**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, தடிப்பு . காசநோய், சிகிச்சை

>> Sunday, February 17, 2008

அலர்ஜி (Allergy) என்பது ஒவ்வாமை என்று பலகாலம் அறிவுலகில் பொருள்கொள்ளப்படுகிறது. நாமும் அந்தப் பொருளிலேயே இந்நோயைக் கையாள்வோம்.

நமது உடலுக்கு வெளியே உள்ள பொருள்கள் நமது உடலின் ஏதாவது ஒரு பகுதியை வந்தடையும் போது, நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இது பல நோய்க்குறிகளாக (Symptoms) வெளிப்படுகிறது. இதுவே அலர்ஜி என்று அறியப்படுகிறது. ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அலர்ஜியினை ஏற்படுத்திடும் பொருளில்தான் அலர்ஜி தன்மை உள்ளது என்று பலரும் நினைத்திடக் கூடும். இது தவறான கருத்து.

அலர்ஜி ஏற்படுத்திடும் அந்தக் குறிப்பிட்ட பொருளுக்குத்தான் நமது உடல் ஒவ்வாமை என்னும் அலர்ஜியினை உண்டாக்குகிறது என்பதுதான் உண்மை. அலர்ஜி என்னும் மருத்துவ நிகழ்விற்கு நமது உடலில் உள்ள குறைபாடுகள்தான் அடிப்படைக் காரணமாகும்.

பொதுவாக, அலர்ஜி என்பது எல்லா உறுப்புகளையும் பாதித்திடும் உடலின் பொதுவான ஒரு நோய் ஆகும். அலர்ஜி ஏற்பட்ட உறுப்புகளைச் சார்ந்து அதன் நோய்க்குறிகள் அமைந்திடும்.

நமது உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போன்று நோய் எதிர்ப்பு அமைப்புகள் என்னும் சிறப்பு அமைப்புகள் அமைந்துள்ளன. நிணநீர் சுரப்பிகள் (Lymphnode), கல்லீரல் (Liver), வெள்ளையணுக்கள் போன்றவை இதன் அங்கங்களாகும். உடலுக்கு ஒவ்வாத பொருள்களோ அல்லது அதிலிருந்து வரும் நுண்ணிய பகுதியோ உடலை அடைந்திடும்பொழுது, அவற்றை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு அமைப்புகள் (Inmmune System) முனைகின்றன.

அலர்ஜியை உண்டாக்கிடும் பொருளிலிருந்து இரசாயனப் பொருள்கள் சுரக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப்போராட நோய் எதிர்ப்பு அமைப்புகளின் சிறப்புத்தன்ம கொண்ட உயிர் இரசாயனங்களை (Bio chemical) உண்டாக்குகின்றன. இந்த இரண்டு நிலை இரசாயனங்களும் ஒன்றையொன்று எதிர்த்துப் போராடும் பொழுது உடலில் அலர்ஜி உண்டாக்கப்படுகிறது.
இந்த இரசாயனப் போராட்டம் உடலில் நிகழும் பகுதியைப் பொறுத்து நோய்க்குறிகள் வெளிப்படுகிறது. இந்த வகையில், கீழ்க்கண்ட அலர்ஜி தொடர்பான நோய்க்குறிகள் ஏற்படுத்தப்படுகிறது.

தோலில் அரிப்பு (Pruritus) மற்றும் தடிப்பு (Urticaria), தோலில் நீண்ட நாள் இருந்திடும் நீர்க்கசிவுடன் கூடிய புண்கள் (Eczematous Ulcers). வாந்தி, வயிற்றுப்போக்கு வயிற்றுவலி, மூக்கில் அடைப்பு, தும்மல், நீர்வடிப்பு, தொண்டையில் அரிப்பு, இருமல், இழுப்பு (ஆஸ்த்துமா), தலைவலி, ஜுரம் அலர்ஜி நோய்கள் பல இருந்திட்டாலும் சுவாச அலர்ஜி நோய் (Respiratory Allergic Disorders) இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.

இந்த நோய் நம்மில் பலபேருக்குக் காணப்படுகிறது. இந்த நோய் அதிக தொல்லைகளைத் தருகிறது. நோயாளியின் வாழ்நாளில் பலமணி நேரம் விழுங்கப்படுகிறது. பெரிய அளவிலான ஆய்வுகளும் சிகிச்சைகளும் தேவைப்படுகிறது. சிகிச்சைபெற, பெரும் பொருட்செலவும் பல மருந்துகளையும் சாப்பிட வேண்டியுள்ளது.

உளவியல் ரீதியாக நோயாளியினச் சோர்வடைந்திடச் (Mental Fatique) செய்கிறது. உயிருக்கு ஆபத்தான பலசூழ்நிலைகள் இழுப்பு ஏற்படும் நேரங்களில் ஏற்படுகிறது. பல நேரங்களில் அவசர மருத்துவ உதவிகளும், (Emergency Medical Help) உயர்வான மருத்துவ உபகரணங்களும் (Highly Sophisticated Instruments) தேவைப்படுகிறது.

இதற்காக சில பல மாத்திரைகளைச் சாப்பிட்டு, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அலர்ஜி நோயினைவிட அதிக ஆபத்தாக முடிந்திருக்கிறது.இத்தனை காரணங்களுக்காகவும் இந்த நோய் விவரிக்கப்படுகிறது.

*சுவாச அலர்ஜி நோய்

ஒவ்வொரு பொருள்களும் சுவாச வழியில் (Respiratory Tract) புகுந்திடும்பொழுது அலர்ஜி நோய் தொடங்குகிறது . இதன் விளைவாக சுவாசக்குழாயில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனை பல்வேறு உயிர் இரசாயனங்களும் இயோசினோஃபில் (Eosinophils) போன்ற செல்களும் நிகழ்த்கிறது.

இதன் ஒரு நிலையில் சுவாசக் குழாய்கள் சுருக்கமடைந்திடும் (Constriction). இது இருமலாகவும் இழுப்பாகவும் , நெஞ்சில் பாரமாகவும் (Chest Tightness), மூச்சுத்திணறலாகவும் (Dyspnoea) வெளிப்படும்.

இந்நோய்க்குறிகள் பெரும்பாலும் இரவு நேரங்களிலே ஏற்படக்கூடும். சில வேளைகளில் இந்நோயின் தன்மை மிக அதிகமாக இருந்திடுவதால் சுவாசச் செயல்பாடுகள் முற்றிலும் (Respiratory Arrest) நின்று போகக்கூடும். உடலுக்கு ஆக்ஸிஜன் மிகக்குறைவாகக் கிடைத்திடுவதால், இந்நோயாளிகள் மரணத்தைக்கூட அடையக்கூடும்.

பொதுவாக ஆஸ்த்துமா என்னும் அலர்ஜிநோய் பொதுமக்களில் 10% முதல் 20% அளவிற்கு ஏற்படுகிறது. இந்நோயாளிகளில் மிகப் பெரும்பாலோர் நோய்க்குறிகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. தற்போதைய ஆய்வுகளின்படி பொதுமக்களில் ஆஸ்த்துமா ஏற்படும் நிகழ்வின் விகித அளவு (Incidence Rate) மெல்ல மெல்ல அதிகரித்திடுகிறது.

மருத்துவ முன்னேற்றங்களும் (Medical Advances), சிகிச்சைகளும் ஆஸ்த்துமா நோயில் நல்ல முன்னேற்றங்கள் அடைந்தாலும் ஆஸ்த்துமாவினால் ஏற்படும் உயிர் ஆபத்துக்கள் (Mortality From Asthma)
மாற்றமடையவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.

*ஆஸ்த்துமாவை ஏற்படுத்திடும் காரணிகள்

கீழ்க்கண்டவகள் ஆஸ்த்துமாவை ஏற்படுத்திடும் காரணிகள் (Factors Inducing Asthma) ஆகும்.

1. குளிர்ந்த காற்று .
2. புகையிலைப் புகை
3. தூசிகள்
4. கடுமையான அமிலங்களின் புகை (Strong Acid Fumes)
5. சுவாசக் குழாயில் வைரஸ் கிருமிகள் நுழைவு(Respiratory Tract Viral Infarction)
6. உணர்ச்சிகரமான மனச்சூழல்கள்
7. கடுமையான உடல் உழைப்பு
8. ஆஸ்பிரின் (Aspirin) மருந்து
9. இன்டிரால் (Inderal) மருந்து
10. பெயின்ட் வாசனை போன்றவைகள் இதன் காரணங்களாகும்.

*ஆஸ்த்துமாவின் வகைகள்

ஆஸ்த்துமா ஏற்பட்டு சிலகாலம் ஏதும் தொந்தரவு இருந்திடாது. மூச்சுத்திணறலும் (Dyspnoea), இழுப்பும் (wheezing) எந்த நேரத்திலும் ஏற்படலாம். அவை வெகுவேகமாக வளர்ச்சியடைந்திடக் (Rapid Development) கூடும். இது அளவில் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்திடும்.

மூச்சுத்திணறல் ஏற்படும் காலம் சில நிமிடங்கள் அல்ல சில நாட்கள் தொடரக்கூடும். இன்னும் சிலரில் சில வாரங்கள் கூட ஆகலாம். இதன் ஒரு வகை குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறது. இவர்களில் பல்வேறு பொருள்களுக்கு அலர்ஜி இருந்திடக்கூடும்.

தூசி, பறவை இறகு (Feathers), பூச்சிகளின் மகரந்தங்கள் (Pollens) போன்றவைகள் அவற்றில் சில, சாப்பாட்டில் மீன், முட்டை, பால், கோதுமை போன்றவகளும் அலர்ஜியினை ஏற்படுத்தக்கூடும்.

இதன் இரண்டாவது வகை குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதில் வருவது. இந்த வகை நோயாளிகளில் அலர்ஜியை உண்டாக்கிட வெளிப்புறக் காரணிகள் (Extremic Factors) ஏதும் இருப்பதில்லை. இக்குறைபாடுகள், நோயாளியின் உடலுக்குள்ளே அமைந்திடுவதால், இது உள்ளுர ஆஸ்த்துமா (Intrinsic Ashma) எனப்படும்.

ஆஸ்த்துமாவின் இன்னொரு வகை மூச்சுத்திணறல் தொடர்ந்து ஏற்படும். சுவாச உறுப்புகள் (Respiratory Organs) முழுமயான அளவில் இயங்கிக்கொண்டிருக்கும். சளி இல்லாத இருமல் (Dry Cough) ஏற்படும். நாடித்துடிப்பு மிக அதிகமாக இருந்திடும் (Tachycardia). வியர்வை ஏற்படக்கூடும்.

உடல் நீல நிறத்தினை (Cyanosis) அடைந்திடவும் கூடும். மற்றொரு ஆஸ்த்துமா வகை மூச்சுத்திணறல் நீண்ட நேரம் இருந்திடும். நெஞ்சில் பாரம் ஏற்படும். இருமல் ஏற்படும். இழுப்பு ஏற்படும். இடையிடையே இருமலும் (Intermittant Cough) இழுப்பும் அதிகரித்திடும்.

இந்த இரண்டு நோய்க்குறிகளும் இரவு நேரத்தில் அதிக அளவு காணப்படும். இந்த வகை நோய் உரிய சிகிச்சை செய்திடாமல் நிற்பதில்லை. இது தொடர்ந்து நீடித்தால் மிக அதிகமான மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். இத்துடன் இருமலும் அதிகரித்திடக் கூடும். சளியும் ஏற்படக்கூடும்.

*ஆஸ்த்துமாவும் இதயமும்

ஆஸ்த்துமா இதயத்தையும் எளிதாக பாதிக்கிறது. இந்நோயில் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகவே (Less Oxygen) கிடக்கிறது. இரத்தத்திலும் ஆக்ஸிஜன் குறைவாகவே இருந்திருக்கிறது. இது இதயத்தின் பணிச்சுமையினை (Work load of Heart)
அதிகப்படுத்கிறது. இதன் மூலம் இதயம் அதிக அளவிற்குத் துடித்திட வேண்டியது அவசியமாகிறது.

ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுவது சுவாச தமனியின் அழுத்தம் உயர்வதில் (Pulmonary Arterial Hypertension) முடிந்திடுகிறது. இதனை அடுத்து வலதுபக்க இதய அறைகளின் (Heart Chambers)
அழுத்த நிலைகளும் உயர்வடைகிறது.

வலது இதய அறைகளின் பணிச்சுமை அதிகரித்திடுகிறது. ஒருநிலையில் கார்பல்மோனல் என்னும் வலது பெருவறை செயலிழப்பு ஏற்படும்.

சுவாச தமனியின் உயர்ந்த அழுத்தம் நுரையீரல் மண்டலத்தின் அழுத்த நிலைகளை அதிகரித்திடுகிறது. இதன் ஒரு நிலையில் இதயத்தின் இடது பக்க அறைகளில் அழுத்த உயர்வில் முடியும். இடது பக்க இதயமும் ஃபெயிலியர் என்னும் நிலையினை அடைந்திடும்.

*அலர்ஜியும் மனமும்

சிலருக்கு பரம்பரயாக அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு கோடைகாலத்திலும் சிலருக்கு குளிர்காலத்திலும் ஏற்படலாம்.

அலர்ஜி என்பது முழுமையாக உடல்சார்ந்த வியாதி என்று சொல்வதற்கில்ல. இதில் பகுதியளவு மனதின் வெளிப்பாடுகளும் இந்நோயினைப் பாதிக்கிறது.

அலர்ஜிநோய் உள்ளவர்களில் மனக் குறைபாடுகளுடன் (Mental of Abberation) இருந்திட்டால் அவர்கள் அலர்ஜி நோய் வழக்கத்தைவிட கடுமையாக வெளிப்படுகிறது. இத்தகைய நோயாளிகளில் அலர்ஜி வெளிப்பாடு (Manifestation) வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே ஏற்படுகிறது. இத்தகைய நோயாளிகளில் சிகிச்சைக்குப் பிறகு நேரதாமதமாகவே கட்டுப்படுகிறது.

இத்தகைய நோயாளிகளில் அலர்ஜி நோயுடன் நரம்புகள் சார் (Neurological Signs) நோய்க்குறிகளும் அவசியமாகிறது. வழக்கமான அலர்ஜி சிகிச்சையுடன் இதனையும் சிகிச்சை செய்யப்படுதல் அவசியமாகிறது.

மனச்சுமையும் (Mental Stress), பதட்டமும் Palpitation) தற்போதைய வாழ்வுமுறை அலர்ஜிநோய் பெருமளவில் ஏற்படும் வாய்ப்பினை அதிகரித்திடுகிறது. குழந்தைகளிலும் மனக்குறைகள் பலவும் அலர்ஜி ஆஸ்த்துமா போன்று வெளிப்படக்கூடும்.

*ஆஸ்த்துமாவும் அமிலநிலையும்

அலர்ஜியின் காரணமாக உடலின் திசுவில் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு மிகுந்திருக்கும். இது அசிடோசிஸ் என்னும் உடல் திரவங்களில் அமில நிலை உயர்வினைக் குறைத்திடும். அசிடோசிஸ் நிலையிலும் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆஸ்த்துமா கட்டுப்படுத்தப்பட்ட பிறகும் மூச்சுத்திணறல் தொடரக்கூடும். பார்வைக்கு இ ஆஸ்த்துமா நோய்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்திடவில்லை என்று தோன்றக்கூடும்.

இதற்காக அலர்ஜி சிகிச்சையினை தொடர்ந்து மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்ள நேரிடும். இதன் விளைவாக இம்மருந்துகளின் பக்க விளைவுகள் பலவும் ஏற்படக்கூடும்.

*ஆஸ்த்துமாவும் காசநோயும்

ஒருவருக்கு ஏற்படும் காசநோயும் அலர்ஜி நோய் போன்று தோற்றமளித்திடும். இந்நோயாளிகள் தமக்கிருக்கும் காசநோயை உணர்ந்திடாமல் ஆஸ்த்துமா என்று சிகிச்சைபெற்றுக் கொண்டிருப்பார்கள். அலர்ஜி நோய்களுக்காக இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கக்கூடும். ஸ்டீராய்டு மருந்துகள் உண்மையில் காசநோயின் விளைவுகளை (Complications) அதிகப்படுத்திடும்.

நோயாளிகள் தனக்கு ஏற்பட்டிருக்கும் மூச்சுத்திணறலுக்குக் காரணம் காசநோய்தான் என்று சொல்லுவதைவிட, ஆஸ்த்மாதான் காரணம் என்று மருத்துவர் சொன்னால், அவர்கள் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வகை நோயாளிக்கு காசநோய் இருக்கிறது என்று மருத்துவர் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்ல. இவ்வகை நோயாளிகள் மருத்துவர் ஒருவரிடம் தொடங்கப்பட்ட காசநோய் சிகிச்சையினை விரைவில் நிறுத்திவிடக்கூடும். அல்லது அவர் நம்புகின்ற நோயினைச் சொல்லி சிகிச்சை செய்திடும் மருத்துவரை அணுகக்கூடும்.

*ஆஸ்த்துமா நோயின் ஆபத்தான சூழ்நிலைகள்

1. நாடித்துடிப்பு (Pulse Rate) ஒரு நிமிட நேரத்தில் 120 என்னும் அளவிற்குமேல் இருந்திடுதல் (Tachycandia).
2. சுவாசம்(Respiration) 1 நிமிட நேரத்திற்கு 26 என்ற அளவிற்கு மேல் இருந்திடுதல்.
3. ஒரே மூச்சில் ஒரு வார்த்தைக்குமேல் பேசிட இயலாத நில.
4. உடல் நீல நிறம்.
5. மிகுதியான களப்பு.
6. குழப்பமான மனநில (Confusion State).
7. நிதானம் குறையத் தொடங்குதல் (Blutting Consciousness) .
8. நாடித்துடிப்பு மிகக் குறைவாக இருந்திடுதல் (Bradycardia).
9. உட்சுவாசத்தின் பொழுது விரிவடைந்திடும்.
10. மார்பின் அளவு குறைவாக இருந்திடுதல்.
11) மார்பில் காற்று உள்ளே புகுந்து வெளியே வரும் ஒலி ஏதும் கேட்டிடாத நிலை.
12. இரத்த அழுத்தம் மிகக்குறைந்த நிலை போன்றவகள் ஆஸ்த்துமா நோயின் ஆபத்தான அறிகுறியாகும். அவற்றிக்கான சிகிச்சையின் தீவிரத்தை அதிகப்படுத்திட வேண்டும்.

*அலர்ஜி நோயில் ஆய்வுகள்

அலர்ஜி நோயில் கீழ்க்கண்ட ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

1. மார்பு எக்ஸ்_ரே .
2. பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட் எனப்படும் சுவாச மண்டல செயல்பாடுகள் பற்றிய ஆய்வு.
3. இரத்தத்தில் வாயுக்களின் அளவு அதிகப்படுதல்.
4. ஹப்பர்சென்சிட்டிவிட்டி என்னும் தோல் ஆய்வு.

இதில் அலர்ஜியை உண்டாக்கியதாக சந்தேகிக்கப்படும் பொருள்களில் சிறிதளவு சாரம் தோலுக்கடியில் (Subcutaneous) அளிக்கப்படும். சில நிமிடங்களில் தோலில் வெளுப்பும் (Skin pale), தடிப்பும் (Uricaria) ஏற்படும். இந்த ஆய்வில் பல்வேறு அலர்ஜி ஏற்படுத்திடும் பொருள்களின் கூட்டுக்கலவை (Mixture) வழங்கப்படுவதால் பலனில்லை.

இந்த ஆய்வின் முடிவுகள் (Investigation Reports)
எல்லாவகை ஆஸ்த்துமா நோயாளிக்கும் ஒரே மாதிரியாக இருந்திடுவதால், அவற்றைத் தனித்தனியே கண்டறிவதில் இந்த ஆய்வு உதவிகரமாக இருப்பதில்லை.

*ஆஸ்த்துமா அலர்ஜி & சிகிச்சை

தியானம் (Meditations) போன்ற மனப்பயிற்சிகள் இந்நோய் சிகிச்சைக்கு உதவியாக இருந்திடுகிறது. அதிகச் சுமையும் பதட்டமும் இல்லாமல் எளியமுறை வாழ்வுமுறை இந்நோயின் தன்மையில் வெகுவாகக் குறைந்திடுகிறது.

அலர்ஜிநோய் ஏற்பட்ட உடன் அதற்கான சிகிச்சயினை எடுத்துக் கொள்ளுதல் நன்று. இதனால் சிக்கலான மருத்துவச் சூழல்கள் தடுக்கப்படும். புகைபிடித்தல் நுரையீரலைப் பாதித்திடும். ஆகையால் சுவாச உறுப்பில் ஏற்படும் அலர்ஜிநோயின் தன்மை

*மிக அதிகரித்திடும். சுவாச அலர்ஜி

உள்ளவர்களில் சிறிய அளவு மது முதலில் மூச்சுத்திணறலைக் குறைத்திடலாம். ஆனாலும் தொடர்ந்து மது அருந்துவது வேறு வியாதிகளில் முடிந்திடக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி இதய நோய்களும் சுவாச அலர்ஜி போன்ற தோற்றத்தைத் தரக்கூடும்.

சுவாச அலர்ஜி உள்ளவர்களில் இதய நோய் (Heart Disease) ஏற்படலாம். இதுபோல இதய நோய் உள்ளவர்களில் சுவாச அலர்ஜியும் ஏற்படலாம். அல்லது இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறு அளவில் இருந்திடலாம். இந்த இரண்டு நோயாளிகளின் சிகிச்சையும் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதய நோயாளிக்கு வழங்கப்படும் அலர்ஜி சிகிச்சைக்கான மருந்துகள் இதய நோயினை அதிகரித்திடக்கூடும். இதன் பொருட்டு சிகிச்சைபெறும் நோயாளியும், சிகிச்சைதரும் மருத்துவரும் மிக கவனமாக இருந்திடுதல் அவசியம்.

*அலர்ஜியை குறைத்திடும் சிகிச்சை முறை

இதில் அலர்ஜியை உண்டாக்கிடும் பொருள்களின் சாரம் ‹ (Extract) தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது. அடுத்த நிலையில் செலுத்தப்படும் அலர்ஜிப் பொருட்களின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.

இவற்றின் விளைவாக அலர்ஜி ஏற்படும் நோய் நிகழ்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த சிகிச்சை மிகச் சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலன் தருவதில்லை. அத்துடன் இந்தச் சிகிச்சயின் பொழுது மிக அதிகமான அலர்ஜி நிலை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படக்கூடும்.

இதற்காக, இந்தச் சிகிச்சையின்பொழுது உயிர்காத்திடும் அவசரநிலை சிகிச்சை உபகரணங்களும் சிகிச்சை அளிப்போரும் தயார்நிலையில் இருந்திடுதல் அவசியம்.

இத்தகைய சிகிச்சை முறைகள் பல மேலைநாடுகளில் கைவிடப்பட்டதுடன் (Abanded சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன (Prohibited).

வரும் காலங்களில் இந்த முறை சிகிச்சையில் மேலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுவதுடன் அவை அலர்ஜி சிகிச்சையில் நோயாளிகளுக்குச் சிறந்த பலனைத் தரக்கூடும் என்று நம்புவோம்.

ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடும் மருத்துவச் சூழல்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் ஸ்டீராய்டு பயன்படுத்திடலாம்.

1. அலர்ஜி ஏற்பட்ட பிறகு படிப்படியாக அதிகரித்திடும் மூச்சுத்திணறல் (Dyspnoea)
2. PEP (Peak Expiratory) எனப்படும் சுவாச செயல்பாடுகளின் ஆய்வு முடிவுகள் நாளுக்குநாள் சீர்கேடு அடைந்திடும் நிலை.
3. இரவு நேரத்தில் தொடங்கிடும் மூச்சுத்திணறல் தூக்கத்தைக் குறைத்திடும் நிலை.
4. அதிகால வேளையில் தொடங்கிடும் மூச்சுத்திணறல் நண்பகல் வேளை வரை தொடரும் நிலை.
5. மூச்சுத்திணறலுக்காக ஸ்பிரே மருந்தினைப் பயன்படுத்துபவர்களில் தற்பொழுது அதன் பயன்திறன் Efficacy) படிப்படியாக குறைந்திடும் நிலை.
6. ஆஸ்த்துமா தவிர வேறு நோய்கள் இந்நோயாளிக்கு இருந்திடும்போது, மூச்சுத்திணறல் அந்நோய்களில் பாதிப்புகளை ஏற்படுத்திடும் வாய்ப்பு உள்ள பொழுது.
7. எல்லா வகையான மருந்துகளையும் பல முறை பயன்படுத்திய பிறகும் பலன் இல்லாத நிலை.
8. இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கிடும் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படியும் (Medical Advice )

மேற்கண்ட நிலைகளில் ஆஸ்த்துமா நோய்களுக்காக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடலாம்.

இருப்பினும் இந்தச் சூழல்களும் ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடும் முயற்சியும் தற்காலிகமாகவே இருந்திடுதல் அவசியம்.

*ஆஸ்த்துமாவில் சுவாச இயந்திரங்களப் பயன்படுத்திடும் நிலை

ஆஸ்த்துமா நோயில் செயற்கை சுவாச இயந்திரங்களைப் பயன்படுத்திடும் நிலை
(Use of Artificial Respirator in Asthma) கீழ்க்கண்ட சூழல்களில் ஏற்படுகிறது.

1. ஆஸ்த்துமா நோயாளிகளின் கோமாநிலை.
2. ரெஸ்பிரேட்டரி அரஸ்ட் (Respiratory Arrest) என்னும் சுவாச செயல்பாடுகள் (Respiratory function) நின்று போகும் நிலை.
3. நோயாளிகள் மூச்சுத்திணறலினால் மிகுந்த சோர்வினை அடந்திடும் நிலை.
4. நோயாளிகள் குழப்பமடைந்திடும் மனநிலை.
5. நோயாளிகள் தூக்கமயக்கத்தை (Drowsiness) அடைந்திடும் நிலை.
6. இரத்த ஆய்வில் ஆக்ஸிஜன் குறைந்திடும் (Hypoxia) நிலை
7. இரத்த ஆய்வில் கார்பன்_டை_ஆக்ஸைடு மிகுந்திடும் நிலை (Hypercarbia).
8. உடல் திரவங்களில் ஜீபி என்னும் அமில நிலை உயர்ந்திருத்தல் (Acidosis).

மேற்கண்ட சூழ்நிலைகளில் வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச இயந்திரத்தைப் பயன்படுத்திடலாம்.

நூலின் பெயர் : அலர்ஜி நோய் நன்றி : வி.ஜி.பி. பதிப்பகம்,
115&ஏ நாடிமுத்துநகர், பட்டுக்கோட்டை 614602. விலை : 30/
NANDRI: KUMUDAM HEALTH.
*******************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP