உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில் போனாலும், சில சமயம் டி.வி. பார்த்தால் கூட இதற்கு என்ன காரணம்? இது நோயா?
>> Monday, April 21, 2008
எப்பொழுது சினிமா பார்க்கச் சென்றாலும் சரி; பஸ்சில் போனாலும், சிலசமயம் டி.வி. பார்த்தால்கூட உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? இது நோயா?
பதிலைத் தருகிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.
‘‘முதல் காரணம் ‘இன்ஆக்டிவிட்டி’. அதாவது உடலுக்கு வேலையில்லாமல் சும்மா இருப்பது. அப்படி இருந்தாலே சிலருக்கு உடனடியாகத் தூக்கம் வந்துவிடும்.
இரண்டாவது காரணம், இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருப்பது. நீங்கள் செய்கின்ற வேலையில் ஆர்வம் இல்லா விட்டால் கூட தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகளுக்கு படிக்கும்போது வருவதுபோல்.
இதையெல்லாம் நாம் நோய் என்று சொல்லமுடியாது. நோய் எதுன்னா வண்டியை நாம் ஓட்டும்போது கட்டுப்படுத்த முடியாமல் வரும் தூக்கம்; நம் தினசரி வேலைகளைச் செய்ய முடியாமல் வரும் கட்டுப்படுத்த முடியாத தூக்கம் இவைதான்.
பொதுவாகச் சிலரிடம் கேட்டால், ‘வாக்கிங் போறதுக்கு நேரமே இல்லை’ன்னு சொல்வாங்க. ஆனால் காலையில ஒரு மணி நேரம் ‘இந்து’ பேப்பர் படிப்பாங்க. இதுல என்ன தெரியும்னா உண்மையான காரணம் அவங்களுக்கு ஆர்வமில்லாததுதான். ஆனா அவங்க நினைக்கிறது நேரமில்லைன்னு.
இந்தத் தூக்கத்தையும் அது எப்படி வருது எப்பொழுது வரும்?னு கொஞ்சம் கூர்மையா கவனித்தால் இது நோயா அல்லது இயல்பான்னு தெரிஞ்சுடும். நோயின் சாயல் தெரிஞ்சா மருத்துவரை அணுகுவது நல்லது.’’
-----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment