என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?
>> Tuesday, March 13, 2007
என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?
அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்?
அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர் ஒருவர், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''நான் இந்தியாவில் இருந்து கிளம்பும்போது, அமெரிக்கா சென்றவுடன் என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?
அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்? என்ற ஒரு பெரிய லட்சியக் கணக்கு வைத்திருந்தேன்.அதன்படி கடுமயாக உழைக்க ஆரம்பித்தேன்.
உழைத்ததின் பலனாக, நான் சாதிக்க நினைத்த விஷயங்களான கார், வீடு, பங்களா, குடும்பம் என எல்லாமே எனக்குக் கிடைத்தது. அதுவும் எட்டு வருடங்களுக்குள்ளாகவே.
ஆனால் எதற்காக இதைச் சாதிக்கவேண்டும் என்று நினைத்தேனோ அது எனக்கு இன்றுவரை கிடைக்கவேவில்லை'' என்று மிகவும் வருத்துடன் சொன்னார்.
இப் பிரச்னை இவருக்கு மட்டும் சொந்தமானதல்ல எல்லோருக்கும் பொதுவானதான். மனித மனதின் இயல்பே, ஒரு பொருளின் மீது தீவிரமாக ஆசைப்படுவதும், அதற்காக உங்களைத் தொடர்ந்து போராட வைப்பதும், பின் அது கிடைத்தவுடன் முழுமையாக அனுபவிக்க விடாமல், அதற்கு அடுத்தது என்ன? என்பதைப் பற்றி ஏங்க வைப்பது ஆகும்.
''ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும் மலையாகக் காட்டும். கிடைத்தபின் மலையாகவே இருந்தாலும் கடுகாய்க் காட்டும் மடமனம்''
முதலில் ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஒருநாள் வாங்கியும் விடுகிறீர்கள். வாங்கியவுடன் அதை முழுமையாக அனுபவிப்பதில் ஆர்வம் காட்டாமல், அடுத்தது எப்படி கார் வாங்கலாம் என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பீர்கள்.
கார் வாங்கிவிட்டால், அதைவிடச் சிறந்த காரைப் பற்றிய கனவு.
இவ்வாறு அடுத்ததைப் பற்றிய கனவிலேயே மனம் இருப்பதால், ஒரு பொருளை அடைவதற்கு முன் அதன்மீது ஆசைப்படுவதில் காட்டுகின்ற ஆர்வம், அடைந்தபின் அதை அனுபவிப்பதில் காட்டுவதில்லை.
மாவீரன் நெப்போலியன். தான் இறந்தபின் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைத்து புதைக்கச் சொன்னானாம்.
ஏனெனில் உலகையே வென்ற வீரன் நெப்போலியன், கடைசியாக வெறுங்கையோடுதான் சென்றான் என்பதை அப்போதாவது மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதற்காக.
இவையெல்லாம் இருந்தால் சந்தோசமாக வாழலாம் என நினைத்திருந்த விஷயங்கள் எதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.
இதைத்தான் ஆங்கிலத்தில் 'டிப்ரஷன் ஆஃப் சக்ஸஸ்' என்று சொல்கிறார்கள்.
பெரும்பாலான மேலை நாட்டினர் சந்திக்கிற பிரச்னை வெற்றிக்குப் பின்னரும் தொடர்கின்ற 'மனஅழுத்தம்' எனும் பிரச்னைதான்.
உண்மையில் உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது.
நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான். இதை உணராமல், உலகத்தில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அல்லது உலகையே கொடுத்தாலும் உங்கள் மனதை உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பது நிதர்சனம்.
----------------------------------
இணைய தளத்தில் படித்தது..
0 comments:
Post a Comment