கணினிமுன் வேலை செய்பவர்களா?
>> Wednesday, March 28, 2007
கணினிமுன் வேலை செய்பவர்களா?
கால் ரத்த நாளங்கள் குறித்து கவனம் தேவை.--ரத்த நாள நிபுணர் அறிவுரை
சென்னை, மார்ச் 25- கணினி முன் அதிக நேரம் வேலை செய்பவர்களும், அடிக்கடி நீண்ட நேரம் பயணம் செய்ப வர்களும், கால் ரத்த நாளங்கள் குறித்து கவனமாக இருப்பது அவசியம் என்று சென்னை, ரத்த நாள மருத்துவர்கள் சங்க செயலர் டாக்டர் எம். ராஜ் குமார் தெரிவித்தார்.
ரத்த நாள அடைப்புப் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம், சிகிச்சை குறித்து டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:-----ரத்த நாள அடைப்புப் பிரச்சினை நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. நாள்பட்ட ரத்த நாள அடைப்புப் பிரச்சினை 2. கவனிக்காமல் விடுவதால் திடீரென ஏற்படும் தீவிர ரத்த நாள அடைப்புப் பிரச்சினை என இரு வகையாகக் கொள்ளலாம்.
கணினி முன் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் கால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட ஆரம்பிக்கும்.
இவ்வாறு கணினி வேலை பார்ப்போருக்கு ஏற்படும் ரத்த நாள அடைப்புப் பிரச்சினைக்கு `இத்ராம் போசிஸ்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை: இவ்வாறு பிரச்சினை ஆரம்பித்துவிட்ட நிலையில் ஒரு வாரத்துக்கு படுக்கையில் படுத்து கால்களுக்கு முழு ஓய்வு தருவதே சிகிச்சையாகும்.
பிரச்சினை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள வேண்டுமானால், இரண்டு மணி நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை பார்த்தால் 10 அல்லது 15 நிமிடம் நடந்து விட்டு மீண்டும் வேலை செய்யத் தொடங்க வேண்டும்.
காலில் ரத்த நாள அடைப்பு பிரச்சினை ஏற்படும் நிலையில் அலட்சியமாக இருந்தால், அது தீவிர நோயாக மாறி இதயம் அல்லது நுரையீரல் வரை மேலே சென்று உயிரையே பறிக்கக் கூடும். இதே போன்று நீண்ட தூரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது எழுந்து நடந்தால்தான் காலில் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த நாள அடைப்புப் பிரச்சினை ஏற்படாது.
விமானத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் (10 மணி நேரத்துக்கு மேல்) பயணம் செய்வோர், பயணத் துக்கு முன்பாக `லோ மாலிக் யூலர் வெயிட் ஹெபரின்’ என்ற ஊசி மருந்தைப் போட்டுக் கொண்டு செல்வது நல்லது. இந்த ஊசி மருந்தைப் போட் டுக் கொள்ளும் நிலையில் கால் ரதத் நாள அடைப்பைத் தவிர்க்கலாம் என்றார் அவர். ---SOURCE:INTERNET
0 comments:
Post a Comment