நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.
>> Monday, March 26, 2007
அறிவைத் தாண்டி....உழையுங்கள். அறிவைத்தாண்டி ஆனந்தமாய் இருப்பீர்கள்!!
பெற்றோர்: என் மகன் எல்லா மாணவர்களும் படிக்குமளவுக்கு படிக்க விரும்பவில்லை. மிகவும் துரிதமாக இவன் கல்வி கற்பதற்கு, ஏதாவது குறுக்கு வழி உண்டா? இருந்தால் சொல்லுங்கள்.
முதல்வர்: உமது மகனை ஓர் 'அடிமுட்டாள்' ஆக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தில் அதை செய்விட முடியும்.
ஆனால் அவனை ஒரு சிறந்த கல்விமானாக, அறிவாளியாக ஆக்க வேண்டுமானால், அதற்குச் சற்று அதிக காலம்தான் ஆகும்.
இந்த சுவாரஸ்யமான உரையாடல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்பீல்டு, கல்லூரி முதல்வராக இருந்தபோது, ஒரு செல்வந்தர் பெற்றோரோடு நடத்திய உரையாடல்.
நிமிட நேர சுதந்திரத்திற்காக, ஐம்புலன்களை அழிக்கிறான் மனிதன்.
நான்கு இட்லி போதுமென தோன்றிய பின், இன்னும் இரண்டை உள்ளே அனுப்புகிறான்.
கண் எரிய, எரிய ஒருநாள் கூத்துக்காக, விடிய விடிய கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது... தனக்கு பிடிக்கும் என்பதற்காக அது தவறே ஆனாலும், திரும்பத் திரும்ப செய்த பார்ப்பது... இவை அனைததுமே குறுக்கு வழியில் தேடப்படும் ஆனந்தங்கள்.
நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.
நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.
வாழ்வு ஒரு அமிர்தகுளம். உங்களின் சிறிய ஆசைகள், குளத்தின் விளிம்பில் மட்டுமே உட்கார வைக்கும்.
ஆசைகளக் கடந்து, வாழ்வில் குதித்தால், அல்லல்பட மாட்டீர்கள். அழிந்து போகமாட்டீர்கள்.
மாறாக, ஆனந்தப்படுவீர்கள். அருமையானவராக ஆகிவிடுவீர்கள்.
''வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை. கடுமையான உழைப்புதான் வாழ்க்கையை உயர்த்தும்.
அறிவாளியால் மட்டுமே ''தன் அறிவு உபயோகமற்றது'' என்று அறிவிக்க முடியும்.
எல்லா அறிவும், அறிவத் தாண்டிய அனுபவத்திற்கு, உங்களை அழைத்துச் செல்லும் படகுகள் மட்டுமே.
துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதனுக்குக் கிடைக்கும் சிறு படகாகிய அறிவிலேயே சிக்கிக்கொள்ள கூடாது. படகில் சிக்கிக்கொண்டால், பாதிக் கடலிலேயே, உயிரைப் பிரிய வேண்டியிருக்கும்.
அறிவைத் தாண்டி உழையுங்கள். அறிவைத்தாண்டி ஆனந்தமாய் இருப்பீர்கள்!!
SOURCE: INTERNET
0 comments:
Post a Comment