களில் தெரிந்து கொண்ட நம்முடையப் பிள்ளைகளுக்கு வ. உ.சி ஓட்டியக் கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.10 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார்.

கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர்.

கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும், ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் ?

கப்பலை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல், ஒருவேளை உணவைப் பெறமுடியாமல், இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ? என்னே நீதி ???

வ.உ.சி – யின் நேசர் உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது.

வ.உ.சி யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர்.

1905 – இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.

1907 – இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.

1908 – இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார், மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ! - என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

1908 – இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்… முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். – தனது ‘சுயசரிதை’ யில் வ.உ.சி.

வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். அந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான். முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல. (* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.

இவரை புகழ்ந்து வ. உ. சி. ஒரு பாடல் பாடியுள்ளார்.

'' பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான் வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்''

என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கீர் முஹம்மது இராவுத்தர் தான் என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார். (ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)

பக்கீர் முகம்மது ரூபாய் இரண்டு வட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனை பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர் (பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார். - என்று 20-10-1906 – இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ நூலில் எடுத்தாண்டுள்ளார்.

இந்த செய்தியை எந்த வரலாறு புத்தகத்திலாவது பதிவு செய்துள்ளர்களா ?

*இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை – தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)

இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!


பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கிலிடப்பட்ட மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?

வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸ்லிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?

மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்!

மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.

மாப்பிளாமார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)

இது மட்டுமில்லை. இன்னும் நிறைய உள்ளது.
***********************


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

ஒரு இந்துவாயிருந்தால் பதில் சொல்லுங்கள் - ‍திரு கோவன்.

>> Thursday, October 24, 2013

சம்மதமா? சம்மதமா? நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா? சொல்லிட உன்னால் முடியுமா? நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா? இல்லை கண்டும் காணாத கல்லினமா? - ‍திரு கோவன்.

உங்களால் முடியுமா? - திரு கோவன்.

உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.



நீங்கள் ஒரு இந்துவாயிருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்


இந்து என்று சொல்லிக்கொல்லும் சகோதரர்கள் கொஞ்சமாவது நாம் மற்றும் நம்முடன் சார்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிந்திக்கக் கடமைப்பட வேண்டும்!..தாங்கள் பெயரில்தான் இதைசெய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நன்றாகத்தெரிந்தும் இப்படி கண்டும்காணாமல் போவதை என்னவென்று சொல்லுவது ? சொல்லுங்களேன் சகோதரர்களே. - திரு கோவன்.

சொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

நன்றி: வினவு.
*************************************


சொடுக்கி கானம் கேளுங்கள்.

>>>>>> இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? இந்து மக்கள் விருப்பம் என்றான். உங்களை கேட்டானா? நீங்களா இடிக்க சொன்னீர்கள்? நீங்களா மூஸ்லீம்களை கொல்ல சொன்னீர்கள்? <<<<<<


மேலும் படிக்க... Read more...

ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு - - தமிழருவி மணியன்!

>> Sunday, October 20, 2013

இந்தியர்களை கலவரப்படுத்தி மதரீதியாக பிரித்து ஒருவரையொருவர் கொல்லும் சூழலை உருவாக்கும் காவிபயங்கரவாத கும்பலையும் அதன் கும்பலில் ஒன்றான பா.ஜ.க வின் சூழ்ச்சிகளையும் இந்தியர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேன்டும்.








ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு - - தமிழருவி மணியன்!


நேருவின் தலைமையில் நடந்து முடிந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் ‘பரிபூரண சுதந்திரமே காங்கிரசின் குறிக்கோள்.

இந்த இலட்சியத்தை அடையும் வரை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக கொண்டாடுவது’ என்று தீர்மாணிக்கப்பட்டது.

இதை வரவேற்று எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கையை அணுப்பும் பழக்கமில்லாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘இந்திய தேசிய காங்கிரஸ் நமது சுதந்திர கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சி.சுதந்திரக் கோரிக்கை வலியுறுத்தும் எந்த அமைப்பாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புத் தருவதே நமது கடமை ‘என்று சுற்றறிக்கை அனுப்பியதன் நோக்கம் தங்களுக்கும் தேச பக்தி இருக்கிறது என்பதைக காட்டிக் கொள்வதற்காகவே.

இந்திய தேசிய காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் 26.01.1930 அன்று ‘சுதந்திர நாள்’ கொண்டாடப்பட்டது.

மக்கள் ஊர்வலாகச் சென்று தேசியக் கொடியாகிய மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

ஆனால்,அன்று ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய ‘பக்வா ஜந்தா’ கொடிக்கு வணக்கம் செலுத்தியது.

நாட்டு மக்கள் ஏற்றுகொண்ட மூவர்ணக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்து ராஸ்டிர விடுதலையை வேண்டிய ஆர்.எஸ்.எஸ். அனைத்து சமயங்களை சார்ந்தவர்களும் விடுதலை பெறுவதை விரும்பவில்லை.

1930-ல் சுதந்திர நாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அதன் பின்பு நாடு விடுதலை பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று காங்கிரஸ் இயக்கத்தை போன்று சுதந்திர நாளை கொண்டாடவில்லை.

அண்ணலின் தலைமையில் 1942 ஆம் ஆண்டு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியது.

நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் சிறை கூடங்களை நிரப்பிய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்த மகத்தான சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை.

காந்திய போர்களத்தில் ஆர்.எஸ்.எஸ் தீரத்துடன் நின்று போராடவில்லை என்பதை விட வெள்ளையருக்கு ஆதரவாக பிரிட்டிஷ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்த்துவிடும் மலினமான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது என்பது தான் அதிர்ச்சி தரகூடிய வரலாற்று உண்மையாகும்.

டிரேவர் டிரய்பர்க் என்ற பத்திரிக்கையாளர் இந்த தேச விரோதச் செயலை “FOUR PHASE OF SUBVERSION "என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார்.

” பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திகு வேண்டிய இராணுவ எந்திரங்களை விநியோகிக்கும் ஒப்பந்தங்களை பெற்றனர்.

1943 ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, இருந்த உணவுப்பொருள்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அள்ளிக்கொண்டு போய் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு கொடுத்தனர்.

பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் துன்புற்றனர். ஆர்.எஸ்.எஸ் ஒப்பந்தகாரர்களிடம் ஏராளாமாக பணம் குவிந்தது.

பிரிட்டிஷ் இராணுவ நிதிக்கு அவர்கள் பணத்தை அள்ளி வீசினர்.

ஆர்.எஸ்.எஸ் செய்திதாள்களுக்கும் அதனுடைய மற்ற பத்திரிக்கைகளுக்கு பிரிட்டிஷ் அரசு பேருதவி செய்தது.ஏராளமான அரசு விளம்பரங்கள் வழ்ங்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்கேற்றவர்கள் என்ற மாயை உடைத்து காட்டுகின்றன.

கோல்வால்கரின் தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ் அரசுக்கு இசைவாகவே நடந்து கொண்டது.

1942 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை கொழுந்து விட்டெரிந்த விடுதலை வேள்விலிருந்து ஆர்.எஸ்.எஸ் விலகியே நின்றது.

நாக்பூரில் தலைமையகத்தை உருவாக்குவதிலும்,பயிற்சி முகாம்களை நடத்துவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள வளர்ப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் அமைந்தன.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களும் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களும் தேச விடுதலை போரில் தியாகத் தழும்புகளை ஏற்றவர்கள் இல்லை.

பதினைந்து வயதிலேயே வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 1941-ல் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அமைப்பில் தான் இணைந்து செயற்பட்டதாக வாஜ்பாய் அவர்கள் அறிவித்த போதிலும் அவர் ஆற்றிய சுதந்திர போராட்ட சரித்திரச் சாதனைகள் என்று எதனையும் குறிப்பிடுவதற்கு இல்லை.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் 1942- ல் நடைபெற்ற போது வாஜ்பாயும் அவருடைய நண்பர்களும் அதில் பங்கேற்றுச் சிறை சென்றனர்.

அவர்கள் மீது வன்முறை சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

‘புரட்சியாளர்’வாஜ்பாய் அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள அதுவரை சிறை பிடிக்கப்படாத தன்னுடைய நண்பர்களின் பெயர் பட்டியலை பிரிட்டிஷ் காவல் துறையிடம் கொடுத்து தானும் மன்னிப்பு கேட்டு விடுதலையான வீர வரலாற்றுக்குரியவர்.

கோல்வால்கர் தொடங்கி வாஜ்பாய் வரை இந்திய விடுதலை போரில் எந்த மகத்தான் பங்களிப்பை தந்துவிடவில்லை.

அடிமை இருளில் சிக்கிக் கிடந்த இந்தியத் தாயை விடுவிப்பதற்கு எந்த முனைப்பையும் காட்டாத இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய தாயின் துயர் துடைக்க வந்த தேசபக்திப் பாசறைகள் என்று தங்களுடைய தோள்களுக்கு தாங்களே மாலை சூட்டி கொளவது போலித்தனத்தின் மகுடம். - தமிழருவி மணியன்

Ref: Inneram.com

பா.ஜ.க பல வழிகளில் ஆர்.எஸ்.எஸ் மாபாதகன் கோட்சே முஸ்லீகள் போல் சுன்னத் செய்துகொண்டும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டும் செய்த காந்தியின் படுகொலையை நியாயபடுத்த முயற்சி செய்தது ஆனால் பலனளிக்கவில்லை.

மேலும் படிக்க... Read more...

5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.

>> Sunday, March 24, 2013

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

காந்தி, நேரு உடன் ஆசாத்.


மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான‌ ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.

ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள‌ மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

தோற்றம் 11.11. 1888 - மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

()()()()()()()()()
தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் . அவரது சண்டமாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்த பதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற புனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்."அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார். சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

மேலும் படிக்க... Read more...

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.

>> Friday, March 15, 2013

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!

மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.

அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.

பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?

பாலபாரதி , MLA

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)


THANKS: Satyamargam.com

மேலும் படிக்க... Read more...

4. வீரத் தமிழன் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4.

>> Sunday, March 10, 2013

ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! கட்டபொம்மனை போற்றியவர்கள் மறந்த மாவீரன் மருத நாயகம்.

தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருத நாயகம். அவரது போராட்ட வரலாறு என்ன?

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை.

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!

ஊரும், பெயரும்

மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.

1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும் சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.

மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம் பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப் ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.

அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.

இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.

ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.

திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன.

மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார்.

மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.

நிஜாம் – நவாப் ? இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.

யார் ஆற்காடு நவாப் ? ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார்.

தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. வீரமும் – பரிசும் மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம் தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.

ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

பொறாமை இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட!

இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.

சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்!

கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

இங்கிலாந்து பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்


இந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.


டேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.


வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.


அதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.


மருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.


மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.


வரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.


அன்றைய ஐரோப்பிய அரசியல்


மருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு அன்றைய சர்வதேச அரசியலையும், அதன் இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.


ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.


இன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கல் போன்ற குறுக்கு வழிகளில் இந்திய பொருளாதாரத்தையும், மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள் விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.


18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டு, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.


அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரிய வியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தன. அதன் விளைவு வியாபாரக் கம்பெனிகள் என்ற போர்வையில், இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டின.
ஒளரங்கசீப் 1707ல் இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும், குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆட்சி இல்லாமல், குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும், ஒரே ஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும், அவர்களுக்கு வசதியாய் போயிற்று.


சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது கம்பெனிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார்.


இதே போல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கென பிரெஞ்சுப்படையை வைத்திருந்தன. இதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகை காரணமாக, எங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம் கூறினர்.


காரணம், அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் கடும் போட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு நாடுகளுக்கிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால், அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத் தெரியவில்லை.


இப்படி நடந்திருந்தால்?


மருதநாயகம், ஹைதர் அலி, பூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள். சமமான வீரர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும். ஹைதர் அலியும், பூலித்தேவனும் ஆரம்பம் முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள். ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.


ராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின் வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவரையும் விட, தெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எனலாம். எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.


ஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலி, மருதநாயகம், பூலித்தேவன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.


மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 71/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்ல…

மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.

ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!

காவிரி காவலன்! மக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார்.

ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.

பொதுப்பணித்துறை

நாட்டின் வளத்தை பெருக்குவதிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.

முல்லைப் பெரியாறு இன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான்.

தமிழகத்தில் உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ள மேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.

விவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம், அதற்காக எல்லா வகையிலும் பாடுபட்டார். விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும் ஊக்குவித்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.

போக்குவரத்துத் துறை நாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார்.

தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்ததால் மக்களின் ஆதரவும், அன்பும் பெருகியது.

இதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.

“மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை, நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின் ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.

மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றன.

காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான். (யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது. அதிலே, ஈ – எறும்பு மொய்க்காமல் இருந்ததடா பணமும் என்றும், கட்டேது காவலறியர்கள் & தேசம் கறந்து பால் வெளிவைத்தால் காகம் அனுகாது என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. (நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)

அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.

அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.

மனிதநேய கொள்கை அவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது.

ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர் கெட்டிக்காரராக திகழ்ந்தார்.

மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது.

அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.

முந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தார். மருதநாயகம் இந்து சமுதாய மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்பட்டார்.

அம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்து கொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள செப்பேடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

தொடங்கியது மோதல் இவ்வாறக, மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ்! இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது! உள்ளம் வெந்தது!

விளைவு, திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப்! இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை! பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே.. போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.

அதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார். அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார். இக்கால அரசியல்வாதிகளையே தூக்கி சாப்பிட்டார் நவாப்! ஆடிப் போய்விட்டார் மருதநாயகம்!

ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா? மருதநாயகமா? யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாருக்கு பணிவது? என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.

திறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

அது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை!

உத்தரவு பறந்தது! மிஸ்டர் மருதநாயகம்… இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள்! அதுவரை ஆங்கிலேயர்களிடம் நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார்.

தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

மதுரைப் போர்! முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது!

போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.

தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.

சிவகங்கை சிக்கல் ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள்.

குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது.

சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.

அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா… வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.

கோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.

முத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.

ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.

பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தந்திரம்! வஞ்சகம்! ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க” என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!

இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது.

தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.

1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தொடங்கியது ‘மதுரை போர்’! மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர்.

மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!

நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.

அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.

போரில் உறுதி கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.

இறுதி யுத்தம் ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.

ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.

ஹைதர் அலியின் உதவி முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந்தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.

“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

சீறினார்… மோதினார்! உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!

அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.

தந்திரம் போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர்.

இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாயகத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.

சூழ்ச்சி வென்றது…

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!

அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்தபோது துரோகிகள் நுழைந்திருக்கிறார்கள்.

தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.

அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார்.

எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை

! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார்.

ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தூக்கு 15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை.

அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.

தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந்தது! எனவே, எடை தாங்கவில்லை!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது!

அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது.

அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.

தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…!

தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?


மதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்!

மருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.

இவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)

ஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

அந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்! முயற்சிப்பார்களா?


கட்டுரை ஆக்கம் : எம். தமீமுன் அன்சாரி

SOURCE: http://www.samuthayaotrumai.com/?p=439

**************


கீழ் கண்ட சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.


முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.

இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2

3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? PART 3. -


மேலும் படிக்க... Read more...

3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? PART 3.

>> Wednesday, March 6, 2013

இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள்.

ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர்.

இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது.

அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே!

அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும். இதனை சிப்பாய் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்..!

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு.... பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான். நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர்.

50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது.

ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது. ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும்.

1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில் பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர்.

கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*

இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும்சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.**

(* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63) மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உரைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.

அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவிரப்பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர். (* மேற்படி, பக்கம். 63-64) அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

அவமானப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! - என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.**

நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10) (** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது

. அதில் கைதான - கொல்லப்பட்ட -தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர்.

முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.

இஸ்லாமியர் நடத்திய அரசுகள் - அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர்

இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும்.

அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக - கூலிகளாக - ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்

இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது

ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.

முகம்மது அலி மற்றும் சௌகத் அலி சகோதரர்கள்


கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர்.

என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்!

அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள்.

இந்த வீரத்தாய் பீபியம்மாள் தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்).

பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

இளையான்குடியில் வீரத்தாய் பீபியம்மாள்.
சந்தை பிடிக்க வந்த வெள்ளையன், நம் முன்னோர்களை மந்தை ஆடுகளாக்கி, பாரதத்தை அடிமைபடுத்தி அவன் அரசாண்ட நேரமது.

குட்டினான் வெள்ளையன் குனிந்தோம் நிமிரவில்லை என அன்றைய அடிமை நிலைபற்றி நமதூத் கவிஞர் எழுச்சியுடன் பாடிய காலமது.

இந்த நிலையில் நாடெங்கும் சுதந்திரக் கணல் ஜுவாலை விட்டுக் கொண்டிருந்த நேரம். மக்கள் வெள்ளையனுக்குப் பயந்து தெரிந்தும் தெரியாமலும் இந்திய விடுதலை பற்றி சிந்தித்த காலகட்டமது. ஏன் போராட்டங்களும் தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே நடந்த காலம் அது. நல்ல காரியம் எதுவென்றாலும் முன்நிற்கும், இளையான்குடி இளைத்ததா…. என்ன…? இந்த மண் சிவந்தது. இந்திய விடுதலைக்காகச் சினந்தது என்றே கூறலாம்.

சுமார் 300 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட அன்னியரை எதிர்த்து அவன் நாட்டுத் துணிகளை அணியக் கூடாது. அணியவே கூடாது என்ற வைராக்கியம் எங்கும் எதிரொலித்தது. அலி சகோதரர்கள் என்று அவனியே பாராட்டிய இந்தியச் சிங்கங்கள், இஸ்லாமிய தங்கங்கள் மௌலானா முகம்மதலி ஜௌஹர், மௌலானா ஷவ்கத் அலி ஆகியோர் மூட்டிய இந்திய விடுதலைக் கனற்பொறிகள் தெறித்து விழுந்தன.

இளையான்குடி கடைத்தெரு, அன்று கலகலப்பாய் இருந்தது. களைகட்டியிருந்தது. அன்றென்ன விசேஷம்? ஊர் மக்கள் எல்லாம் கடைத்தெருவில் திரண்டிருந்தார்கள். என்ன தேர்த் திருவிழாவா? இல்லை பின் எதற்கு?

நம்மை அடிமை கொண்ட அன்னியரின் துணிகளை நாம் அணியக் கூடாது என்ற இலட்சியம் செயலாக உருவெடுத்தது.

பனிமலை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். துணிமலையை என்று தான் மக்கள் பார்த்தனர். அதோ எரியத் தொடங்குகிறது. எரிகிறது, எரிகிறது. சுதந்திரக் கனலாய் எரிகிறது. அன்னியர் மீதான கோபத் தீயாய் துணிகள் எரிகின்றன. உரிமைச் சுடர் முன், அடிமைப்புகை நிற்குமா… என்ன? துணி எல்லாம் எரிந்து சாம்பலானது.

அதற்குப்பின் கடைத் தெருவெல்லாம் வெள்ளைக் கதராடை அணிந்திருந்த மக்களின் கண்கொள்ளாக் காட்சி.

வீடுகள் தோறும் கைஇராட்டினம். அது சுழன்ற சத்தத்திலே வறுமை எழுந்தோடித்தான் போனது. தங்கள் கையாலே நூற்ற நூல்களை, பரமக்குடி நெசவாளர்களிடம் கொடுத்து விட்டு அதற்குரிய தொகைக்குக் சுகாதாரடைகளை வாங்கிக் கொண்டு வருவோர் மறுபுறம் : தாம் அணிந்த ஆடைகள் பேக மிகுதியாக உள்ள எஞ்சிய கதர் துணிகளைப் பர்மாவில் வாழும் இளையான்குடி மக்களிடம் விற்பதற்காக அதனை அனுப்பும் அழகிய காட்சிகள் மற்றொருபுறம்.

அன்று கதர்த் தொப்பிகள், குல்லாய் அணிந்த மக்களின் தோற்றம் கம்பீரமாய் தெரிந்தது.

தெருவெல்லாம் தேசிய வெள்ளம் தாய்நாட்டுப்பற்று தழைத்து பூத்திருந்தது. இதயத்தில் உதயமாய் இன்னும் தெரியும் இன்னொரு இனிய சம்பவம்:

இளையான்குடியில் இன்றுள்ள அலங்காரத் தோப்பு மைதானத்திற்கு அருகே தென்புறத்தில் பேரூராட்சியின் குடிநீரேறறு தொட்டி உள்ளது. முன்பு அந்த இடத்தில் காவலர் குடியிருப்பு இருந்தது. அதற்கு முன்பு அந்த இடத்தில் பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களா இளையான்குடி நகர கூட்டுரவு வங்கியின் நிறுவனராகிய ஏ.எஸ்.டி. இபுராகிம் ஷா அவர்களுடைய பங்களாவாகும். அதற்கு சுவனப் பூங்கா எனப் பொருள் தரும் ஜென்னத் பங்களா என்று பெயர்.

அன்று அந்த பங்களா வளாகம்…. அல்லாகு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்தால் ததும்பிப் போயிருந்தது.

ஒரு வீர நிகழ்ச்சி….. ஏதோ… நடக்கவிருக்கும் தடயங்கள். பிள்ளைகளின் வரவால் தாய் மகிழ்வாள். ஆனால் ஒரு தாயை வரவேற்கப் பிள்ளைகளெல்லாம் மொய்த்திருந்தனர்.

அவர் வெறும் தாயா? இல்லை வீரத்தாய்.

தன் பிள்ளைகளை தீனுக்காய் தேசத்துக்காய் பாடுபடும் மாணிக்கங்களாக திகழவை என்று மக்காநகர் புனித ஹரம் சரீபாம் கஅபாவிலே கரம் ஏந்தி துஆ கேட்ட தூய தாய். அவர் இந்தியச் சிங்கங்கள் மௌலானா முகம்மது அலி ஜவ்ஹர், சௌகத் அலி ஆகியோரை பெற்றெடுத்த தாயார் பீவியம்மாள்தான் அவர்கள்.

இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் கொடு: இல்லையேல் அடிமை பூமியில் ஒரு சவக்குழி கொடு என்று 19&11&1930 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் நமக்காகக் குரல் உயர்த்திய அரிமா மௌலானா முகம்மது அலி அவர்கள். இத்தகைய வீரப் புதல்வரை பெற்றெடுத்த வீரத்தாய் பீவியம்மாளை வரவேற்க ஜன்னத் பங்களா புன்னகை பூத்திருந்தது.

அன்று இளையான்குடியில் கடலை வரவேற்க நதிகள் திரண்டு இருந்தன. ஆம் தாயை வரவேற்கத் தாயகமே திரண்டிருந்தது.

அது 1922 ஆம் ஆண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் தயார் நிலையில் இருந்தன. ஆர்வத்தின் காரணமாக அதன்பின் அறிகுறியாக வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு, தாங்களே வடம் பிடித்து அந்த அம்மையாரை அங்கிருந்து அழைத்து வந்தனர்.

இன்று கடைத்தெருவாய் இருக்கும் மீன் பஜார் முதல் காதர் பிச்சை தெரு தொடக்கம் வரை உள்ள பகுதி அப்போது பொட்டல் தரையாய் இருந்தது.

அன்னையின் வருகைக்காக அப்போது அந்த இடம் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது. அன்னை வந்தார். வீர உரை தந்தார். தீனும் தேசிய உணர்வும் கொப்பளித்தது. மக்களுக்கு எல்லாம் நிரம்ப மகிழ்ச்சி. உற்சாக வெள்ளத்தில் ஊர் நனைந்தது.

தீடீரென்று ஒரு திருப்பம் அங்கே கூடியிருந்த மக்கள் தம் கைகளிலும் சட்டைப் பைகளிலும் இருந்த நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளையும், பொன்னாபாரணங்களையும் கழற்றி விழா மேடையில் குவித்தார்கள்.

எதற்காக?

அவையெல்லாம் கிலாபத் இயக்கத்திற்காக குவிந்தது. கிலாபத் என்றால் இந்திய விடுதலை போராட்டம்.

ஆம், நாட்டுக்காக நாட்டு விடுதலைக்காக இளையான்குடியும் தன்னால் ஆன பங்கை அளித்திருக்கிறது. இது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

மௌலானா முகம்மது அலி.


1930 – இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது.

தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது.

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை.

எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன.

இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் ‘அல்-அக்ஸா’ பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :

இறைவா… என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா ! சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !

மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான ‘சுதந்திர இந்தியா’ மலர்ந்து விட்டது.

ஆனால் தேசத்தின் விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை – தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது.

எனவே மௌலானா கேட்ட ”சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா” ! என்ற பிரார்த்தனை… மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம், அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.

"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.

REF: பனைக்குளம் தவ்ஹீத் ஜமாத்,veppamadu.site88.net,http://seyedibrahim.wordpress.com , tamilislamicaudio.com, முஹம்மத் ஆஷிக்>

தொகுப்பு: வாஞ்ஜூர்.

தொடரும் .....

>>>>> PART 1. முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். - <<<<<
>>>> PART 2. இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2 <<<<<<

மேலும் படிக்க... Read more...

இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2

>> Tuesday, March 5, 2013

இஸ்லாமியர்களின் தியாகமும்—-இந்திய சுதந்திரமும்……..

இந்திய சுதந்திர போரில் இந்திய நாட்டில் வாழ்ந்த மக்கள் தொகையில் சிறு பாண்மையினராக இருக்கக்கூடிய முஸ்லிம் மக்கள் தங்களின் சதவீதத்தைவிடவும் மிக அதிகமாக தங்களின் இன்னுயிரையும்,பொருளாதாரத்தையும் இழந்து,

ஆங்கிலேயர்களால் பலவித கொடிய இன்னல்களை அனுபவித்தும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வேளையில்,

ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்தும்,அவர்கள் போடும் எழும்பு துண்டாண சர் பட்டத்திற்காகவும்,அவர்களிடம் அடிமை வேளை பார்க்கவும், முறை வாசல் செய்து வந்தவர்கள்,கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தேறிகளாக வந்த பார்ப்பனர்கள்தான் என்பது உண்மை வரலாறு.

இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்த சுதந்திரம் பெறப்பட்டது.

இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர். ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது.

காட்டிக் கொடுத்து பதவி சுகம் பெற்ற இவர்களால், ஆங்கிலம் பேசுவதும் ஹராம் என்று மார்க்கக் கட்டளையிட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதோடு

இன்றைக்கு முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும்,தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க பார்ப்பன பணியாகும்பல் தங்களின் ஊடகங்கள் வாயிலாக முற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு, சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த முஸ்லிம்களுக்கு குடியிருக்க வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.

சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையும் வேதனையளிக்கிறது.

ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எந்த மதத்தைச்சார்ந்தவர்களோ,எந்த கொள்கையை சார்ந்தவர்களோ அவர்களுக்கு சாதகமான வரலாற்றை கல்வியில் புகுத்தியும்,தனக்கு எதிரான கொள்கையுடையவர்களைப்பற்றி தவறான செய்திகளை புகுத்தியும் உண்மையான வரலாற்றை திரித்து வைத்திருக்கின்றனர்.

இன்றைக்கு நாம் வாழும் காலத்திலேயே நம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கின்ற காரணத்தினால் தமிழுக்காக உண்மையிலேயே பாடுபட்ட தியாகிகள் பலர் இருந்தும் கூட அவர்களிடம் ஆட்சி இல்லாத காரணத்தினால்,

தங்களுடைய சுயசரிதங்களையும், தாம் எழுதிய பாடல்களையும்,தாங்கள் தமிழுக்காக தாங்கள்செய்த தொண்டுகளையும், தங்கள் குடும்பத்தினரின் சுய பிரதாபங்களையும் கல்விக்கூடங்களில் பாடபுத்தகங்களில் புகுத்தி இருந்ததையும் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதை நீக்க நீதி மன்றம் வரை சென்றதையும் காண்கிறோம்.

பக்கத்தில் உள்ள கர்னாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் அங்கே பகவத் கீதையை கல்விகூடங்களில் புகுத்த முயற்சிக்கிறது.

பீகாரில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி நடத்தும் நிதீஷ் குமார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோவால்கர் உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.

இது போன்றே முன் சென்ற ஆட்சியாளர்கள் உண்மையான இஸ்லாமியர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகத்தை மறைத்து காந்தியை சுட்டுக்கொன்றவர்களின் தியாகம் போற்றப்படுகிறது.

இதுபோன்ற தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் (கோயபல்ஸ்தத்துவம்) கேள்விப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உள்பட) இந்த வரலாறு உண்மையாக இருக்குமோ? என்று நினைக்கின்றனர்.

அவர்களுக்காக,மற்றும் இஸ்லாமியர்களைப்பற்றி தவறாக விளங்கியுள்ள மற்றவர்கக்கும் உண்மையை விளக்கும் விதமாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களைப்பற்றிய ஒரு சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது.

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர வரலாற்றில் இந்திய அளவில் இல்லாது தமிழகத்திலும் ஏராளமானவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர்.

ஆண்களுக்கு நிகராக நமது இஸ்லாமிய பெண்மணிகளும் ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர் அவர்களைப்பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.

குஞ்சாலி மரைக்காயர்

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூறி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர்.

சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது. இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.

கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.

கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.

கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.

கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.

இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.

இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.

1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார்.

ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.

சிராஜுத் தௌலா

இன்று முதல் சுதந்திர போராட்டம் 1857 என் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் 1757 லில் வங்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போரே முதல் சுதந்திர போர் ஆகும் ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.



இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.

ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.

சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது.

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.

ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.

கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி 18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

திப்பு சுல்தான் ‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். ‘பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்’ என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான்.

ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார்.

இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர்.

இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன்முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படுத்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ ச்ச்அதிகாரியின் மகன் வில்லியம் காங்கிரீவ் திப்புவின் ராக்கெட் பகுதிகளை இங்கிலாந்து கொண்டு சென்று நவீனப்படுத்தினார்.

அதுவே பின்னர் காங்கிரீவ் ராக்கெட்டுகள் என்று பெயரிடப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் ஆராய்ச்சிக் குழந்தையென்றால், அதனை பத்திரமாக தன் முதுகில் ஏற்றிச்சென்று, மிகச் சரியான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் ஏவுகலம் (Launch Vehicle) (ராக்கெட்) அதன் தாய் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். கடின முயற்சி, தன்னம்பிக்கை, திறன் ஆகியவை அதிகம் தேவைப்படுகின்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் ஏவு வாகனம் ஒரு முக்கிய பகுதி.

ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட.

இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக 4.5.1799 அன்று எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

சொடுக்கி >>> மாவீரன் திப்பு சுல்தான் வரலாறு -இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி <<< படிக்கவும்.

முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர்.

1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர்.

இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.

இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.

1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான்கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தைவடித்துள்ளான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது” – என்று பிரகடனப் படுத்துகிறார்.

நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்தகடிதத்தில், “என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்” - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.

பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரியதிட்டம் உருவானது. இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிடநம்மால் முடியும். அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ளஅபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.

தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும்,இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும்முடிவெடுத்தனர்.

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா – ராஜஸ்தான் - மகாராஷ்டிராமன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக – ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.

ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான்உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.

மாவீரரின் மதச்சார்பின்மை :

முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

பாடபுத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில்இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம்செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்…

இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.

ஒரு சமயத்தில் 200 க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன் கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தபோது முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார்.

ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிருஸ்துவ மதத்திற்கு மாறியபோது உலேமாக்கள் அவரைஅரண்மைனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஜாபர் மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விசயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார்.

தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.

சிப்பாய் புரட்சியில் :

ஆனால் மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.

இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின்பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது.)

டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது.

அதில் கைதான – கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ”எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்” என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ”சிப்பாய் கலகம்” என ஆங்கிலேயர்களாலும், ”முதல் இந்திய சுதந்திரப் போர்” என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியைஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர்பறிமுதல் செய்தனர்.

1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேறஅனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களைஎதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.

மாமன்னரின் சிறை வாழ்க்கை :

மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.

சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.

சிப்பாய்களின் இந்தச் செய்கையால் ஜாபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.

“இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.

சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

“எச்சரிக்கையாய் இருங்கள் இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று கெஞ்சினார்.

ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டது. காலித்தின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது.

சிறைச்சாலையில் ஒரு நாள்…

ஒரு நாள் காலை… காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.

ஹட்ஸன்: பகதுர்ஷா… நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.

அங்கே… பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு…

இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து…)

பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!

(கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு…

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன… நீர் வற்றி விட்டதா?

பகதுர்ஷா: ஹட்ஸன்… அரசர்கள் அழுவதில்லை! என்று பெருமிதத்துடன் கூற… (தலை குனிந்த வாறுவெளியேறுகிறான் ஹட்ஸன்)

அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்… உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.

ஒரு பிடி மண் :

சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது.

ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.

“என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்.” – என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.

தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம்செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.

சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.

1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.

அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம்.

ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார்.

போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்து சுதந்திர இந்தியாவை உருவாக்க அதிக கவனம் செலுத்தினர்.

ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் உப்புசத்தியாக்கிரஹங்கள் என்று அஹிம்சா வழியியிலான அனைத்துப் போராட்டங்களை நடத்திப்பார்த்தும் அவைகளுக்கு மதிப்பளிக்காத வெள்ளையர்கள் மாமன்னர் பகதூர்ஷாவின் ராணுவப் புரட்சியில் நிலை குலைந்தனர்.

பகதூர்ஷாவின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் :

மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார்.

பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,

“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே…ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.

பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

தொடரும் ......

REF: பனைக்குளம் தவ்ஹீத் ஜமாத்,veppamadu.site88.net,http://seyedibrahim.wordpress.com/

>>>>> PART 1. முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். - <<<<<


>>> PART 3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?.<<<<


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP