தொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.
>> Friday, March 2, 2007
தொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.
''என்ன இது? சொட்டுச் சொட்டாய் சேர்ந்து மெல்லிய கோடாகச் செல்கிறோமே? பெரிய நதியாகப் பிரவாகிப்பது எப்போது?!'' என்று துவக்கத்தில் எந்த நதியாவது தயங்குகிறதா ...
ஆனால், மனிதன்தான் நானெல்லாம் சாதிக்க முடியுமா? என்று வாழ்வை மலைப்போடு பார்க்கிறான்.
தொடர்ந்து முன்னேறுவதலாயே, காண்பவர் கண்கள் விரிய, நம் கண்முன்னே எம்பிக் குதித்து வழிந்தோடுகிறது அந்த நதி.
அது சுயவிமர்சனத்தோடு அங்கேயே தேங்கி நிற்பதில்லை. துணிந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.
''என் இலட்சியம் இந்த இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதேயாகும்'' என ஓட்டமாய் ஓடும் நதி வேகமாய் முன்னேறிப் பாய்கையில், உடன் வருவது ஓடையா, சுனையா என்று பாகுபாடு பார்க்காமல் உடன் வரும் அனைவரையும் ஒன்றாக இணத்து; குதூகலத்துடன் வேகமாக அழைத்துச் செல்கிறது. சாதிக்கிறது.
நதிபோல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள் உற்சாகமும், குஷியும் நதி போல் பாயும்.
நதியைப் போல் வாழ்பவர். விதியைக் கூட எளிதாய் வளைத்து நெளித்து மாற்றிவிடுவார்.
நதி செல்லும் வழியில் பல தடைகள் வந்து செல்லும்போது,
''இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்தது;, மற்றவர்கள் செய்யும் சதி'' என்று புலம்பி மற்றவர் மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.
''ஐய்யோ! எவ்வளவு தடை நம் முன்னே இருக்கிறது. இது எப்போது நகர்ந்து செல்லும்'' என்று நொந்து, அந்தத் தடை, தானாக விலகும் வரை நின்று காத்திருக்காமல் தொடர்ந்து நிற்காமல் முன்னேறுவதிலேயேதான் ஒரே குறியாக இருக்கிறது
ஒரு தியாகி எவ்வாறு தான் செய்த செயலுக்காக பலனை எதிர்பார்ப்பதில்லையோ, அதே போன்று, தான் செல்லும் இடங்களயெல்லாம், கொழிக்கச் செய்தாலும் நதியான ''நம்மால்தான் அனைத்தும் நிகழ்கிறது'' என்று ஒருபோதும் அகம்பாவம் கொள்வதில்லை.
''இவ்வளவு கடினப்பட்டு, இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோமே? அது இப்படி நம்மையே அடையாளம் தெரியாமல், காணாமல் போகச் செய்யும் கடலுக்குள் செல்வதற்காகவா?
இலட்சக்கணக்கானவர் என்னால் பயன்பெற்றனர். ஆனால் முடிவில் என் தனித்துவம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறதே!'' என்று கடலுக்குள் கலப்பதுபற்றி நினத்து, கண்கலங்கி நிற்பதில்லை. அதனால் தான் நதி, கடலாகிறது.
இப்படி வாழத் தெரிந்த தனி மனிதனே மக்கள் திலகமாகவோ, மகாத்மாவாகவோ, மகா ஞானியாகவோ மாறுவான்.
0 comments:
Post a Comment