கண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம்’ என்று சொல்லும் கண் டாக்டர்கள் பலர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களே ஏன்?
>> Sunday, February 24, 2008
ஆபரேஷன் செய்து கண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம்’ என்று சொல்லும் கண் டாக்டர்கள் பலர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களே ஏன்?
அப்பல்லோ மருத்துவமனையின் கண்நோய் நிபுணர் டாக்டர் விஜய் ஜெய்சங்கர்...
‘‘நியாயமான சந்தேகம்தான்... ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பான்னு கேட்காமல் கேட்டிருக்கிறார்... எதுவானாலும் உண்மை இதுதான்...
‘லாஸிக் லேசர்’ என்று சொல்லப்படும் நவீன சிகிச்சை மூலம் பார்வைக் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன... இந்த சிகிச்சைக்குப்பின் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. தூரப்பார்வை இருப்பதால் கண்ணாடி அணிபவர்களுக்கு அதைத் தவிர்க்க இது நல்ல சிகிச்சை முறை. _1 முதல் _21 வரை உள்ள பவரை முற்றிலும் குறைத்துவிடலாம்.
சோடாபுட்டி மாதிரி கண்ணாடி அணிந்து மையோப்பியாவை நோக்கி மரணித்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு இந்த சிகிச்சை மூலம் சுலபமாக உயிர் கொடுத்துவிடலாம். ஆனால், கண்ணில் உள்ள ரெட்டினா மற்றும் கார்னியா இந்தச் சிகிச்சையத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், கண் டாக்டராக அவர் இருந்தாலும் காலம் பூராவும் கண்ணாடிதான்.
நாற்பது வயதுக்குமேல் வரும் வெள்ளெழுத்துப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை லேசர் சிகிச்சை எல்லாம் ஒத்துவராது... நீங்கள் பார்த்த டாக்டர்கள் நாற்பதைத் தாண்டியவர்களாக இருந்திருந்தால் அவர்கள் கண்ணாடி போட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.’’
டாக்டரோட பிரச்னை நமக்கெதுக்குங்க... நம்ம பிரச்னைக்கு டாக்டரோட தீர்வு நல்லதான்னு மட்டும் பார்க்கலாமே!
Nandri: kumudam .. மற்ற பதிவுகளை படிக்க: வாஞ்ஜுர்
1 comments:
இதற்கு சம்பந்தப்பட்ட எனது இப்பதிவைப் பார்க்கவும். http://dondu.blogspot.com/2008/01/1-1-0.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment