**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிக்கனமா? - வரவு எட்டனா!! சிலவு பத்தனா!!! கடைசியில் தொந்தனாவா???

>> Thursday, February 8, 2007

சிக்கனமா? - வரவு எட்டனா!! சிலவு பத்தனா!!! கடைசியில் தொந்தனாவா???

வாழ்க்கையில் சிக்கனம் என்பது எக் கணமும் கடைபிடிக்கவேண்டிய தங்க விதிகளில் தலையாய விதி ஆகும்!

வருவாய் என்ன, எவ்வளவு நாம் அதில் செலவு செய்தது போக, மிச்சப்படுத்தவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழகிட இளைஞர்களுக்கும் நாம் சொல்லிக் கொடுத்துப் பழக்குதல் மிகவும் தேவையான பணியாகும்!

பலருக்கு எப்போதும் பற்றாக்குறை `பட் ஜெட்’தான்; ஏன் அவர்களுக்கே புரிவதில்லை!

`பற்றாக்குறை பட்ஜெட்’ போடும் உரிமை அரசுகளுக்கு மட்டுமே இருக்கவேண்டிய உரிமையாகும்.

அதனைத் தனி மனிதர்கள் பயன்படுத் தினால், திக்குத் தெரியாத காட்டில், திசை மாறி அலைந்து கொண்டிருக்கும் நபர்களாகவே `அல்லாட’ வேண்டிவரும்.

``100 ரூபாய் வரவு என்றால், நீங்கள் அதில் 99 ரூபாய் செலவு செய்துவிட்டு, மிச்சமாக ஒரு ரூபாயை வைத்திடும் பழக்கத்தை - சிக்கனத்தின்மூலம் சேமிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்; பிறகு உங்கள் குடும்ப நிலை, தானே உயர்ந்திடும்’’

உங்களுக்கு அதிக வருவாய் வராவிட் டாலும் பரவாயில்லை; வருகின்ற வருமானத்தில் பயனுள்ள செலவுகளுக்கு ஒதுக்கிவிட்டு, மற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால், வருவாய் பெருகியதாகவே உணர முடியும்.

நம் வருவாய்க்குள்பட்டு செலவழிக்கப் பழகும் எவருக்கும் எப்போதும் நிம்மதி - மன நிறைவு உண்டு. கடன் தொல்லை என்ற கவலை அவர்தம் தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தைத் தராது!

வாழ்க்கையின் முதல் பொருளாதாரப் பாடமே, நாம் எவ்வளவு வருவாய் பெறுகிறோம்; அதை எப்படி நாளும் செலவழிக்கிறோம் என்று குறிப்புகளை ஒரு சிறு குறிப்பேடு போன்ற பையில் அடங்கும் சிறு `பாக்கெட் நோட்டை’ வைத்து அன்றாடம் செலவழிப்பதை அதில் ஒவ்வொரு முறையும் குறித்துக் கொண்டால் மறக்காமல் பதிவு ஆகும்.

ஒரு பெரு வணிகர். அவருடைய பழக்கம் எப்போதும் ஒரு சிறு தாளில் மடித்து சிறிதாக அதை வைத்துக் கொண்டு செலவு களை உடனுக்குடன் குறித்துக் கொள்வார்!

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத் தினைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு இத் தகைய பழக்கம் பிறவிப் பழக்கம்போல இருக்கும்!

நாம் செலவழிக்கும் தொகைகளை எழுதிப் பார்த்தால் தான் எது தேவையான செலவு, எது வீண் செலவு - என்று புரிந்துகொண்டு அதற்கேற்ப நம்மைத் திருத்திக் கொண்டு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படக் கூடும்.

சிலருக்கு வருகின்ற வருவாய் என்ன என்பதுபற்றியும் தெரியாமல், எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதுபற்றியும் தீர யோசியாமல் `டம்பாச்சாரித்தனம்’ செய்தால், பிறகு வாழ்வில் அவமானப்பட்டு தெருவில் நிற்கவேண்டியதாகி விடும் அவல நிலை ஏற் பட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எதற்கும் எல்லை உண்டு அல்லவா? அதுபோல, வருமானம் என்றாலும் அது அளவினைக் குறிப்பதுதான் என்பதை உணர்ந்தவர்கள், தேவையானவற்றிற்குச் செலவழித்து, மீதியை மிச்சப்படுத்துவர்.

சிக்கனத்தைப் பற்றி ஒரு தவறான கருத்துக் குழப்பம் பலரிடம் நிலவுகிறது!
`சிக்கனம்’ என்பதைக் `கருமித்தனம்’, `கஞ்சத்தனம்’ என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

`கருமித்தனம்’, `கஞ்சத்தனம்’ என்பது தேவையானவற்றிற்குக் கூட செலவழிக்காமல், தன்னிடம் உள்ள செல்வத்தை சேமித்து மகிழவேண்டும் என்பதற்காக பட்டினி கிடப்பவர் பணக்கார பாமரர்கள்!

தேவையானவற்றிற்குச் செலவழிப்பதும், ஆடம்பரத் தேவைகளை வெறுத்து ஒதுக்கி எளிமையும், ஏற்றமும் மிகும் வாழ்க்கை வாழ்வது சிக்கன வாழ்க்கையாகும்!

அள்ளிக் கொடுக்கவேண்டிய தேவை (தொண்டறப் பணிகளுக்கு) இருப்பின் அள்ளிக் கொடுத்தால் அது ஆடம்பரம், வீண் செலவு ஆகாது! அப்போது அள்ளிக் கொடுப்பதற்குப் பதில் கிள்ளிக் கொடுத்தால் அது கஞ்சத்தனம், கருமித்தனம்.

கிள்ளிக் கொடுக்கவேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தால், அது ஊதாரித்தனம்! உலகம் மெச்ச வேண்டும் என்பதற்காக விளம்பர வெளிச்ச வாணவேடிக்கையுங்கூட!

இவற்றைப் புரிந்து வாழ்ந்து காட்டுவோம் வெல்வோம்!
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP