வீடு கட்ட `சிமென்ட் தேர்ந்தெடுப்பது எப்படி?
>> Wednesday, February 13, 2008
வீடுகள் கட்டுமானத்திற்குப் பயன்படும் சிமென்ட் பல வகைகளில் நம் நாட்டில் கிடைக்கிறது.
சாதாரண போர்ட் லாண்ட் சிமென்ட் கான்கிரீட் கட்டு மானங்களில் பயன்படுவது.போர்ட்லாண்ட் போகலோனா சிமென்ட்: இது மலிவானது.
காரணம், எரிசாம்பல் பயன் படுத்தப்படுகிறது; எரிந்த களிமண், நிலக்கரிக் கழிவு போன்றவை பயன்படுத்தப் பட்டுத் தயாரிக்கப்படுகிறது.
விரிசல் ஏற்படாமல் தடுக்கும் தன்மையுள்ள சிமென்ட்.போர்ட்லாண்ட் பிளாஸ்ட்ஃ பர்னேஸ் சிமென்ட்: பெரிய அணைகள் போன்ற பெரும் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுவது.
எண்ணெய்க் கிணறு சிமென்ட்: நிலக்கரி எரிந்தபின் மீதமாகும் இறுகிய கரிய ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படுவது.
ஆர்.எச்.போர்ட்லாண்ட் சிமென்ட்: சாதாரண போர்ட்லாண்ட் சிமென்டைவிட மென்மை யாக இருக்கும்; இறுகும் போது வலு கூடுதலானது.
வாட்டர் புரூப் சிமென்ட்: சாதாரண போர்ட்லாண்ட் சிமென்டுடன் சுண்ணாம்பு கலந்தது. நீர்க்கழிவு ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
வெள்ளைச் சிமென்ட்: சாதாரண போர்ட்லாண்ட் சிமென்ட்டைப் போலவே, ஆனால், நிலக்கரி எரிந்தபின் இறுகிய கரிய ஓடுகளையும் எரி எண்ணெயும், இரும்பு ஆக்சைடும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் வெண்மை கூடுதலாகிறது. சாதாரண சிமென்ட்டைவிடவும் விலை கூடுதலானது.
சாதாரண போர்ட்லாண்ட் சிமென்ட்களில் 33,43,53 எனத் தரம் உள்ளது. எல்லா விதமான சாதாரண கட்டுமானப் பணிகளுக்கும் பழுதுபார்க்கும் பணிகளுக்கும் பயன் படுத்தக் கூடியது.
பிளன்டட் சிமென்ட்: கலவை சிமென்ட். நிலக்கரி எரிந்த ஓடு, ஜிப்சம் போன்றவற்றை அரைத்துத் தயாரிக்கப்படுவது.
போர்ட்லாண்ட்போகலோனா சிமென்ட்: நிலக்கரி எரிந்த ஓடு, ஜிப்சம், எரி சாம்பல், சுட்ட களிமண் போன்றவை கலந்து தயாரிக்கப்படுவது.
இதுபோன்ற பல வகை சிமென்ட்கள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. எந்த வேலைக்கு எதைப் பயன் படுத்த வேண்டும் என்கிற அளவீடும் உண்டு.
சாதாரண போர்ட் லாண்டு சிமென்ட்டும், போர்ட்லாண்ட் போகலோனா சிமென்ட்டும் சாதாரணமாகக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். கான்க்ரீட் பணிகளில் நீடித்துப் பயன்தரக் கூடியவை.
கந்தகத் தன்மை கொண்ட மண், நீர் உள்ள பகுதிகளில் கட்டுமானத்திற்கு சூப்பர் சல்பேட் சிமென்ட் பயன்படுத்த வேண்டும்.
சாதாரணக் கட்டுமானப் பணிகளுக்கு 33 தரம் உள்ள சிமென்ட் பயன்படுத்தலாம். முன்னதாக வடிவமைக்க வேண்டிய கான்க்ரீட் கட்டுமானங்களுக்கு 43 தரம் உள்ள சிமென்ட் உபயோகிக்க வேண்டும்.
பாலங்கள், மேம்பாலங் கள் போன்ற பெரும் கட்டு மானங்களுக்கும் மிக உயரமான கட்டங்களுக்கும் 53 தரம் உள்ள சிமென்ட் பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை 53 தரம் உள்ள சிமென்ட்டைச் சாதாரண வீடுகள் கட்டப் பயன் படுத்தலாம் என்று எண்ணுவது தவறு.
20 கிரேடு சிமென்ட்டே இவற்றுக்குப் போதுமானது என்பதில் 53 கிரேடு தேவையற்றது.-
பேரா. ஏ.ஆர். சாந்தகுமார், அய்.அய்.டி., சென்னைதரவு: `இந்தியன் எக்ஸ்பிரஸ் NANDRI TO : VIDUTHALAI.COM
------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
இந்த மாதிரி தரம் பார்த்து வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு கஷ்டம் தான்.இந்த தொந்தரவு வேண்டாம் என்று தான் RMC (Ready Mix Concrete) வந்துள்ளது.வீட்டு வாசப்படிக்கே வந்துவிடுகிறது.
குறைந்த பட்ச ஆர்டர் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பொதுப்பணித்துறையில் இருந்த போது
OPC
PPC
மட்டுமே வழக்கில் இருந்தது.
Post a Comment