அதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் ! ! அளவுக்கு மிஞ்சினால் ?
>> Wednesday, April 9, 2008
பொதுவாக மருத்துவம், உடல்நலம் காப்பதற்குரிய சிறந்த வழிமுறைகள் பற்றிய பல கருத்துகள் - முன்பு கூறப்பட்டவை - தற்போது சரியானதல்ல என்ற ஆராய்ச்சிக் கருத்துகளால் மறுக்கப்படுகின்றன.
அறிவியல் என்பது அவ்வப்போது ஆய்வுக்குட்படுவதோடு, வளரும் வாய்ப்பு வசதிகள் மருத்துவக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அணுகுமுறைகளுக்கு ஏற்ப, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக உள்ளன.
எடுத்துக்காட்டாக, காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர், ஒன்றரை லிட்டர் தண்ணீர் (வெறும் வயிற்றில்) குடிப்பது ஒரு சிறந்த நீர் மருத்துவமாகும். (Water Therapy) என்று கருதப்பட்டு, ஜப்பானில் பலரும் இதனைச் செய்கின்றனர் என்று கூறப்பட்டு, நம்மில் பலரும் இதனை நாளும் கடைபிடிப்பவர்களாக உள்ளோம்.
ஆனால், அண்மையில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜி (American Society of Nephrology) யின் ஆராய்ச்சி ஏட்டில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை இதனை அடியோடு மறுப்பதோடு,
இதனால் பயன் விளையாதது மட்டுமல்ல, தீய விளைவும் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறது.
இரண்டு சிறுநீரகங்கள் (Kidney)க்கு அதிகமான வேலை பளுவைத் தந்து கெடுதியை ஏற்படுத்துகிறது.
பழுதடையும் வேகமான வாய்ப்பை அது உருவாக்கும் அபாயம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்டான்லி கோல்ட் பார்ஃப் (Stanley Gold Farb). இவர் ஒரு சிறுநீரகத் துறை நிபுணர். இவரும் இவரது சக பேராசிரியர் டாக்டர் டான் நிகோயானு (Dan Negoianu) இருவரும், உட்கொள்ளும் திரவப் பொருள்களால் சிறுநீரகத்திற்கு ஏற்படும் விளைவுகள்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளனர்.
அதில் நான்கு வகையான, தவறான மூட நம்பிக்கைகள் - நீர் அதிகம் அருந்துவதுபற்றிய கருத்துகளை வெறும் புரட்டுகள் என்று தெளிவாக்கியுள்ளனர்.
1. முதலாவதாக, சிலர் பசியைப் போக்கிக் கொள்ள நீர் அருந்துவது சரியான வழி என்று கருதி, பசி நேரத்தில் தண்ணீரை ஏராளம் குடிக்கின்றனர்.
அதனால் பசியைத் தடுக்கிறது என்று கருத்துக்கு தெளிவான சாட்சியம் - ஆதாரம் ஏதும் இல்லை என்கின்றனர் இப்பேராசிரியர்கள்.
பசியை அடக்கும் ஆர்மோன்களை, அப்படி குடிக்கும் தண்ணீர் உருவாக்க உதவுவதில்லை. இரப்பை குடல் வழியாக அது சென்றவுடன், நீர் வேகமாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பசி வந்தால் தண்ணீர் குடித்தால் அது பசியைக் களையும் என்பது சரியல்ல.
2. இரண்டாவது மூட நம்பிக்கை, அதிக நீர் அருந்துவதால், உடலில் உருவாகும் விஷச் சத்துக்கள் (Toxins) கழிவுகளாக உடலிலிருந்து விரைந்து வெளியேற வாய்ப்பு ஏற்படுகிறது என்ற நம்பிக்கை,
சிறுநீரகம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறியாததன் விளைவுதான் இப்படிப்பட்ட நம்பிக்கை என்கிறார் டாக்டர் கோல்ட் பார்ஃப்.
நாம் நிறைய தண்ணீர் குடித்தால், அது சிறுநீராக வெளியேற்றிடும் வகையில் சிறுநீரகம் இயக்குகிறதே தவிர, கூடுதலான உடலில் உள்ள விஷச் சத்துக்களை (டாக்சின்களை) வெளியேற்றும் வேலையை அது செய்வதில்லை.
3. மூன்றாவது மூட நம்பிக்கை, தண்ணீர் குடித்தால் அது தலைவலியைப் போக்கும் என்பதாகும் என்று கூறுகின்றனர் அப்பேராசிரியர்கள்!
தலைவலி நிற்பதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் தலைவலி நிற்காது!
(உயரமானவர்கள் குனியாமல் சென்று நமது வாசல் நிலைகள் தலையில் முட்டிக் கொண்டால், சற்று உட்கார்ந்து போங்கள் என்று கூறுவதோடு, ஒரு குவளை நீர் குடித்துவிட்டுச் செல்லும்படி சொல்வதும், செய்வதும் எப்படி ஒரு பழக்கவழக்க மூட நம்பிக்கையோ அதுபோன்றதுதான் இதுவும்).
4. நான்காவதாக, தோல் - சருமத்திற்கு இப்படி அதிக தண்ணீர் குடிப்பது நல்லது என்ற மூடக் கருத்தும் ஒரு புரட்டுதான் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அதற்கும், தோலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என்றாலும், 8 குவளை தண்ணீர் 24 மணிநேரத்தில் அருந்துவது அவசியம்தான்!
எதையும் அளவோடு செய்தல் வாழ்க்கைக்கு முக்கியம்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே? NANDRI: VIDUTHALAI.COM
----------------------------------------------
முதலில் இந்த >> http://vanjoor-vanjoor.blogspot.com/
இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள் .
நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..
படித்துவிட்டு சிரமம் பாராது கருத்துகளை தெரிவியுங்கள்.
----------------------------------
படிக்க:>> மருத்துவம்
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.
உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.
----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
-------------------------------------------------------------
0 comments:
Post a Comment