மாரடைப்பு வருமா? உங்கள் விரல்கள் மூலம் உங்கள் வருங்கால நோய்களை அறியலாம்.
>> Monday, February 11, 2008
ஆடி ஓடி செயலாக இருப்பவர், அறுபது வயதைக் கடந்த பின் அடிக்கடி இடுப்பைப் பிடித்துக் கொள்வாரா?
‘நடக்கவே முடியவில்லை, ஒரே மூட்டு வலி’ என்று புலம்புவாரா? மாரடைப்பு வருமா? கையைப் பார்த்தால் சொல்லி விடலாம்.
சோதிடம் என்று நினக்க வேண்டாம். இது உடற்கூறு இயல் அடிப்படையிலான ஆய்வின் முடிவு. பெண்ணை விட ஆணுக்கு முரட்டுத்தனமான உடல். அங்கங்களைப் பார்த்தாலே மென்மையும் உறுதியுமாக வேறுபாடு தெரியும்.
கையை எடுத்க் கொண்டால், ஆணுக்கு ஆட்காட்டி விரலை விட மோதிர விரலின் நீளம் அதிகம். பெண்ணுக்கு இந்த இரு விரல்களும் சமநீளத்தில் இருக்கும். சில பெண்களுக்கு மோதிர விரல், சுட்டு விரலை விட நீளமாக அமைந்திருக்கலாம். அதாவது, ஆண்களின் விரல்களைப் போல. இந்த பெண்களுக்கு முதுமையில் மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மூட்டுவலி நோயாளிகள் மற்றும் பாதிப்பு இல்லாதவர்கள் என ஆண்களும் பெண்களுமாக சுமார் 2,000 பேரைக் கொண்டு ஓர் ஆய்வை நடத்தியது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சரிபாதிப் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
இவர்களுக்கு இரு கைகளும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வெளிப்பார்வைக்கு தோற்றம், மற்றும் விரல் எலும்பு நீளத்தின் அடிப்படையில் ஒப்பீடு செய்யப்பட்டு இரண்டாவது மற்றும் நான்காவது விரல்களுக்கிடையேயான நீள விகிதம் கணக்கிடப்பட்டது. இதனோடு, இடுப்பு மற்றும் மூட்டு எக்ஸ்ரேக்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் முக்கியமாக தெரிய வந்தது என்னவென்றால், ஆண்களுக்குரிய விரல்நீள (சுட்டு விரல்: மோதிர விரல்) விகிதத்தைக் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் மூட்டுவலி பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வயது, பாலினம், உடல்_எடை குறியீட்டு எண் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்படுதல், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மூட்டுவலிக்கான முக்கிய காரணி விரல் நீள விகிதம் என்பது விஞ்ஞானிகளின் முடிவு.
மேலும், விரல்களின் நுனிப்பகுதியில் உள்ள சிறிய மூட்டிலிருந்து அளவிடும் போது, சுட்டு விரலின் நீளம் மிகக் குறைவாக இருந்தால், இரு பாலருக்குமே முதுமையில் இடுப்பு மூட்டு பிரச்சனை ஏற்படக் கூடும் எனவும் தெரிய வந்துள்ளது.
சிசுவான கருப்பயில் வளரும் போது எந்த அளவு ஆண் தன்மைக்குரிய டெஸ்டோஸ்டீரோன் ஊக்கநீரின் தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதற்கும் விரல் நீள விகிதத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஒருவரின் குணாதிசயத்தையும் விரல் நீள விகிதத்தைக் கொண்டு கணிக்க முடியும்.
மோதிர விரலை விட சுட்டுவிரல் மிகவும் குட்டையாக இருப்பது, மன அழுத்தம் மற்றும் ஓரினச் சேர்க்கை நாட்டத்தைக் குறிக்கும் என்கிறது லிவர்பூல் பல்கலக்கழகம் நடத்திய ஆய்வின்முடிவு. இது ஆண்_பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.
கனடா நாட்டு அல்பர்டா பல்கலக் கழகத்திலும் உளவியல் பிரிவு சார்பில் 300 பேரைக் கொண்டு விரல் நீள விகிதம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மோதிர விரலை ஒப்பிடும் போது சுட்டு விரல் நீளம் மிகக் குறைவாக உள்ள ஆண்கள் உடல்ரீதியான செயல்பாடுகளில் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்கள் என்று இதில் தெரியவந்ள்ளது.
மற்றொரு ஆய்வில், ஆண்களுக்கு மோதிர விரல் வழக்கத்திற்கு மாறாக குட்டையாக இருந்தால் முதுமையின் ஆரம்பத்திலேயே மாரடப்பு அபாயம் வரக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆணுக்கு மோதிர விரல் மிக நீளமாக இருப்பம் பெண்ணுக்கு சுட்டு விரல் அதிக நீளத்தில் இருப்பதும் அவர்கள் குழந்தைதகளைப் பெறுவதில் சாதனை படைக்க வல்லவர்கள் என்பதற்கான அடையாளம் என்கிற மற்றொரு ஆய்வு.
விரல் நீள விகிதம் குறித்து மத்திய லங்காஷயர் பல்கலக்கழக உளவியல் பிரிவு நடத்திய ஆய்வில் ஒரு வேடிக்கையான உண்மை தெரியவந்ள்ளது.
கருப்பையில் பெண் சிசு அதிக அளவில் டெஸ்டோஸ்டீரோன் தாக்கத்திற்கு உள்ளானால் ஆண்களுக்கு இருப்பதைப் போலவே விரல்களின் நீளம் அமையக்கூடும்.
மற்ற பெண்களும் ஒப்பிடும்போது, இப் பெண்கள் தொலை பேசியில் பேசுகையில், எதிர்முனையில் எடக்கு மடக்கான கேள்விகள் வந்தால் ரொம்பவும் அதிகமாகவே எரிச்சல்படுவார்களாம். சுகன்
NANDRI TO : "KUMUDAM HEALTH"
0 comments:
Post a Comment