‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது? ஏன் இப்படி பெயர் ? நாவல் பழம் சாப்பிட்டால் ‘மெட்ராஸ் ஐ’ வருமா ?
>> Saturday, April 26, 2008
‘‘1930_ல் கிழக்கிந்திய கம்பெனிக்காக சென்னைக்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் பலருக்கு திடீரென்று இந்தக் கண்நோய் தாக்கியது.
குளிர் பிரதேசங்களில் இந்த நோயைப் பரப்பும் வைரஸ் குறைவு. உஷ்ணப் பிரதேசத்தில்தான் அதிகம். அதனால் மளமளவென இந்த கண்நோய் பரவியதை முதன்முதலாக பார்த்த பிரிட்டிஷ்காரர்கள் மலைத்து விட்டனர். இது என்ன புதுவிதமான நோயாக இருக்கிறதே என்று வியந்து அவர்கள் வைத்த பெயர்தான் ‘மெட்ராஸ் ஐ’.
‘அடினோ’ என்கிற வைரஸ்கள் இந்த நோய்க்குக் காரணம். ஏழு நாள் முறையா சிகிச்சை எடுத்தா தப்பிக்கலாம். இல்லைன்னா ஒருவாரம் அவஸ்தைதான்.
பொதுவாகவே கண்களை நாம் சீண்டினா அதோட ரியாக்ஷன் ரெட்! அதுக்காக சிவப்பாயிட்டாலே மெட்ராஸ் ஐ தானோன்னு நினைச்சிடக் கூடாது. வேற சில பாக்டீரியாக்கள் இன்ஃபெக்ட் ஆகும் போதும் கண்கள் சிவப்பாக மாறும்.
சிவப்புடன் உறுத்தல், வலி, பூளை தள்ளுதல், கண்ணீர் வற்றி கண்கள் உலர்தல் இதெல்லாம் ‘மெட்ராஸ் ஐ’யின் ஸிம்டம். என்னதான் நீங்களும் உங்கள் கண்களும் சுத்தமாக இருந்தாலும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் இது பரவும்.
காற்று, தண்ணீர் என பல விதமா பரவும். சிலருக்கு மூக்கு, தொண்டைப் பகுதிவரை கூட இந்த இன்ஃபெக்-ஷன் பரவும். எதுவானாலும் எல்லாம் ஏழு நாட்களுக்குத்தான்.
டாக்டரைப் பார்த்து அவர் தந்த மருந்தை மட்டும்தான் போடவேண்டும். வைரஸ் இன்ஃபக்ஷனா, பாக்டீரியா இன்ஃபக்ஷனா என்று தெரியாமல் மெடிக்கல் ஷாப் மருந்துகளைப் போடக்கூடாது. சிலருக்கு நான்கு நாட்களில் குணமானாலும்கூட ஏழுநாள் மருந்து போடுவது நல்லது.
பின்விளைவுகள் இந்த நோயில் எதுவும் இருக்காது. வெகு சிலருக்கு விழி வெண் திரையில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
மற்றபடி, ‘நாவல்பழம் தின்பதால் கண்நோய் வரும்’’ என்பது எல்லாம் கட்டுக்கதை. மழைக் காலத்தில் ‘மெட்ராஸ்_ஐ’ பரவுவதற்கு வாய்ப்பான நேரம். அந்த நேரத்தில் நாவல் பழத்துக்கும் சீசனாக இருக்கலாம்.. அதனால் முடிச்சு விழுந்திருக்கும்!
கண்கள் கோவைப் பழம்போல் சிவக்கக் காரணம்... கான்ஜு னீட்வல் என்ற கண்களின் இரத்தக் குழாய்களில் அடினோ வைரஸ் இன்ஃபக்ஷனால் ஏற்படும் அதிகப் படியான இரத்த ஓட்டம்தான் உங்கள் நீலக் கண்களை நெற்றிக் கண்ணாக மாற்றிவிடுகிறது!
படிக்க:>> மெட்ராஸ்_ஐ வந்தால்
http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_13.htm.
------------------------------------------
படிக்க:>> மருத்துவம்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
//1930_ல்?//
1630-ல் என்றிருந்திருக்க வேண்டும் போலிருக்கிறதே.
முக்கியமாக 1857-க்கு பின்னால் கிழக்கிந்திய கம்பெனி இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment