அடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண்டும்.
>> Sunday, February 17, 2008
தன் முன்னால் வந்து நின்ற ஓநாயை விரோதமாகப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்ற முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ''பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்'' என்றது.
''என்ன? நான் அழகா?''
''ஆமா. நீ அழகுதான். ஆனா, அந்த முள்ளு முள்ளா இருக்கிறதான் உன் அழகைக் கெடுக்குது'' என்றது ஓநாய்.
''அப்படியா, ஆனா அதானே என்னைப் பாகாக்குது.''
''உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாய்டுவே. யாருக்கும் உன்னக் கொல்லணும்னு மனசே வராது.''
ஓநாயின் வார்த்தைகளில் மயங்கிய முள்ளம் பன்றி. தன் முட்களையெல்லாம் வெட்டிப் போட்டது. ஓநாய் முன் வந்து நின்றது.
''இப்போ நான் இன்னும் அழகாயிருக்கேனா?'' என்று கேட்டது.
''அழகாய் மட்டுமில்லை. அடிச்சு சாப்பிடறதுக்கு வசதியாவும் இருக்கு'' என்று, முள்ளம்பன்றி மேல் பாய்ந்தது ஓநாய்.
நீதி: அடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண்டும்.
NANDRI: KUMUDAM .COM
*******************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment