டம்ளர் பாலின் விலை?.இன்று நாம் செய்யும் உதவிகள் நாளை நமக்கே உதவும். உண்மைச் சம்பவம்.
>> Sunday, February 17, 2008
வீடு வீடாய் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன் பள்ளி முடிந்ததும் அவன் செய்யும் வேலை அது. வெயில். பசி மயக்கம். கையில் ஒரே ஒரு டாலர் இருந்தது. யாரிடமாவது சாப்பாடு கேட்கலாம் என்று எண்ணி ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.
திறந்தவள் ஒரு சிறுமி 'சாப்பாடு கிடைக்குமா?' என்று கேட்பதற்கு பதில்' தண்ணீர் கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டான் அந்த சிறுவன்.
அவன் மிகக் களைப்பாய் இருப்பதைப் பார்த்த சிறுமி
உள்ளே சென்ற பெண் ஒரு டம்ளர் நிறைய குளிர்ந்த பாலை கொண்டு வந்து கொடுத்தாள். ஆசையாய் வாங்கிக் குடித்த சிறுவனுக்கு தாகமும் பசியும் அடங்கியது.
''இந்தப் பாலுக்கு நான் எவ்வளவு பணம் தரணும்'' கேட்டான் சிறுவன்.
''பிறருக்கு செய்யும் உதவிக்கு பணம் வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறாங்க.''
அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்லி, அவள் பெயரையும் தெரிந்துக் கொண்டு அங்கிருந்த கிளம்பினான் சிறுவன்.
வருடங்கள் கடந்தன.
மருத்துவமனையொன்றில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டாள் அமெரிக்காவின் மிகச் சிறந்த டாக்டர்களில் ஒருவரான ஹோவர்ட் கெல்லி வரவழைக்கப்பட்டார் பெயரையும் ஊரையும் பார்த்த உடனேயே அந்தப் பெண் யார் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தீவிர சிகிச்சையளித்து அந்தப் பெண்ணக் காப்பாற்றினார்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணின் சிகிச்சைகான தொகையை குறிப்பிட்டு டாக்டரின் கையெழுத்துக்காக அனுப்பினார்கள். அதற்கு அவர், 'தொகை ஏற்கனவே ஒரு முழு டம்ளர் பாலின் மூலம் கட்டப்பட்டு விட்டது. அதனால் பணம் கேட்க வேண்டாம்' என்று குறிப்பெழுதி அனுப்பினார் டாக்டர் ஹோவர்ட் கெல்லி
நீதி : இன்று நாம் செய்யும் உதவிகள் நாளை நமக்கே உதவும்.
THANKS: KUMAUDAM.COM.
*************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment