நொறுங்கத் தின்றவனுக்கு நோயில்லை’ என்ற சொலவடை உண்மையா?
>> Sunday, February 24, 2008
அனுபவத்தால் முன்மொழியப்பட்ட விஞ்ஞானத்தால் வழி மொழியப்பட்ட உண்மை இது.
ஒரு மனிதனின் செரிமானம் உமிழ் நீரில் ஆரம்பிக்கிறது. மென்று தின்பவனுக்கு நிறைய உமிழ் நீர் சுரக்கிறது. உமிழ் நீரின் ‘டயலின்’ என்ற என்சம் ஜீரணத்தை நாவிலேயே தொடங்கி வைக்கிறது.
செரித்த உணவு _ சக்தி; செரிக்காத சேர்மானம் _ நோய். நொறுங்கத்தின்றவனுக்கு நோயில்லை என்பது சொலவடை மட்டுமல்ல _ உண்மையின் அளபெடை
நோயை வென்றாக வேண்டுமென்றால் நன்றாக நீங்கள் மென்றாக வேண்டும்.
துருக்கிப் பழமொழி ஒன்று:
‘‘தேவைக்கு அதிகமாய்த் தின்கிறவன் தன் சவக்குழியைத் தன் பற்களாலேயே தோண்டிக் கொள்கிறான்’’.
Nandri: kumudam மற்ற பதிவுகளை படிக்க: வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment