வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.
>> Friday, March 16, 2007
வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.
உங்கள் பிள்ளைகள் நிறைய வீடியோ கேம் விளையாடுகிறார்களா?
கவனியுங்கள் இதை. அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசன், வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மூளையில் இருக்கும் உணர்வுகளின் பகுதி தூண்டுதல்அடைவதும், அதே நேரத்தில் சுயகட்டுப்பாடு, தயக்கம், கவனிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடும் மூளையின் பிற பகுதிகளின் செயல்படும் தன்மை குறைவதும் கவனிக்கப்பட்டது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய வின்ஸ் மாத்யூஸ் சொல்கிற முக்கிய அறிவுரை இதுதான். 'உங்கள் பிள்ளைகள் என்ன மாதிரியான வீடியோகேம் விளையாடுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். வன்முறை நிறைந்த வீடியோகேம் விளையாட்டுகளுக்கும் மூளையின் செயல்படும் இடங்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலே சொன்ன ஆய்வுக் குழுவினர் இரண்டு விதமான வீடியோ விளையாட்டுகளை ஆய்விற்கு உட்படுத்தினார்கள். முதல் ஒன்று Need for speed underground என்பது. இதில் வேகம் இருக்கும். வன்முறை இருக்காது.
அடுத்தது medal of Honour Frontline. இது வன்முறை நிறைந்தது. ஆய்வுக் குழுவினர் 44 இளம் வயதுப் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வில் பயன்படுத்தினார்கள். விளையாடி முடித்ததுமே பிள்ளைகளின் மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. வன்முறை விளையாட்டை விளையாடிய பிள்ளைகளின் மூளை காட்டிய நெகட்டிவ் விளவு, மற்றொரு விளையாட்டை விளையாடிய பிள்ளைகளிடம் இல்லை.
மூளையில் ஏற்படுகிற இந்த மாற்றங்கள் நிரந்தரமாக அப்படியே இருந்துவிடுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.
வடுவூர் குமார்
NANDRI : KUMUDAM HEALTH.
0 comments:
Post a Comment