**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பேயடிக்கிறதா? சாக்லெட்டில் மனித ரோமம் ? கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?++

>> Wednesday, February 7, 2007

கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?

சிலர் கூனிக் குறுகி படுத்து தூங்குவார்கள். அவர்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் அப்படித்தூங்கக் கூடாது என்று அறிவுறுத்துவார்கள்;. அது எதற்காக என்றால் ரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். கூனிக் குறுகி படுத்தால் அவ்வாறு சீராக ரத்தம் செல்லாது.

அதேபோல் சிலர் சாப்பிட்ட பிறகு குளிப்பார்கள். அது தவறு. அப்படி செய்யக் கூடாது
.
உணவருந்திய பிறகு குளித்தால் உணவு ஜீரணம் நடக்க கால தாமதம் ஆகும். மற்றும் வயிற்றில் இரைச்சல், உப்புசம் உண்டாகும்.

பேயடிக்கிறதா?
நுரையீரலில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தினால் நுரையீரலில் உள்ள அல்வியோல எனப்படும் காற்றுப்பைக்குள் ரத்தத்திலிருந்து நீர் சென்றுவிடும்.

இந்த நீர், காற்றுடன் கலக்கும்போது நுரை உண்டாகிறது. இருமும்போது, அதுதான் ரத்தத்துடன் வெளிவருகிறது.

இதைத்தான் பேயடிப்பதாகக் கூறுகிறார்கள். நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அங்கு ஆக்ஸிஜன் - கரியமிலவாயு மாற்றம் தடைபடுகிறது. நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட இதுதான் காரணம்.

கண்களின் சக்தி
கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள்; உணர்ந்து விடும்.

வழிகாட்டும் செடி...
தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள்; திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்;.

பாக்டீரியா
பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்துக்கோடி பாக்டீரியாக்கள்; இருப்பதாக விஞ்ஞானிகள்; ஆய்ந்துள்ளனர்.

புதிதாக வீடு கட்டும் பொழுது சுவற்றுக்கும் தளத்திற்கும் தண்ணீர் ஊற்றுகிறார்களே அது ஏன்? எவ்வளவு நாள் ஊற்ற வேண்டும்?

''சிமெண்ட்டுக்கு தண்ணீர் ஊற்றுவதை க்யூரிங் என்று சொல்வார்கள். கட்டிடத்தின் உறுதிக்காக நாம் உபயோகப்படுத்தும் சிமெண்ட், தன் முழு வலிமையயும் பெறுவதற்கு, இந்த க்யூரிங் மிக அவசியம். சுவற்றுப்பூச்சுக்கு உலர உலர ஊற்றலாம். பில்லர்களுக்கு, கோணியைக் கட்டி அது எப்பவும் ஈரமாக இருக்கும்படி தண்ணீர் ஊற்ற வேண்டும். மேல் தளத்தைப் பொறுத்த வரை பாத்தி மாதிரி கட்டி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்படி செய்ய வேண்டும். இதை 21 நாட்கள் செய்தால் கட்டிடம் உறுதியாகவும், விரிசல் வராமலும்இருக்கும்!''

கலோரின்னா என்ன? சராசரியா ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தன கலோரி தேவைப்படும்?

''நாம் சாப்பிடும் உணவு உடம்பில் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுவதைத்தான் கலோரியாகக் கணக்கிடுகிறார்கள். இது உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும் வேலையப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு வேலையப் பொறுத்து 1800-லிருந் 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு. இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்ல. ஒரு கப் ரைஸில் 400 கிலோ கலோரி இருக்கும். 4 கப் ரைஸ் சாப்பிட்டால் 1600 கிலோ கலோரி கிடைத்துவிடும். ஆனால் அதில் நமது உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்காது.

ஆரோக்கியமான உடம்புக்கு சக்தியுடன் சத்தும் தேவை. அதனால் கலோரியைப் பற்றி கவலைப்படாமல் அரிசி, காய்கறி, பழம், பால் என்று எல்லா விதமான உணவையும் ரெகுலராகச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் நல்லது''

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!

குழந்தைகளுக்கு சாக்லெட் தரலாமா? அதில் மனித
ரோமம் கலக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, உண்மையா?


''நம்ம முடியில நிறைய புரோட்டீன் இருக்கு. அதை பதப்படுத்தி சில வகை உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு. உணவில் புரோட்டீன் அளவை அதிகப்படுத்த அப்படி செய்வார்கள். அந்த வகை உணவுகள் எல்லாமே பார்மாசூட்டிகல் பிராடக்ட், அதாவது மருத்துவ தயாரிப்பாகத்தான்

விற்பனக்கு அனுமதிக்கப்படும். அதைத் தவிர்த்து சாக்லெட் மாதிரி நாம் சாதாரணமாக சாப்பிடும் எந்த உணவிலும் மனித உரோமத்தை பயன்படுத்தக் கூடான்னு சட்டமே இருக்கு.

இப்போ சாக்லெட் மாதிரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 'HACCP' ன்னு ஒரு சான்றிதழை அரசாங்கம் வழங்குகிறது இந்தக் குறியீடுள்ள எந்த சாக்லெட்டிலும் தவறிக் கூட ஒரு சின்ன முடி மட்டுமல்ல, கேடு விளவிக்கக் கூடிய எந்த அம்சமும் இருக்காது.
ஏன்னா கெடுதல் இல்லாமை தயாரிக்கத் தேவையான கருவிகள் முதல் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கான சாஃப்ட்வேர் வரை இருந்தால்தான் 'HACCP' சான்றிதழ் கிடக்கும். அதனால சாக்லெட்டுல 'HACCP' குறியீடு இருக்கிறதான்னு பார்த்து வாங்கினா எந்த பயமும் இல்லாம சாப்பிடலாம். கலர் பேப்பர்ல சுத்தினதெல்லாம் சாக்லெட்டுன்னு வாங்கினா கொஞ்சம் ரிஸ்க்தான்!''

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிச்சா ஸேஃப்?
அதிகமா குடிக்கறவங்க குறைச்சா போதுமா. கண்டிப்பா நிறுத்தணுமா? நிறுத்தின பின்னாடி பழைய பாதிப்பை எப்படி சரி பண்றது?

''நீங்க ஒரு தம் அடிச்சா போதும், அதுக்கு என்ன டேமேஜ் நுரையீரல்ல ஏற்படுமோ அது ஏற்பட்டே தீரும். சிகரெட் குடிக்கும்போது எந்த பாதிப்பும் இருப்பதுபோல் தெரியாது... ஆனால் இன்னிக்கு குடித்த சிகரெட்டுக்கு பலனை, இப்பொழுது நிறுத்தினாலும் இருபது வருடம் கழித்தாவது அனுபவித்தே தீரணும். பாதிக்கப்பட்ட நுரையீலை மருந்து சாப்பிட்டெல்லாம் பழய நிலைக்கு கொண்டு வர முடியாது.

சிலர் கேட்பார்கள். 'நான் ஒன்றிரண்டுதான் குடிக்கிறேன். அவர் ஆறேழு பாக்கெட் குடிக்கிறார். ஆனால் என்னை விட ஆரோக்யமாக இருக்கிறார்'ன்னு. குடிக்கின்ற சிகரெட்டில் உள்ள விஷத்தின் அளவு எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால் அது சிலரை சீக்கிரம் கொன்றுவிடும். சிலரைக் கொல்வதற்கு கொஞ்ச நாட்கள் அதிகமாகும். அது அவரவரது மரபணுவின் தன்மையச் சார்ந்தது. ஆனால் யாராக இருந்தாலும் இயல்பான ஆயுட்காலம் சிகரெட்டால் குறைக்கப்படுவது தவிர்க்கவே முடியாதது.

பிடிச்சிருக்கிறது ஸ்டலா இருந்தாலும் அது புலி வாலு மாமு...

சோப்புல கூட ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு தனித் தனி சோப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

''நமது சருமத்தை மூணு வகையா பிரிக்கலாம். நார்மல் ஸ்கின், ஆயில் ஸ்கின், ட்ரைஸ்கின்.

காரத்தன்மை அதிகமுள்ள சருமத்தை ட்ரை ஸ்கின் என்றும், அமிலத் தன்மை அதிகமுள்ள சருமத்தை ஆயில் ஸ்கின் என்றும், சம அளவில் உள்ளதை நார்மல் ஸ்கின் என்றும் சொல்கிறோம். இதற்கேற்றவாறு சோப்புகளிலும் அமிலத்தமை, காரத்தன்மை இரண்டையும் கூட்டிக் குறைத் தயாரிப்பார்கள். நமது சருமத்திற்கு எது பொருத்தமானதோ அதை வாங்கிப் போட்டுக் கொள்ளலாம்.

காலையில் தூங்கி எழுந்ததும் டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒற்றி எடுங்கள். பேப்பரில் பிசுபிசுப்பே இல்லையென்றால் டிரை ஸ்கின். திட்டுத் திட்டாக சில இடத்தில் மட்டும் இருந்தால் நார்மல் ஸ்கின். முகம் முழுவம் பிசுபிசுப்பாக இருந்தால் ஆயில் ஸ்கின். இனி உங்கள் சருமத்திற்கேற்ற சோப்பை நீங்களே பார்த்து வாங்கிக் கொள்ளவும். ஆண், பெண் பாகுபாடெல்லாம் வியாபார நோக்கத்துக்குத்தான்.''

என்னதான் வெளியில மினுமினுப்பை ஏத்திக்கிட்டாலும் உள்ளுக்குள்ள பார்ட்ஸ் ஒழுங்கா இருக்கணுங்கண்ணா. இல்லைன்னா வண்டி உருளும்; ஊர்ப் போய்ச் சேராது 'ஸ்டேண்ட் போட்ட சைக்கிளை மிதிச்சு ஸ்டேட்சுக்கு போக முடியுமா?'. டேக் கேர் பிரதர்ஸ்... வரட்டுமா?


இருட்டில் (வெளிச்சம் இல்லாமல்) டி.வி. பார்ப்பது நல்லதா?

''இருட்டில் வெளிச்சம் இல்லாமல் டி.வி. பார்ப்பது நல்லதல்ல. தொலைக்காட்சியிலிருநது; கண்ணுக்குப் புலப்படாத சில கதிர்கள் வெளியேறுவதால், இருட்டில் டி.வி. பார்க்கக்கூடாது என்று சிலர் தவறாக நினக்கிறார்கள்.

உண்மையான காரணம் என்னவென்றால், இருட்டில் மிக அதிகமான வெளிச்சத்தோடு பளிச்சென்று தெரியும் டி.வி.யை நீண்டநேரம் பார்க்கும்போது, கண் எரிச்சல் அடைகிறது. இது நம் கண்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க மங்கலான வெளிச்சம் கொண்ட ஒரு விளக்கை எரிய விட்டு, அந்த வெளிச்சத்தில் டி.வி. பார்த்தால் நல்லது''

ரெப்ரிஜிரேட்டரில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள் எத்தனை மணி நேரம் வைத்திருந்தால் ருசி கெடாமல் இருக்கும்?
''என்னுடய தனிப்பட்ட கருத்து, சமைத்த எந்த உணவுப் பொருளயும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடக் கூடாது என்பதான். ஆனால், வேகமாக மாறி வரும் இந்த உலகில், சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் பலரும் செய்து வருகிறார்கள்.

சமைத்த உணவை எட்டு முதல் பத்து மணி நேரத்துக்கு மேல் வைக்கவே கூடாது. காய்கறிகளை மூன்று நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. காய்கறிகளை கட்டாயம் வெட்டி வக்கக் கூடாது. பழங்களைக்கூட ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வைக்க வேண்டும்.''

காலில் கண்ணாடி குத்திவிட்டதா?
ஓமத்தை வெல்லத்டன் அரைத்துக் கிளறிக் கட்டுங்கள். எவ்வளவு சிறிய துண்டானாலும் வெளியே வந்விடும்.
கைகளில்-கால்களில் ஏற்படும் சுளுக்கு
வெள்;ளைப் பூண்டை நசுக்கிச் சாறு எடுத்துச் சிறிது உப்புத்தூளை அதில் சேர்த்துக் கையிலோ காலிலோ தடவினால் சுளுக்குப் போய்விடும்.

நல்ல ஆரோக்கியத்திற்குப் பச்சரிசி நல்லதா? அல்லது புழுங்கலரிசி நல்லதா?

பச்சரிசி பத்தியத்திற்கு விலக்கான. வாத, பித்த, கப நோய்கள உண்டாக்கும் தன்மை கொண்டது. பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது மிகுந்த பலத்தை அளிப்பது.
ஆனால் புழுங்கல் சிறுவர் முதல் அனைவருக்கும் நல்ல உணவாகும். வயிற்றுக்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது. பத்தியக்காரர்களுக்கு இந்த அரிசியில் சமைத்த உணவையே கொடுக்க வேண்டும். உடலுக்குப் போதிய வலிமையத்தராது என்றாலும் உடல் நலத்தைப் பொறுத்த வரையில் புழுங்கல் அரிசியே மிகவும் சிறப்புடையதாகும்.
எனவே, பச்சை அரிசியை விடவும் புழுங்கல் அரிசியில் தயாரித்த உணவையே உண்ணுவது சிறப்பானதாகும். வாத பித்த கப நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் புழுங்கல் அரிசிக்கே உண்டு. ஆதலால் நோயாளிகள் குறிப்பாக வாத நோயாளிகள் புழுங்கள் அரிசியில் செய்யப்பட்ட உணவையே உண்ண வேண்டும்.
------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP