பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......
>> Wednesday, March 7, 2007
பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......
காமிலா, பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்.
அதற்காக, தனது ஆறு வயதுச் சிறுமி பஸீலாவை அனுப்பி, பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் விளையாடுவதுபோல், அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து வரச் சொல்வாள்.
பஸீலாவும், பக்கத்து வீடுகளில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை உளவு பார்த்து வந்து அம்மாவிடம் கூறுவாள்.
இப்படி அக்கம் பக்கத்து; வீடுகளில் நடப்பவைகளை முன் கூட்டியே வானிலை ஆராய்ச்சியாளர் போல் அறிந்து வைத்துக் கொண்டு, தனிமையில் அகப்படுபவர்களிடம் வெறும் வாயை மெல்லுவாள் காமிலா.
அன்று, பஸீலா ஓடிவந்து, ''அம்மா... ஆமினா வீட்டில் சினிமாவுக்குப் போறாங்க... நாமலும் போவோம்மா...'' என்றாள்.
''ஞாயிற்றுக்கிழமை வாப்பாவோட போகலாம், இப்ப சமர்த்தா போய் விளையாடு'' என்றாள்.
சிறிது நேரத்தில் மறுபடியும் வந்து, ''அம்மா... அம்மா... பாத்திமா வீட்டில் முறுக்கு செய்றாங்க... எனக்கும் செஞ்சுக் குடும்மா...'' என்று அடம்பிடித்தாள் ;பஸீலா.
''என்ன நீ... பக்கத்து வீட்ல செய்றதெல்லாம் கேட்குறே...'' என்று அடிக்க கை ஓங்கியவள், நிறுத்தினாள்.
தவறு தன் மீது தான் என்பதை உணர்ந்தாள்.
அன்று முதல் பஸீலாவை பக்கத்து வீடுகளுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டாள்.
-----------------
இணைய தளத்தில் படித்தது..
0 comments:
Post a Comment