எல்.சி.டி. ( L.C.D T. V.) ‘டி.வி’ கள் விரைவாக நகரும் காட்சிகளை துல்லியமாகக் காட்டுவதில்லையா? அதை எப்படிப் பார்த்து வாங்குவது?
>> Tuesday, February 12, 2008
எல்.சி.டி. ‘டி.வி’கள் விரைவாக நகரும் காட்சிகளை துல்லியமாகக் காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்ட எல்.சி.டி. ‘டி.வி.’க்கள் சந்தையில் கிடைக்கிறதா? அதை எப்படிப் பார்த்து வாங்குவது?
எல்.சி.டி. ‘டி.வி’.க்கள் விரைந்து செல்லும் கார், கார்ட்டூன் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளை துல்லியமாகக் காட்டுவதில்லை... அந்தக் காட்சிகள் திரையில் விரைவாக நகரும்பொழுது கொஞ்சம் ‘பிளார்’ ஆகத் தெரிகிறது என்ற புகார் பரவலாக இருக்கிறது... இது உண்மைதான். அதற்குக் காரணம் அதன் தொழில்நுட்பத்தின் தன்மைதான்.
எல்.சி.டி. டி.வி.யின் திரையில் ஒவ்வொரு புள்ளியிலும் காட்சிகள் விரைவாகத் தோன்றி மறையும். அப்படித் தோன்றும்பொழுதும் மறையும்பொதுழும் எவ்வளவு வேகமாக அந்தச் செயல் நிகழ்கிறதோ அதற்கேற்றாற்போல் படத்தின் குவாலிட்டி சிறப்பாக அமையும்.
திரையின் ஒவ்வொரு புள்ளியிலும் காட்சிகள் மெதுவாகத் தோன்றி மெதுவாக மறைந்தால் முதலில் தோன்றிய இமேஜ் மறைவதற்குள் அடுத்த இமேஜ் தோன்றி மொத்தத்தில் படமே கலங்கலாகத் தோன்றும்.
இதைத்தான் எல்.சி.டி. டி.வி.யின் ரெஸ்பான்ஸ் டைம் என்று குறிப்பிடுவார்கள். டெக்னிக்கலாகச் சொல்வதென்றால், ‘Tr , Tf’ (TIME RISING; TIME FALLING) என்று சொல்வார்கள்
அந்த ரெஸ்பான்ஸ் டைம் இப்பொழுது மூன்று மில்லி செகண்ட்ஸில் இருந்து 24 மில்லி செகண்ட்ஸ் வரை பல விதங்களில் உள்ள எல்.சி.டி. டி.வி.க்கள் மார்க்கெட்டுக்கு வருகின்றன.
3 MSவ 4 MS 5 MS என்றெல்லாம் இந்த ரெஸ் பான்ஸ் டைம்மை விளம்பரப்படுத்தவும் செய்கிறார்கள். இந்த ரெஸ்பான்ஸ் டைம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு, அந்த டி.வி. விரைவாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்... உதாரணத்திற்கு 6 எம்.எஸ். டி.வி.யவிட 4 எம்.எஸ். ரெஸ்பான்ஸ் டைம் உள்ள டி.வி. நல்லது.
NANDRI TO: KUMUDAM.COM
மற்ற பதிவுகளை படிக்க: வாஞ்ஜுர்
2 comments:
நல்ல விளக்கம் அதுவே தமிழில் படிக்கும் போது தெளிவு பெருகிறது.
நம்மூர் படங்களில் இப்போதெல்லாம் சண்டைகாட்சிகளில் ஆட்கள் பறக்கிறார்களே,அதனால் சரியாக பார்க்கமுடியாமல் போகுமோ? :-)
ஒரு சந்தேகம்...
மின்சார செலவு பழைய டிவி யை விட குறைவாக இருக்குமா?
Post a Comment