இஞ்சி இடுப்பழகு! இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
>> Monday, April 7, 2008
இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இஞ்சி இடுப்பழகிகள் என்றெல்லாம் சொல்கிறார்களே அது ஏன்?
சந்தேகத்தை; தீர்த்து வைக்கிறார் மூலிகைமணி கே.வி. பாலாஜி.
''காலையில் தோல் சீவிய இஞ்சியை நசுக்கி ஒரு குவளைத் தண்ணீரில் போட்டு இரண்டு ஏலக்காயும் சேர்த்து நன்றாகக் காய்ச்சி,
பின் வடிகட்டி. சிறிது பாலும் தேனும் கலந்து பருகவேண்டும். மதியம் ஒரு ஸ்பூன் உலர்ந்த இஞ்சித் துண்டுடன் இரண்டு பிடி சாதம், கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்.
மாலையில் கடுக்காய்ப் பொடி அரை ஸ்பூன் பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
இப்படி நாற்பது வயக்குமேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டால் 100 வயதிலும் ராஜநடை போடலாம். நம்ப முடியவில்லயா?
இப்படியே ஒருவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்த மருத்துவ வல்லுனர் தேரையர்தான் அவர். மூப்பின் அடையாளம் கொஞ்சமும் தெரியாமல் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்.
இன்றைய வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்று நீங்கள் நினத்தால்,
பெண்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்:
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.''
எது வசதியோ அதைச் செய் என்றும் இளமையாக இருங்கள். காசு, பணத்தைக் காப்பாற்றாவிட்டால்கூட கடைசி காலத்தில் பெரிதாக வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால் இளமையைத் தவறவிட்டால் அதை ஈடு செய்யவே முடியாது. NANDRI TO: KUMUDAM.
--------------------------------
நம் ஊரில் இருக்கும். இஞ்சி எல்லா நாடுகளிலும் உள்ளது.
இஞ்ச்வெர் (ஜெர் மனி) இஞ்சிபெரா (சுவீடன்) ஜிஞ்சர் (இங்கிலீசு) ஜெஞ்சிவர் (போர்த்துகல்), செஞ்சிபெரிஸ் (கிரீஸ்) ஜென்ஜிபிரி (ஸ்பெயின்), ஜிஞ்செம்பர் (ஃபிரான்சு) ஜியோம்பர் (அங்கேரி), ஜிம்பர் (இத்தாலி), ஜெஞ்சியில் (இஸ்ரேல்) சஞ்சாபில் (பாரசீகம், அரபு நாடுகள்), இன்பிர் (ரஷ்யா), இம்பியர் (போலந்து) என்று இஞ்சியை ஒத்தாற்போலவே பெயர் வைக்கப்பட்டுப் பலப்பல நாடுகளிலும் விளைகிறது.
இதிலுள்ள ஜிஞ்சிபெர் அஃபிசினேல் எனும் வேதிப் பொருள் இடுப்பில் கூடுதலாக இருக்கும் ஊளைச் சதையைக் குறைக்கும் தன்மை நிறைந்தது. அதனால்தான் `இஞ்சி இடுப்பழகா எனும் பாடல் எழுதப்பட்டதோ?
-------------------------------------
படிக்க:>> மருத்துவம்
---------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment