**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம்.

>> Tuesday, February 19, 2008

கட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம்.
இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.18-கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால் அதை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இஸ்லாமிய அமைப்பு கூட்டம்
டெல்லியில், நேற்று அகில இந்திய இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து பகிர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதுமிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.

நீண்ட விவாதத்திற்குப் பின் இக்கூட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் திருமணம் குறித்து ஒருமித்த அளவில் முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் இல்யாஸ் கூறியதாவது:-

செல்லாது
இஸ்லாமிய பெண்கள் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோரோ?, அல்லது வேறு யாருமோ ஒரு மணமகனை வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றாலும் அதை அவர் செல்லாது என்று அறிவிக்கலாம். பெண்ணின் விருப்பமில்லாமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது முழுக்க அநீதியாகும்.

வலுக்கட்டாயமாக நடத்தப்படும் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இஸ்லாமிய சட்டம், பெண்ணுக்கு தன் இஷ்டப்படி திருமணத்தை நடத்திக் கொள்ள உரிமை அளித்து இருக்கிறது.

பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் திருமணத்தின்போதோ, அல்லது அதற்குப் பின்போ கூட மணமகனை அவர் நிராகரிக்கவும் செய்யலாம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=394353&disdate=2/18/2008
********************
மற்ற பதிவுகளுக்கு:>> வாஞ்ஜுர்

1 comments:

Madhu March 27, 2008 at 1:53 PM  

Hi,

Now we can able to type in tamil and search in web, this is customzied Google search.
Once you start typing it appears in Tamil.

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

Thanks,
Yanthram.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP