**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?!

>> Friday, March 16, 2007

'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?!

உலகம் முழுக்க இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வயதானாலே ஏதோ இருதய நோய் வந்துவிடும் போல என்று நினக்கிறது அளவுக்கு இந்த பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.

நோய் வருவது மட்டும் அல்லாமல் இந்த நோயாளிகளுடைய மிக முக்கியமான பிரச்னை மாத்திரைகளைச் சாப்பிடுவது. ஒவ்வொரு வேளைக்கும் நான்கு அல்லது ஐந்து மாத்திரை என ஒரு நாளில் ஏகப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறது. நிறைய மாத்திரைகளைச் சாப்பிடுவதாலேயே இம்மாதிரி இருதய நோயாளிகள் மனதளவில் மிகவும் சோர்ந்து போகிறார்கள்.

'என்ன இவ்வளவு மாத்திரகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?! என்கிற சலிப்பும் வேதனையும் ஒவ்வொரு முறை டப்பாவைத் திறந்து ஒவ்வொரு மாத்திரையாக எடுக்கும் போதும் தோன்றுவது இயல்பு. இதனால் ஏற்படுகிற மனச் சங்கடம், கசப்பு, அழுத்தம், வருத்தம் எல்லாம் சேர்ந்து மேலும் இருதயத்தைச் சோர்வடையச் செய்யக்கூடும். இவர்களுக்கு, இப்போது ஒரு ஆறுதலான செய்தி வந்திருக்கிறது.

பாலிபில் (Polypill) என்ற ஒரு மாத்திரையை வடிவமைத்திருக்கிறார்கள். என்ன இது? ஒன்றுமில்லை மாத்திரைதான்.

இருதய நோயாளிகள் சாப்பிடுகிற எல்லா மாத்திரைகளையும் சேர்த்து
ஒரே மாத்திரையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு மாத்திரையில் நான்கு, ஐந்து மாத்திரை இருக்கும். சாப்பிடும்போது சிரமம் தெரியாது. ஒரே ஒரு மாத்திரைதான். ஒரு வேளைக்கு என்பதில் மனசு லேசாகிவிடும். நோயாளிகளுக்கு மனதளவில் தெம்பைக் கூட்டி, நோயின். தீவிரத்திலிருந்து விடுபட இந்த 'நான்கும் ஒன்றில்' வழி நல்ல வழியாக இருக்கிறது.

முதன் முதலில் 2003_ல் வால்ட் மற்றும் லா என்கிற இரண்டு இருதய நோய் சிகிச்சை மருத்துவர்கள் இந்த பாலிபில் என்கிற கருத்தை முன்மொழிந்தார்கள். அது பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வெளிவந்தது. அதன்பிறகு 2004_ல் பீட்டர் ஸ்லட் என்கிற இருதய நோய் மருத்துவர் இதை ஒரு சரியான வடிவத்திற்குத் திருத்தி ஒரு மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அவருடய கருத்துப்படி ஒரு பாலிபில் மாத்திரையில் ஆறு மாத்திரைகளும், வைட்டமின்களும் இருக்கும். ஒரு மாத்திரை நான்கு விதமான இருதய நோய் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும். இதனால் இருதய இரத்தக் குழாய்களில் ஏற்படுகிற அடைப்புகள் பிரச்னை மற்றும் ஸ்ட்ரோக் என்கிற திடீர் செயலிழப்பு இரண்டும் 80 சதவிகிதம் குறைக்க பயன்படும் என்கிறார்.

யாருக்குக் கொடுக்கலாம்?

55 வயதுக்கு மேல் இருக்கிறவர்களில். இவர்களுக்கு இருதய நோய்கள் வரலாம் என்று கணிக்கப்படுகிறவர்களுக்கு இந்த பாலிபில் உதவும்.

இருதய நோய் சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிட்டத் தட்ட 52 நாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. எல்லா நாட்டிலும் ரிஸ்க் காரணிகள் சம அளவில்தான் இருக்கின்றன. ரிஸ்க் என்று அடையாளப்படுத்தப் படுகிற மக்கள் அதிகம் இருக்கிற நாடுகளில் பாலிபில் முக்கியமாக உதவும் என்பது டாக்டர் பீட்டர் ஸ்லட்டின் கருத்து. ஜெர்மனியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருதய நோயாளிகள் நான்கு, ஐந்து மாத்திரை சாப்பிடுகிறவர்களவிட, அவை கலந்து ஒரே மாத்திரையாக இருக்கும் பாலிபில் சாப்பிடுகிறவர்கள் விரைவாக முன்னேற்றம் அடைந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளியும், ஒரு மாத்திரைதான் என்பதில் பதட்டம் இல்லாமல் இருக்க முடிகிறது. டாக்டருக்கு ஒரு பெரிய மருத்துவச் சீட்டில் ஒரே ஒரு மாத்திரையை எழுதுவது சுலபமாக இருந்தது. தவிர, ஒரு டாக்டர் விரும்பும் பதட்டமற்ற நோயாளியை, அவரால் இந்த பாலிபில் மூலம் கொண்டுவர முடிந்தது.

ஆறு மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து ஆறும் சரியான அளவில் வேலை செய்யும் என்று சொல்வதை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். பாலிபில் பற்றி இன்னும் சரியான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்பது அவர்களது வாதம். ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலக்கழக மருத்துவ மனையின் டாக்டர் லார்ஸ் ரடன் பாலிபில்_ன் Safety பாதுகாப்புப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று வற்புறுத்கிறார்.

புகைபிடிப்பது, உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படுகிற இருதயப் பிரச்னைகளுக்குக்கூட பாலிபில் பக்கம் போக வேண்டுமா? இவற்றை நோயாளிக்குப் புரியவைத்து தவிர்க்கமுடியுமே? என்கிறார்.

இவர் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றிற்கு Alternative Polypill என்று தலைப்பு வத்திருக்கிறார். இதில் அவர் பரிந்துரைக்கிற 'மாற்று பாலிபில்' என்ன தெரியுமா? உடற்பயிற்சி. நீங்கள் தொடர்ந்து செய்கிற உடற்பயிற்சிதான் உங்கள் இருதயத்துக்கு நல்ல தோழன் என்கிறார். ஒரு வாரத்திற்கு குறைந்தது 3கிலோ மீட்டர் நடந்தால் கூட உங்கள் எடை கூடுவது குறைக்கப்படுகிறது என்கிறார். இது இருதயத்திற்குப் பலம்.

ஆனால், பிரச்னையில் சிக்கி இருதய நோய்களுக்காக ஒவ்வொரு வேளையும் கை நிறைய மாத்திரகளைஅள்ளவேண்டியவர்களுக்கு, மெல்லப் பறித்துச் சூடிக்கொள்கிற ஒற்றைப் பூ மாதிரி வருகிற பாலிபில் நிச்சயம் வரம்தான்.

டாக்டர்ஜி. செங்கோட்டுவேலு இருதயநோய் சிகிச்சை நிபுணர்,
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி.

இப்போது இரண்டு மருந்து கம்பெனிகள் பாலிபில் மாத்திரகளைவிற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதில் ஆஸ்பிரின், ராமிபிரில், அட்ரோவாஸ் டேட்டின் என்கிற மூன்று மாத்திரகள் கலந்து வந்திருக்கிறது. ஆஸ்பிரின் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உருவாவதைத் தடுக்கிறது.

அட்ரோவாஸ்ட்டேடின் முக்கியமாக கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது. ராமிபிரில் அடைப்புகள் உருவாவதைத் தடுத்து இருதய இரத்தக்குழாய்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது. கூடவே அட்ரோவாஸ்டேடின் அடைப்புகள் உடைந்து சட்டென்று ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கிறது. பாலிபில் விற்பனைக்கு வந்து விட்டாலும், இது மிக அதிக ரிஸ்க் என்று கருதப்படுகிறவர்களுக்கும், ஏற்கெனவே இருதயநோய் முற்றிலுமாக வந்துவிட்டவர்களுக்கும் உதவக்கூடும்.

ஆனால் இதில் மருந்துகள் அளவு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிடுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற முறையில் ஒவ்வொரு தனி மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடிவதில்லை. இது பாலிபில் மருந்தின் முக்கிய பிரச்னை. தற்சமயம் பெரிதாக டாக்டர்களால் இன்னும் பயன்படுத்தப் படவில்லை.

பாதுகாப்பு, பயன், தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நபர்களின் எண்ணிகை என ஒவ்வொன்றும் மேலும் நிறைய ஆய்வு முடிவுகளால் நிரூபிக்கப்படும் போது, பாலிபில் தேவை அதிகரிக்கலாம்.

இருதய நோய்களைப் பொறுத்தவரை நான் சொல்கிற முக்கியத் தடுப்பு நடவடிக்கை ஒன்றே ஒன்று தான். எக்ஸர்சஸ்!
எஸ்.எஸ்
NANDRI: KUMUDAM HEALTH.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP