7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழி.
>> Tuesday, April 15, 2008
7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை.
ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால், உங்கள் எடையில் சராசரியாக ஐந்து கிலோ எடை குறையும்.
ஆனால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போல ஏதேனும் நீண்டநாள் பிரச்னை இருக்கிறவர்களுக்கு இது பயன்படுத்தத் தகுந்தது அல்ல.
நல்ல ஆரோக்கியமான நிலையில் வெறும் உடல் எடை மட்டுமே பிரச்னையாக இருக்கிறவர்கள் ஒருமுறை உங்கள் மருத்துவரைச் சந்தித்து விவாதித்துவிட்டு, இந்த உணவு அட்டவணையை ஏழு நாட்களுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
முதல் நாள் : வெறும் பழங்கள். (வாழைப்பழம் தவிர). பழரசம் எதுவும் சாப்பிடவேண்டாம்.
இரண்டாம் நாள் : வெறும் காய்கறிகள். பழங்கள் இல்லை. இந்த இரண்டாவது நாளை ஒரு பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் தொடங்கலாம்.
மூன்றாம் நாள் : அனைத்து பழங்கள் + அனைத்து காய்கறிகள் (வாழைப்பழம், உருளைக்கிழங்கு இரண்டைத் தவிர)
நான்காம் நாள் : எட்டு வாழைப்பழங்கள் + மூன்று கிளாஸ் பால் அந்த நாள் முழுக்க (சர்க்கரை சேர்க்காதது).
ஐந்தாம் நாள் : எட்டு உருளைக்கிழங்குகள் கொஞ்சம் சிக்கன் அல்லது மீன் அல்லது மூன்று முட்டை அல்லது பன்னீர். (காய்கறிகள் இல்லை)
ஆறாம் நாள் : அனைத்துக் காய்கறிகள் மற்றும் அனைத்துப் பழங்கள். (தக்காளி, உருளைக்கிழங்கு தவிர)
ஏழாம் நாள் : அனைத்துக் காய்கறிகள், பழங்கள் வாழைப்பழம் உட்பட சிக்கன், மீன் இல்லை. சிறிய கப்பில் ப்ரௌன் அரிசிச் சாதம்.
இந்த அட்டவணையைப் பயன் படுத்தும் முன் உங்கள் டாக்டரிடம் ஒருமுறை உங்கள் உடல்நிலை பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள்.
ஒருவாரம் சிரமப்பட்டு எடை குறைத்து விட்டு அடுத்த வாரம் சோமாலியாவில் சிக்கித் தவித்துத் தப்பித்ததைப் போல உங்கள் வீட்டு சமயலறையைச் சூறையாடாதீர்கள்.
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்..
_ செந்தில் வஸந்த் NANDRI TO : KUMUDAM.COM
-----------------------
படிக்க:
மருத்துவம்
அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
7 comments:
ஒவ்வொரு வேளைக்கு என்று இல்லையா..
மொத்தமா, அனைத்து பழம், காய்கறி என்றால் என்ன அளவு...
எவ்வளவு எடை குறையும்..
விவரம் சொன்னால் தேவலை.. :P
மதிப்பிற்குறிய TBCD ஐயா அவர்களுக்கு,
கட்டுரை KUMUDAM.COM ல் பதிக்கப்பட்டிருந்தபடியே இங்கு அளிக்கப்பப்பட்டிருக்கிறது.
LINK: http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-09/pg26.php
//ஒருவாரம் சிரமப்பட்டு எடை குறைத்து விட்டு அடுத்த வாரம் சோமாலியாவில் சிக்கித் தவித்துத் தப்பித்ததைப் போல உங்கள் வீட்டு சமயலறையைச் சூறையாடாதீர்கள்.//
இதுதான் என்னுடைய பிரச்னை. :)))
ஜெனரல் மோட்டார்ஸ் வெயிட் லாஸ் புரோகிராம் என்று கூகிளில் தேடிப்பாருங்கள், இது பற்றி தெரியும்.
இது புதிய வழி அல்ல. ரொம்ப பழசு. எடை குறைந்த அதே வேகத்தில், அதை விட மோசமாக எடை ஏறும், இந்த ஒரு வாரத்துக்கு பின் ரொம்பவே கட்டுப்பாட்டிலிருந்தாலொழிய... ஜாக்கிரதை.
கடுகு.
http://www.google.com/search?q=general+motors+weight+loss+program&rls=com.microsoft:en-us&ie=UTF-8&oe=UTF-8&startIndex=&startPage=1
ஜெனரல் மோட்டார்ஸ் வெயிட் லாஸ் புரோகிராம் என்று கூகிளில் தேடிப்பாருங்கள், இது பற்றி தெரியும். இது புதிய வழி அல்ல. ரொம்ப பழசு. எடை குறைந்த அதே வேகத்தில், அதை விட மோசமாக எடை ஏறும், இந்த ஒரு வாரத்துக்கு பின் ரொம்பவே கட்டுப்பாட்டிலிருந்தாலொழிய... ஜாக்கிரதை. கடுகு.காம்
ஜெனரல் மோட்டார்ஸ் வெயிட் லாஸ் புரோகிராம் என்று கூகிளில் தேடிப்பாருங்கள், 1995 இல் அறிமுகமானது. இது புதிது அல்ல. பழையது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கறது சரியாத்தான் இருக்குது.உடம்பைக் குறைக்கிறதுக்கு வாஞ்சூரார் ஆலோசனை சொன்னா ஒரே வாரத்துல திரும்பவும் கூடிக்கும்ன்னு பயமுறுத்துனா எப்படி?வயிறு முட்ட திங்கனும்,மேனி நோக உடம்பை வளைக்கனும்,ஓடனும்.இதுதான் நம்ம பாலிசி.
Post a Comment