குறைப் பிரசவத்தினைத் தடுக்க...
>> Wednesday, February 7, 2007
குறைப் பிரசவத்தினைத் தடுக்க...
ஒரு பெண் கர்ப்பம் தரித்து 9 மாதம் கழித்து குழந்தை பிறக்கும் நிலையில் பிரசவம் எளிதானதாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
அதோடு மட்டுமன்றி கர்ப்பக் காலத்தில் கருக் குழந்தைக்கு அந்தந்த காலக்கட்டத்தில் உருவாகக்கூடிய உறுப்புகளும் முழுமையாகவே பெரும்பாலும் சரியாக அமைந்து பிறந்து பிரச்சினைகள் இருக்காது என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
மேலும் அவர்கள் கூறுவதாவது...
குறைப்பிரசவத்தினால் குழந்தைகளின் கண்ணிற்கு பாதிப்பு வரும். குறை மாதத்தில் பிறக்கும் நிலையில் விழித்திரை ரத்தக் குழாய்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் ரத்தக்குழாய்கள் சீராக இல்லாமல் புதிய ரத்தக் குழாய்கள் தோன்றி அவற்றிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கும்
இதனால் விழித்திரை சுருங்கி இயல்பான அமைப்பிலிருந்து மாறுபடும்.
இதற்கு கண் மருத்துவத்தில் ரெடினல் டிடச்மென்ட் Retinal Detachment) குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஒரு மாதம் கழித்து விழித்திரைச் சோதனை (Retinal Examinatibn)
செய்ய வேண்டும்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கிய காலகட்டமாகும். இக்காலத்தில் தாய்க்கு ருபெல்லா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் கருவில் குழந்தைக்குத் தேவை இல்லாத பிரச்சினை உண்டாகும்.
மூளை வளர்ச்சி பாதிப்பிலிருந்து இதயத்தில் ஓட்டை, கண்புரை வருவது வரைக்கும் வாய்ப்புகள் அதிகம். கண்நீர் அழுத்த நோயும் (க்ளாக்கோமா) ஏற்படலாம். சக்கரை நோய் பிரச்சினை தாய்க்கு இருந்தால் பிறக்கும் குழந்தைக்குக் கண்புரை வர சாத்தியம் உண்டு.
அதனால் கர்ப்பகாலத்தில் தாய் தனது உடலில் சர்க்கரை அளவை பரிசோதித்து அளவான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
எளிய ரத்தப்பரிசோதனை மூலம் குழந்தைப் பருவத்தில் தனக்கு பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை கல்யாணத்திற்கு முன்பாக மணமகள் அறிந்து கொண்டு, இல்லையென்றால் திருமணத்திற்கு முன்பாய் தடுப்பூசி போட்டு கொண்டு விட்டால் ருபெல்லா வைரஸ் காய்ச்சலிலிருந்து தப்பலாம்,குறைப் பிரசவக் கோளாறினையும் தடுக்கலாம்.
----------------------------------
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
0 comments:
Post a Comment