**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இளைஞர்களின் முதுகெலும்பு பிரச்சினைகள்

>> Wednesday, February 7, 2007

இளைஞர்களின் முதுகெலும்பு பிரச்சினைகள்

சீறிக்கொண்டு பாயும் டூவீலர், சாஃப்ட்வேர் நிறுவன வேலை, முறை தவறிய வேலை நேரம் இவற்றால் இன்றைய படித்த இளைஞர்களின் வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. பல இளைஞர்களின் கனவு வாழ்க்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. வாழ்க்கைத்தரம் ஹைடெக்காய் மாற மாற, அவர்களைப் பாதிக்கும் நோய்களும் அதிவேகத்தில் துரத்துகின்றன.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய இளைஞர்களின் 60 சதவிகிதம் பேருக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

'வோல்ட் பெடரேஷன் ஆஃப் நியூரலாஜிக்கல் சொசைட்டி ' என்ற அமைப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த பயங்கர ஆபத்து தெரிய வந்திருக்கிறது

இருபது வயதிலேயே நிறைய பயன்கள் முதுகுவலி, கழுத்துவலி, மூட்டு வலி என்று சோகத்தோடு வருகிறார்கள். ஏ.சி. அறையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தபடி சொகுசாக வேலை பார்த்துவிட்டு உடற்பயிற்சியைச் சுத்தமாக மறந்து விட்டதால் வரும் பிரச்சினை இது. எப்போதும் வீடியோ கேம் ஆடும் சுட்டிப் பையன்களுக்கும், இந்தப் பிரச்சினை 15 வயதுக்குள் வருகிறது என்று அதிர்ச்சி தகவல் சொல்கிறார் அமைப்பின் தலைவரான டாக்டர் ரமானி.

''வேலை நேரத்திலும், பயணங்களிலும் உட்காரும், நிற்கும், நடக்கும் நிலைகளில் மாறுதல்கள், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாதது, வாகனம் ஓட்டுதல், புகைப்பழக்கம் உட்பட முதுகு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறைய காரணங்கள் உண்டு என்கிறார்கள் முட நீக்கு இயல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

இதுபற்றி ரப்பானி வைத்திய சாலையச் சேர்ந்த டாக்டர் ஹக்கிம் சையத் சத்தார் விளக்கும்போது:

கம்ப்யூட்டர் முன் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் உட்காரக்கூடாது. நடுவில் கொஞ்ச நேரம் எழுந்து, நின்று, நடந்துவிட்டு அப்புறம் மறுபடி உட்காரலாம். அளவுக்கதிகமான எடை தூக்குவது, டூ_வீலர் ஓட்டுவது, இதெல்லாமும் முதுகுப் பிரச்சினைக்குக் காரணங்கள். உட்காரும்போது, நிற்கும்போது, நடக்கும்போது முதுகுத் தண்டு நேராக இருக்கணும். அது மாறினால்பிரச்சினைதான். அடிமுதுகு எலும்பு அடுக்குகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு நகர்ந்து, அந்த ஏரியாவில் இருக்கிற நரம்புகள், அழுத்தப்பட்டு, முதுகுவலி வரும். கால்களின் இயக்கத்தையும் பாதிக்கும்.

இதை தவிர நோய்த் தொற்று, இணைப்புகள் தேய்மானம், எலும்பு நலிவு, அரிதாக சிலருக்கு எலும்புப் புற்றுநோய் காரணமாகவும் முதுகுவலி வரலாம். முதுகு வலியைத் தவிர்க்கவும், வலி வந்தபிறகு அதன் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழிகள் உண்டு.

எப்பவும் முதுகுப் பகுதிக்கு சப்போர்ட் இருக்கிற மாதிரி உட்காரணும், நிற்கணும், நடக்கணும், கீழே தரையில் இருக்கிற பொருளை அப்படியே முதுகை வளைச்சு, குனிந்து எடுக்கக்கூடாது. கால்களை மடக்கி முழங்கால்களைத் தரையில் ஊன்றி உட்கார்ந்தபடிதான் எடுக்கணும். டூ_வீலர் ஓட்டறவங்க சரியான ஷாக்அப்சார் உள்ள வண்டிகளைத் தேர்தெடுந்து ஓட்டலாம். ஷாக் அப்சார் சரியான கண்டிஷன்ல இருக்கான்னு அடிக்கடி சோதனை பண்ணிக்கணும். நேரத்தை மிச்சப்படுத்த கரடுமுரடான வழிகள்ல வண்டியை ஓட்டக் கூடாது. மேடு, பள்ளம் இல்லாத சாலைகள்லதான் ஓட்டணும். வேகத் தடைகளும் பிரச்சினைதான். உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம். வயிறு மற்றும் முதுகு தசைகளப் பலப்படுத்தற உடற்பயிற்சிகளைச் செய்யணும்.

சமமான தரையில, கை, கால்கள நீட்டிப் படுக்கணும். கைகள் பக்க வாட்டில் இருக்கட்டும். தலையயும், கால்களையும் ஒரே சமயத்துல 6 அங்குல உயரத்துக்குத் தூக்கணும். 3 வரைக்கும் எண்ணிட்டு முதல்ல தலை, பிறகு காலை கீழே வைக்கணும். அதே மாதிரி இன்னொரு காலுக்குச் செய்யணும்.

நேரா படுத்துக்கிட்டு, இரண்டு கால்களையும் மடக்கணும், தொடைப் பகுதி வயிற்றைத் தொடுற மாதிரி மடக்கி 3 வரை எண்ணிட்டு, சாதாரண நிலைக்கு வரலாம்.

இந்த எல்லாப் பயிற்சிகளயும் தினமும் 5 முதல் 10 முறைகள் செய்யலாம்.

பால், கேழ்வரகு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெந்தயம், வெண்டைக்காய், சோயா, பருப்பு வகைகள், உளுந்து இவையெல்லாம் கால்சியம் நிறைந்த உணவுகள். முதுகெலும்பை உறுதியாக்கக் கூடியவை. தினமும் கொஞ்சநேரம் இளம் வெயில் படற மாதிரி நிற்பது, தயிர், சீஸ், காட்லிவர் ஆயில் சாப்பிடற மூலமா, எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் - டி நிறைய கிடக்கும்.

முதுகுவலிக்கும், புகைப் பழக்கத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. முதுகுவலி வராம தவிர்க்கணும்னா புகைப் பழக்கத்துக்கு முதல்ல குட்பை சொல்லுங்க.
---------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP