**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் ? ஆரம்பகால வியாதியை குணப்படுத்த முடியுமாம? எப்படி கட்டுப்படுத்துவது ?.நிறைய கேள்விகள் சந்தேகங்கள்

>> Friday, April 4, 2008

யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் ? வாய்ப்புகள் அதிகம்? ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்கிறார்களே அது உண்மையா? எப்படி கட்டுப்படுத்துவது?.
நிறைய கேள்விகள் சந்தேகங்கள் -

இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம்.

ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயது: ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

* அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகத் தெரிகிறது.

வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் நீரிழிவு உள்ளவர்கள்

1_20 4

20_40 10

50_60 100

60_70 1000

 இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலினம்

 இளவயது நீரிழிவு நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது.

 முதிர்வயது நீரிழிவு (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.

 பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது நீரிழிவு வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.

 இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 45 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.

திருமணம்

 ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டும் ஆண்களுக்கு நீரிழிவு நோய் அதிகமாக வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட அல்லது குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழும் ஆணுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருவதாகத் தெரிகிறது.

பெண்கள்

 பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட, குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.

 திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.

பிரசவம்

பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் தோன்றுகிறது.

 ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு நீரிழிவு நோய் குறைவாகவும், பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.!

 கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 கருவுறும் போது, அல்லது பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது. நீரிழிவு அதிகம் வர இதுவும் ஒரு காரணம்.

 பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் நீரிழிவு வந்து விடுகிறது.

அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 15% அதிகம் எனவும் தெரிகிறது.

பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தாய்க்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

உணவு

 அதிக கலோரிகள் உள்ள உணவை உண்ணும் சமூகத்தில் நீரிழிவு நோய் பரவலாகக் காணப்படுகிறது.

 கலோரிகள் குறைந்த எளிய உணவையே எப்போதும் உட்கொள்பவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

 இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு இருந்ததால் எளிய உணவையே மக்கள் உண்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததாம்!

 கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.

மன அழுத்தம்

 மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.

 மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு இயக்க நீர் மாற்றங்கள் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இருதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கும் கூட மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது.

 மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக சாக்லேட், சிப்ஸ் போன்றவை. இதனால் உடல் எடை அதிகமாவதும் நீரிழிவு நோய்க்கு ஒரு காரணமாகிறது.

உடல் உழைப்பு

ஓடியாடி உழைப்பவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் வருவதில்லை.

 ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருகிறது.

போதைப் பொருட்கள்

 புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

 மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

பாரம்பரியம்

 நீரிழிவு நோய் முழுக்க முழுக்க ஒரு பரம்பரை நோய் என்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் பரம்பரையில் எவருக்கேனும் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு கணிசமாக உயர்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

யார், யாருக்கு வரும்?

 பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கு

 உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு

 ஆண்களை விட பெண்களுக்கு

இளைஞர்களை விட முதியவர்களுக்கு

ஆண்களில் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு

 பெண்களில் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவர்களுக்கு

 அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு

எடை அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு

 மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு

 உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு

 போதைப் பொருட்களுக்கு அடிமை யானவர்களுக்கு. 
==========================================
ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்கிறார்களே அது உண்மையா? எப்படி கட்டுப்படுத்துவது?
டாக்டர்.வி.பாலாஜி (சர்க்கரை நோய் நிபுணர்)
------------------------------------------------------------
‘‘ஆம். ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்பது உண்மைதான்.

இதற்கு ப்ரீ_டயாபடீஸ் அல்லது பார்டர் லைன் டயாபடீஸ் என்று பெயர். இது IFG (Impaired Fasting Glucose), IGT (Impaired Glucose Tolerance) என இரண்டு வகைப்படும். இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டு செயல்பட்டால் குணப்படுத்திவிடலாம். எப்படி தெரிந்து கொண்டு குணப்படுத்த முடியும் என்கிறீர்களா?

குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, வெறும் வயிற்றில் இருக்கும் போது உங்களின் இரத்த சர்க்கரை அளவு 100க்கு மேல் 125 க்கு கீழ் இருக்க வேண்டும். 125க்கு மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி என்றும் 100_க்கு மேல் இருந்தால் ஆரம்ப கால சர்க்கரை வியாதி என்றும் தெரிந்துகொள்ளலாம்.

இது IFG முறை. அதுவே IGT முறை என்றால் குளுக்கோஸ் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சர்க்கரையின் அளவு 140 மேல் 200_கீழ் என வரையறுத்துக் கொண்டால், 200_ மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி இருக்கிறது என்றும் 140_க்கு மேல் இருந்தால் ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி என்றும் புரிந்து கொள்ளலாம்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆரம்பநிலை சர்க்கரை வியாதியை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைகுறைத்தல், அதி நவீன மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால், முழுமையான சர்க்கரைவியாதியை குணப்படுத்தமுடியாது. கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக பரம்பரைத் தன்மை, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாதது. உடல் பருமன், மன உளைச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால்தான் ஆரம்பநிலை சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. மேலும் ஆரம்ப நிலைதானே என்று சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏனெனில், இதன் மூலம் இதயபாதிப்புகளால் நரம்பு, கண் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
NANDRI TO: KUMUDAM HEALTH.
---------------------------------------
படிக்க:>>
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் - இன்சுலின்.

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

1 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 4, 2008 at 7:42 PM  

பயனுள்ள தகவல்கள். நன்றி

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP