இரவில் பால் சாப்பிடலாமா? கூடாதா ? - டாக்டர்கள் .
>> Thursday, February 21, 2008
டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?
'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.
என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.
வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.
ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.' SOURCE INTERNET.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
சலாம் சகோ அருமையான தகவல் நன்றி
Post a Comment