**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

>> Wednesday, February 7, 2007

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

''குழந்தை பிறந்த பின்னர், பெண்கள் தங்கள் நலன் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. மாறாக குழந்தை வளர்ப்பு, அவர்களை ஆரோக்கியம், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுகிறார்கள். இதனால் பெண்களின் உடல் எடை கூடுவதோடு, எலும்புகளும் பலமிழந்து விடுகின்றன. ஆண்களிடம் இந்தப் பாதிப்பு குறைவு. பெண்கள் போதிய உடற்பயிற்சி செய்யாமலிருப்பதே இதற்குக் காரணம்!'' எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறார், பிரபல எலும்பு மருத்துவ நிபுணர் சிவமுருகன்.

''எலும்புகள் கால்சியம் எனும் தனிமத்தால் ஆனவை. அதனால் கால்சியச் சத்து குறையும்போது, இயல்பாகவே எலும்புகள் பலமிழக்கும். இதனைச் சமன்படுத்த கால்சியம் சப்ளிமென்ட்டுகள் எடுக்கணும். மெனோபாஸ் ஏற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கால்சியம் சப்ளிமென்ட் மாத்திரகள் எடுப்பது நல்லது. தவறில்லை. பாலில் கால்சியச் சத்து அதிகம். ஒரு டம்ளர் பாலில் நூற்று ஐம்பது மி.கி. கால்சியம் இருப்பது அசத்தல்.

எல்லாவற்றையும் விட உடற்பயிற்சி செய்யலாம். எந்த வகையான உடற்பயிற்சியும் எலும்புகளை வலுவாக்கும்.
வயது ஏற ஏற முழங்காலுக்கும், தொடை எலும்புக்கும் இடையில் இருக்கும் 'சவ்வு' தேய்ந்து போகும். இதற்கு ஆர்த்ரைட்டிஸ் என்று பெயர். இதில் ரூமட்டாய்டு, ஆஸ்டியோ ஆர்டிதரைட்டிஸ் என்று இரண்டு வகை.

இவற்றில் ஆஸ்டியோ ஆர்த்தரட்டிஸ் சற்றுக் கொடுமயானது. அறிகுறிகள் எளிதில் தெரியும். கடுமையான வலி வரும். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. படிக்கட்டுகளில் ஏற முடியாது. திடீரென்று முழங்கால் மூட்டுகளில் வீக்கம் வரும். வாழ்க்கையே முடங்கிப் போய்விட்ட போன்ற எண்ணம் ஏற்படும். இதற்கு முழங்கால் மூட்டு ஆபரேஷன்தான் ஒரே தீர்வு. பெயர் 'ஹை ப்ளெக்ஷியன்' ஆபரேஷன். மிகவும் நவீன சிகிச்சை இது.

முழங்கால் மூட்டின் இறுதிப் பகுதியில் இருக்கும் சவ்வுக்கு பதில், 'கோபால்ட் குரோமியம் அலாய்' கொண்டு செய்யப்பட்ட செயற்கை உலோகத்தை வைத்துப் பொருத்திவிட்டால் போதும். அதன்பின்னர் தொடை எலும்பும், முழங்கால் மூட்டும் எப்படித்தான் உராய்ந்தாலும் வலி ஏற்படாது. ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும். இந்த எளிமயான ஆபரேஷன ஆண், பெண் யார் வேண்டுமானாலும் என்று கொள்ளலாம்.

தரையில் வாகாக உட்கார முடியவில்லையே என்று எண்ணியவர்கள் கூட, காலை மடக்கி, நீட்ட முடியும், ஒரு விளயாட்டு வீரரைப் போல் படிக்கட்டுகளில், ஏறி, இறங்க முடியும். எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற பயமின்றி வாழ்க்கையச் சிரமமின்றி, மகிழ்ச்சியாகத் தொடரலாம்!'' உறுதியாகச் சொல்கிறார் டாக்டர் சிவமுருகன்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்'.

நஜ்மாவுக்கு வயது நாற்பத்தைந்துக்கும் கொஞ்சம் அதிகம். கணவரோடு டூ வீலரில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கீழே இறங்கியவருக்கு முழங்காலில் வலி. லேசாக அந்தப் பகுதியைத் தடவி விட்டார். அப்போதைக்கு வலி நின்று போனது. கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ஆனால், வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் வலி தாங்கமுடியவில்ல. இரவு படுக்கப் போகும் முன்பு, வலி இருந்த இடத்தில் களிம்பைத் தடவிவிட்டுப் படுத்தார். மறுநாள் காலையிலும் வலி போவேனா என்று அடம்பிடித்தது.

''இது முழங்காலில் வந்திருக்கும் சாதாரண வலியோ, சுளுக்கோ அல்ல. இதன் பெயர் 'ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ்'. முழங்காலுக்கும் தொடை எலும்புக்கும் இடையில் இருக்கும் 'சவ்வு' தேய்ந்து போவதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். இதற்கு ஆபரேஷன்-தான் ஒரே தீர்வு. இதற்கென்றே புதியதாக ஆபரேஷன் வந்துவிட்டது. இதன் மூலம் 'ஆஸ்டியோ ஆர்த்ரடிஸக் குணப்படுத்தி-விட முடியும்!'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சென்னை நந்தனம் 'அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனயின் எலும்பு நோய் நிபுணர் டாக்டர் விஜய் சி.போஸ்.

'ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்' பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அவசியம். இல்லையேல் பிரச்னை பெரிதாகிவிடும். இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை அதிகரிப்பது இப்பிரச்னை ஏற்பட ஒரு காரணம். ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸில் பலவகை உண்டு. முதல் வகையில் எப்போதாவதான் வலி வரும். அன்றாடம் ஏதாவது வேலை செய்யும்போது வலி வருவது இரண்டாவது வகை. மூன்றாவது வகை சற்று வித்தியாசமானது. நோயாளியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. வலி வாட்டி எடுக்கும். உட்கார்ந்தாலே வலி எடுப்பது நான்காவது வகை.

இவற்றில் எந்த வகை என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுப்பது நல்ல. வலி முற்றிவிட்டால் மருந்துகள், ஊசிகள், உடற்பயிற்சி, பிஸியோதெரபி உள்ளிட்ட உபாயங்கள் எந்தப் பலனையும் தராது.

முழங்கால் மூட்டுப் பிரச்னைக்கு 'ப்ரெய்ன் லேப் நேவிகேஷன்' அறுவைச் சிகிச்சை நல்லது இது கம்ப்யூட்டர் மூலம் செய்யப்படும்.

முழங்கால் எலும்புக்கும், தொடை எலும்புக்கும் இடையில் உள்ள சவ்வுப் பகுதியை, செயற்கையாகச் சரி செய்வதன் மூலம் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிப்பு குணப்படுத்தப்படும். முழங்கால் மூட்டுப் பகுதியில் உள்ள எலும்பு, குதிரையின் காலடிக் குழம்பைப் போன்று இருக்கும். அதற்குப் பொருத்தமாக கோபால்ட் குரோமியம் உலோகம் கொண்டு, அதே சைஸில் செய்யப்பட்ட செயற்கைக் கருவியைப் பொருத்துவார்கள். இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல் தொடை எலும்பில், செயற்கை பிளாஸ்டிக் எலும்பு பொருத்தப்படும். இப்படி இரண்டு செயற்கைப் பொருட்கள் பயன்படுத்துவதால், உரசல் இருந்தாலும், முழங்காலில் வலி ஏற்படாது. உலோகப் பொருள் வைத்துத் தைத்துவிடுவதால் முழங்காலை அசைக்கும் போதும், மடக்கும்-போதும் அசௌகரியம் இருக்காது. ஓடலாம், நீச்சல் அடிக்கலாம். பயம் தேவையில்ல.

கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அதனால் இரண்டு எலும்புகளையும் மிகத் துல்லியமாகப் பொருத்திவிடலாம். தவறு நேர வாய்ப்பில்லை. மீண்டும் எலும்பு தேயுமோ என்ற பயம் அவசியமில்லை.

சாதாரண மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள முடியாது. காரணம், அங்கே வசதிகள் இருக்காது என்பதான். ஆபரேஷனின் போது, முழங்கால் மூட்டுப் பகுதியில்
MIRA (MINIMALLY INVASIVE REFRACTIVE ARRAYS)
கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். கேமராவிலிருந்து வெளியேறும் புறஊதாக் கதிர்கள், MIRA கருவிகளால் பிரதிபலிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அதனால் துல்லியமான ஆபரேஷனுக்கு உத்தரவாதமுண்டு.

சுமார் ஒன்றரை மணி நேரம் பிடிக்கும் இந்த ஆபரேஷன் செய்து கொள்வதற்கு முன்பு வேறு ஏதேனும் உடல் பாதிப்புகள் இருக்கிறதா என்பத 'செக்' செய்வது அவசியம். ஜெனரல் அனஸ்தீஸியா கொண்டு செய்யப்படும் இந்த ஆபரேஷன், கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால், ஆஸ்டியோ ஆர்த்ரடிஸிலிருந்து கிட்டத்தட்ட முழுமயான நிவாரணம் கிடைத்துவிடும்! ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ் பிரச்ன ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் சிகிச்சையை த் தொடங்கிவிடுவது நல்லது.

தடுக்கும் வழிகள்:

1. உடல் எடை போடக் கூடாது.
2. ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் சமச்சீரான உணவுகள் எடுப்பது அவசியம்.
3. பரம்பரையாக வரும் வாய்ப்பு உண்டு என்பதால், ஆரம்பத்திலேயே டெஸ்ட் செய்த பாதிப்பில்லை என்பதை, உறுதி செய்வது முக்கியம்.
4. பொதுவாகக் கொஞ்சம் மூத்த வயதினரைத்தான் இந்த நோய் தாக்கும் என்பதால், அந்த வயதினரை கவனிப்பது நல்லது.
-------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP