ஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க........
>> Saturday, March 24, 2007
ஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க........
பால், காபி வைத்திருக்கும் பிளாஸ்க்கை எவ்வளவுதான் கழுவி சுத்தம் செய்தாலும் அதிலிருக்கும் பிசுபிசுப்பும், துர்நாற்றமும் முழுதுவம் போவதில்லயே ஏன்? அதற்கு என்ன தீர்வு...?
ஃபிளாஸ்க்குகளில் பெரும்பாலும் கறையும், துர்நாற்றமும் வருவதற்குக் காரணம், அதை நாம் சரிவர கவனிக்காமல் விடுவதுதான். பால் அல்லது காபியை வைத்திருப்போம். பாதியைக் குடித்தபின் மீதியை மறந்துவிடுவோம். அடுதது எப்பொழுது ஃபிளாஸ்க் அவசரமாகத் தேவைப்படுகிறதோ, அப்பொழுது திறந்து பார்ப்போம்.
அருவருப்பும் வெறுப்பும்தான் மிஞ்சும்... அந்த மாதிரி சமயங்களில் கொஞ்சமும் எரிச்சலைடயாமல் பழைய நியூஸ் பேப்பர் ஒன்ற எடுங்கள். உங்கள் கோபம் தீர அதை சுக்கு ஆயிரமாகக் கிழியுங்கள்.
ஃபிளாஸ்கை ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு, கிழித்து வைத்திருக்கும் சிறுசிறு துண்டுக் காகிதங்களை அதில் போடுங்கள். அத்துடன் கொஞ்சம் தண்ணீர நிரப்பி, ஒரு ஐந்து நிமிடம் நன்றாகக் குலுக்கி விட்டுக் கழுவுங்கள்.
இப்பொழுது பாருங்கள்... உங்கள் ஃபிளாஸ்க் புதிதாக வாங்கினபோல் பளபளப்பாக மட்டுமல்ல, ஒரு சிறு துர்நாற்றம்கூட இல்லாமல் தூய்மையாகவும் இருக்கும்.
அட இவ்வளவுதானா என்று நினைக்கத் தோன்றியிருக்குமே... கடலை தூர்த்தாவது காரியத்தை முடின்னு சொல்வாங்க. ஒரு துண்டு வேஸ்ட் பேப்பரை வைத்து உங்க துயரத்தை துடைத்துவிட ஃபிளாஸ்க் உள்ளவரை இனி நீங்கள் மறக்க முடியாது!
SOURCE : KUMUDAM. ---- NANDRI TO: KUMUDAM.
1 comments:
அட...ஆச்சரியமா இருக்கு.
தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/26/jimpletips/
Post a Comment