துன்பங்கள் என்பவை?
>> Friday, February 9, 2007
துன்பங்கள் என்பவை?
பயிற்சிக் களங்கள்.
பயிற்சிக் களங்கள் என்றால்?
புத்திசாலிதனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச்செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.
தோல்வி என்பது?
வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.
வெற்றியைத் தொட இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு தோல்விகள்.
சாதாரண மனிதர்களின் பாசமெல்லாம் வேஷம் என்பது சரிதானா?
நிச்சயம் தவறல்ல.
ஜாங்கிரி விரும்பிச் சாப்பிடப்படுவது. அதை
ஜாங்கிரி என்பதால் அல்ல. அதன் இனிய சுவையால்!
சாதாரண மனிதனின் பாசம் என்பது இன்னொரு மனிதர் என்பதால் அல்ல. அவரின் பொருள் சொல் உடல் குணம் ஆகியவற்றின் இனிய சுவைக்காகத் தரும் கூலி மட்டுமே.
காதலர்கள்?
அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துர்அதிர்ஷ்டசாலிகள்.
இன்றைய தம்பதியர்?
துர்அதிர்ஷ்டசாலிகள் என நம்பிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.
யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?
எங்கிருந்தாலும் ஏங்காமல் இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.
மரணம்?
முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் துவக்கம்.
உடல்?
உயிர் மீது போடப்பட்ட சட்டை.
நாம் யார்?
இறைவனின் சொக்கட்டான் காய்கள்.
---------------------------
தன் மகன் பெரிய இசைக் கலைஞனாக்க வேண்டும் என்று அந்தப் பெற்றோருக்கு ஆசை. அவனுக்கு எந்த இசைக் கருவி பிடிக்கிறது என்பதற்காக ஒரு காரியம் செய்தார்கள்.
அவனுக்கு ஐந்து வயதாகும்போது ஒரு வயலினை பரிசளித்தார்கள். அந்த வயலினை வைத்து மகன் விளையாடுகிறானா என்று கவனித்தார்கள். முதல் இரண்டு நாட்கள் மகனுக்கு வயலின் மேல் பெரிய ஆர்வம் வரவில்லை. மூன்றாவது நாள் அவனது அறையைப் பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி. வயலின் தனித்தனி பாகங்களாக கழற்றப்பட்டுக் கிடந்தது.
மகனுக்கு வயலின் பிடிக்கவில்ல என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் அவனுக்கு கிதாரை வாங்கிக் கொடுத்தார்கள். அதுவும் நான்காவது நாள் பிரித்துக் கிடந்தது.
அடுத்து ஒரு மௌத் ஆர்கனை வாங்கிக் கொடுத்தார்கள். அதற்கும் அதே கதி.
பெற்றோருக்குப் புரியவில்லை. ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து காரணம் கேட்டார்கள்.
'உங்கள் மகனை இசைக் கலைஞனாக மாற்ற முயலுவதைவிட ஒரு இன்ஜினீயராக உருவாக்க முயலுங்கள். அவனுக்கு அதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்றார் அவர்.
உண்மையில் பிற்காலத்தில் அப்படித்தான் நடந்தது.
0 comments:
Post a Comment