அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.
>> Thursday, March 22, 2007
அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.
ஆண்மைக் குறைவுக்கு அதிரடித் தீர்வு - நிச்சய குணம் -குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு- புற்று நோய் களுக்கு அற்புத சிகிச்சை என்ற விளம்பரங்கள் வருவாய் கருதி பாரம்பரிய மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவர்களும் ; பத்திரிகைகள் தொலைக் காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகைய விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.
அற்புதச் சிகிச்சை குறித்த விளம்பரங்கள் அண்மைக் காலமாக இணைய தளம் மூலமாகவும் மின் அஞ்சல் வாயிலாகவும் பரவுகின்றன. இவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும். மேலை நாடுகளிலும் இப் பிரச்சினை இன்றளவும் நிலவுவதால் பன்னாட்டு அளவில் போலி மருத்துவத்திற்கும் போலி மருந்துகளுக்கும் சாவு மணி அடிக்கும் நாள் உருவாவதே மனித சமுதாயத்தின் விடியலாகும்.
எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பயன் பெறாத நோயாளிகள் இத்தகைய விளம்பரங்களுக்கு பலியாவது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தீராத நோய்களுக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி நோயாளிகளுக்கு ஏராளமான பொருட்செலவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மன ரீதியில் பெரும் வேதனைகளை இத்தகைய விளம்பரங்கள் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக புற்றுநோய் உடல் பருமன் பாலியல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு அதிசய சிகிச்சை வழங்குவதாக ஏராளமான விளம்பரங்கள் நாள் தோறும் வெளியாகி வருகின்றன.
இத்தகைய விளம்பரங்களால் ஈர்க்கப்படும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் ஏமாற்றப்படுவதோடு நோய் முற்றும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மாயத்தாலும் மந்திரத்தாலும் நோய்கள் தீரும் என்ற மூட நம்பிக்கையை மக்கள் விட்டொழித்து ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மட்டுமே ஏற்கும் சூழ்நிலை உருவாகவேண்டும்.
FROM: INTERNET.
0 comments:
Post a Comment