**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பயத்தைப் போக்குவது....

>> Thursday, February 8, 2007

பயத்தைப் போக்குவது....

பயத்திற்குக் காரணம் :

ஒரு பொருளின் மீதோ அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையின் மீதோ தோன்றும் அர்த்தமில்லாத அச்சம், பீதிதான் பயத்திற்குக் காரணம்.

இந்த பொருளற்ற பயம், ஒரு சில நுண்ணிய பொருட்களாலோ, சில வியாதிகளாலோ, சிலருக்கு, பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, பூனை போன்ற பிராணிகளைப் பார்ப்பதாலோ ஏற்படும். சிலருக்கு விமானப் பயணத்தின்போது இந்த பயம் தோன்றும். சிலருக்கு மூடிய அறைக்குள் இருக்கும்போது பயமாக இருக்கும். சிலருக்கு மக்கள் கூட்டத்தைக் கண்டால் பயந்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

அறிகுறிகள் : பயம்தான் மனநலக்குறைபாடுகளின் பொதுவான அறிகுறி. அச்சஉணர்வு, எரிச்சல், சோர்வு, தளர்ச்சி, மனக்குழப்பம், வேகமான இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல், விரல் நடுக்கம், கைகால்கள் வியர்த்தல் போன்ற அசாதாரண நிகழ்வுகள் பயத்திற்கு முன் நிகழும். தூக்கமின்மையும் அதனால் தலைவலியும் ஏற்படும்.

ஒரு சிலருக்கு உடல்ரீதியான அறிகுறிகள் தென்படும். கைகால்கள் இயங்க மறுத்தல், பேச நா எழாமை, பார்வைக் கோளாறு, காது கேளாமை, விஷக்காய்ச்சல், காக்காய் வலிப்பு போன்ற அறிகுறிகளால் இதனை உணரலாம். தன்னிலை மறந்த நிலை, ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட நிலை போன்ற வெளிப்பாடுகளயும் பயம் தோற்றுவிக்கும்.

பயத்தைப் போக்குவது எளிது?

பயம்தான் எல்லா மனநோய்களுக்கும் பொதுவான அறிகுறி என்பதால், அதை உடனே போக்கிவிடவேண்டும்.

1. எந்தவொரு பயத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம் பயத்தைப் போக்கி உதவ ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே பாதி பயத்தை நீக்கிவிடும்.

2. பூனை, பல்லியைக் கண்டு பயம் என்றால் அவற்றை விரட்டும் மார்க்கத்தை உங்களச் சுற்றியுள்ளவர்களக் கொண்டு செய்ய வைக்கவேண்டும்.

3. எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும்போதெல்லாம் அதை மறக்க உடனடியாக வேறொரு வேலையில் ஈடுபட்டு மனதை திசை திருப்ப வேண்டும். குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, கிழிந்த துணிகளைத் தைப்பது,; படிப்பது என்று மனதை மாற்றலாம்.

4. பய உணர்வு எழும்போதெல்லாம் ஏதாவது ஒரு பெரியவரின் மேற்கோள்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். பயஉணர்விலிருந்து வெகுதூரத்திற்கு வந்துவிடுவீர்கள்.

5. நம் மூளையில் உள்ள ரசாயனப் பொருட்களின் அளவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும் இந்தப் பயஉணர்வு அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின் மூலம் அந்த ரசாயனத்தின் அளவுகளை சரி நிலைக்குக் கொண்டு வரமுடியும். அதிகாலை உடற்பயிற்சி, மாலை வாக்கிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் என்று ஏதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரலாம்.

6. தொழுகையின் மூலம் இழந்த நம்பிக்கையை உங்களால் பெறமுடியும். நம்பிக்கை வந்துவிட்டாலே பயம் ஓடியே போய்விடும்.

7. தூங்கும்போதுதான் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். மனம் குழப்பமின்றி ஓய்வாக இருக்கும். அதனால் தூக்கத்தின் மூலம் உற்சாகத்தையும், பயத்தைப் போக்கும் திடத்தையும் அடைய முடியும்.

8. கட்டுப்பாடான உணவு அவசியம். காய்கறி, பால், அசைவம் எதுவானாலும் சமச்சீர் உணவாக இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP