ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி! இந்தியாவில் எப்பொழுது ஓடத் தொடங்கியது. தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் ?
>> Tuesday, April 15, 2008
வேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.
மாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிகளின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.
நம் நாட்டில் தொடர் வண்டிப் பாதை அமைக்கப்பட்டு தொடர் வண்டி (அந்தக் காலத்தில் புகைவண்டி) ஓடத் தொடங்கியது. 1853-ஆம் ஆண்டில்தான்.
புனே முதல் மும்பையின் தானே வரைதான் முதன் முதலில் வண்டி ஓடத் தொடங்கியது.
அதன்பின் தொடர்வண்டி ஓடியது தமிழ் நாட்டில்தான். வேலூர் மாவட்டம் வாலாஜா முதல் ராயபுரம் வரை ஓடியது.
சென்னையின் வடபகுதியில் இருக்கும் ராயபுரம்தான். 100 மைல் தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் ஓடிக் கொண்டிருந்த தொடர் வண்டி ராயபுரம் நிலையத்தில் நின்று திரும்பியது.
1900-களில் ராயபுரம் பெரிய தொடர் வண்டி நிலையம் (படம்)அப்போதெல்லாம் சென்ட்ரலும் கிடையாது. எழும்பூரும் இல்லை. ராயபுரம் நிலையம் 1907-இல் பெரிய நிலையமாக வளர்ந்த பிறகு கட்டப்பட்டது. சென்ட்ரல் நிலையம். பெயருக்கு ஏற்றாற்போல நகரின் மய்யத்தில் அமைந்தது இருக்கும் நிலையம்.
அதன் பிறகு 1908-இல் கடைசியாகக் கட்டப்பட்டதுதான் எழும்பூர் ரயில் நிலையம். இது இருக்குமிடம் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது. வெடி மருந்துப் பொருள்கள் இங்கு சேமித்து வைக்கப் பட்டிருந்தன. அதன் பெயர் எழும்பூர் ரெடோ.
மழைநீர் துல்லியமாக வடிந்து குழாய்கள் வழியே வழிந்து ஒரு குளத்தில் சேமிக்கப்படும் வகையில் அந்தக் காலத்தில் வடிவமைத்துக் கட்டப்பட்ட நிலையம். அதிலுள்ள படிக்கட்டு மேம்பாலத்தின் வயது 100 ஆண்டுகள்.
அகலப் பாதைத் தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியா ஒன்று. மற்றைய நாடுகளில் இருப்புப் பாதையின் அகலம் 4 அடி எட்டரை அங்குலம் ஆகும்.
நம் நாட்டின் பெருத்த மக்கள் தொகையை மனதில் கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் வடிவமைத்த பாதை ஆறு அடி அகலம் கொண்ட அகல இருப்புப்பாதை. 150 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டுள்ளனர் ஆங்கிலேயர்கள்.
ஆறு அடி என்பது மிகவும் அகலமாக இருக்கும் என்ற கருத்து எழுந்து, அதன் பின்னர் அது அய்ந்தரை அடியாக்கப்பட்டது.அதிக நீளம் உள்ள இருப்புப் பாதைகள் இந்தியாவில் உள்ளன. லட்சக்கணக்கான பணியாளர்களும் கோடிக்கணக்கில் பயணிகளும் பயணம் செய்கின்றனர்.
லாலுபிரசாத் எனும் பிற்படுத்தப்பட்டவர் அமைச்சராகப் பணிபுரியும் இத்துறை 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் அதிசயத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறது.
ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் இந்தச் சாதனையைக் கண்டு மூக்கில் கை வைத்துப் பார்க்கின்றனர். அந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் லாலுவிடம் வந்து பாடம் கேட்கின்றனர்.இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் அவரது ஜாதியைக் கூறிக் கிண்டல் எழுதுகின்றன. இது இங்கே பார்ப்பனப் பத்திரிகா தர்மம்! SOURCE: INTERNET.
----------------------------------------------
1 comments:
//தொடர் வண்டித் தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் தெரியுமா?
வேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.
மாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிகளின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.//
Just curious. How the railways in other countries manage this cushion stuff? Do they also use crushed stones?
Post a Comment