நம் குழந்தைகளின் கண் நலம் குறித்து முறையான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறோமா?
>> Thursday, March 1, 2007
நம் குழந்தைகளின் கண் நலம் குறித்து முறையான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறோமா?
அது ஒரு பள்ளிக்கூடம்.இரண்டாம் வகுப்பு மாணவ_மாணவிகள் ஆசிரியை கரும்பலகையில் எழுதிய பாடத்தைப் பார்த்து தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்காவது வரிசையில் அமர்ந்திருக்கும் குமரன் மட்டும் எழுதாமல் கரும்பலகையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.
ஆசிரியை அவனருகே வந்து அவன பாடத்தை எழுதுமாறு அறிவுறுத்திவிட்டு மற்ற மாணவர்களைக் கவனிக்கிறார். ஆனால் குமரன் மட்டும் எழுதவேயில்ல. ஆசிரியை அவனருகே வந்து மீண்டும் சற்று தன் குரலை உயர்த்தி அவனை பாடத்தைஎழுதுமாறு சொல்கிறார்.
அவன் தலையை ஆட்டிவிட்டு எழுத முயற்சிக்கிறான் ஆனால் எழுதவில்ல.ஆசிரியைக்குச் சற்று கோபம் வருகிறது.''ஏன் எழுதாமல் இருக்கிறாய்?''மாணவன் பதில் சொல்லவில்ல.''உன்னைத்தானே கேட்கிறேன் ஏன் எழுதாமல் இருக்கிறாய்?''மாணவன் தலையைக் குனிந்தவாறு நிற்கிறான். உனக்கென்ன இவ்வளவு திமிரா நீ பாடத்தை எழுதிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவனைக் கட்டாயப்படுத்கிறார்.
ஆசிரியை. பள்ளி வேலைநேரம் முடிந்து மற்ற மாணவ மாணவியர் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள். அவன் மட்டும் தனியே அமர்ந்திருக்கிறான். வகுப்பறையை சுற்று முற்றும் பார்க்கிறான். அவனைத்தவிர ஆசிரியை உள்பட எல்லோரும் வெளியேறி விட்டார்கள்.
அவன் மெதுவாக எழுந்து முதல் வரிசைக்குச் செல்கிறான். இப்போது கரும்பலகையைப் பார்க்கிறான். நோட்டில் பாடத்தை வேகமாக எழுகிறான்.தினசரி இந்தச் சம்பவம் தொடர்கிறது.
ஒரு நாள் ஆசிரியை சற்று ஆச்சரியத்டன் கண்காணிக்க அவருக்கு விஷயம் புரிந்தது. குமரனனின் கண்ணில் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகத்டன் அவனது பெற்றோரை வரவழைத்து சொன்னார்.
குமரனைப் பரிசோதித்த டாக்டர் ''குமரனைப் போல சொல்லத் தெரியாமல் அல்லது சொல்வதற்குப் பயந்துகொண்டு அல்லது இதுதான் இயல்பான பார்வை என்று நினத்து சிரமமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய குழந்தைகள் ஏராளம்'' என்கிறார்.
ஆம் குமரனுக்குக் கிட்டப்பார்வைக் கோளாறு. ஒரு நல்ல ஆசிரியை கிடைத்த காரணத்தால் உரிய நேரத்தில் குமரனுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது கண்ணாடி அணிந்து வருகிறான். மிக நன்றாகப் படிக்கிறான்.
கண்ணே கண்மணியே என்று குழந்தைகளைக் கொஞ்சி மகிழும் நாம் நம் குழந்தைகளின் கண் நலம் குறித்து முறையான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறோமா?
கேள்விக்கு விட தேவையான விழிப்புணர்வு இல்லை என்பதே.குழந்தைகள் தங்களுக்கு கண்ணில் குறைபாடு இருக்கிறது என்பதை அவர்களாகவே புரிந்து கொள்ளமுடியாது.
உதாரணமாக கண்ணில் குறைபாடு உள்ள குழந்தைகள் அந்த குறைபாடுகளுடனேயே தமது வேலைகளை இதுதான் இயல்பான பார்வை என்ற எண்ணத்துடன் செய்கின்றனர்.
இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கவனித்து தேவையான உதவியை குழந்தைகளுக்குச் செய்யலாம். குழந்தைகளின் கண் நலத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
0 comments:
Post a Comment