**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

>> Wednesday, April 23, 2008

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காய்ச்சல் வருவது எல்லாம் எதனால்?

சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறார் பிரபல குழந்தை நல மருத்துவர் விஸ்வநாத்.

‘‘இதற்கு முக்கியமான நான்கு காரணங்கள் அலர்ஜி, சுற்றுச்சூழல் பாதிப்பு, இன்ஃபெக்ஷன், நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது.

நம் வீட்டில் உள்ள டஸ்ட் குழந்தைகளுக்கு முதல் எதிரி. அதேபோல் கல்யாணவீடு, பொருட்காட்சி, தியேட்டர் என்று குழந்தைகளை நெரிசல்மிக்க இடங்களுக்குத் தூக்கிச் செல்வது அலர்ஜிக்கு ஒரு காரணம். இது எல்லாவற்றிற்கும் மேலாக டெடிபியர் போன்ற புசுபுசு பொம்மைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குழந்தைகள் தூங்கும் பழக்கம் ஆரோக்கியமானதல்ல.

அதேபோல் கொசுவத்தி, ஊதுபத்தி புகை முதல் நாம் உபயோகிக்கும் செண்ட், ஸ்ப்ரே எல்லாம் குழந்தைகளின் சுவாசத்தைப் பாதிக்கும் சமாச்சாரங்கள்.

இன்ஃபெக்ஷனைப் பொறுத்தவரை முதல் ஆபத்து ஃபீடிங் பாட்டில்கள்தான்.

நன்றாகச் சுத்தப்படுத்த முடியாத பால் பாட்டில்கள் குழந்தைகளின் நிரந்தரத் தொல்லைகளுக்குக் காரணமாகின்றன.

குழந்தைகள் வளர வளர ஆரோக்கியம் பெருகுவதற்கு பதில் நோய்கள் பெருக முக்கியக் காரணம், பிறந்த முதல் நான்கு நாட்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்காதது தான்.

குறைப் பிரசவத்தாலும் சிசேரியனாலும் அவதிப்படும் தாய்மார்கள் சீம்பால் எனப்படும் முதல் நான்கு நாட்கள் சுரக்கும் தாய்ப்பாலை குழந்தைகளுக்குத் தர முடியாத பொழுது, நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்குக் குறைவாகிவிடுகிறது.

இன்ஃபெக்ஷனுக்கு இன்னொரு காரணம், அஃபெக்ஷன்... குழந்தைகளை சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

இந்த அடிப்படைக் காரணங்களில் நாம் போதுமான கவனம் செலுத்தினால் குழந்தைகளின் சளி, காய்ச்சல் தொல்லைகளை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் இரத்தத்தில் உள்ள காமா குளோபுவின் என்ற அணுக்களின் குறைபாடு இதற்குக் காரணமாக இருக்கும்.!’’

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP