**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?

>> Tuesday, April 8, 2008

ஒற்றைத் தலைவலி என்பது இப்போது பலரையும் தாக்குகின்ற நோயாக உள்ளது.

இது நீர்க்கோர்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

அதாவது நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகி குடலுறிஞ்சிகளால் சத்துகள் உறிஞ்சப்பட்டு பித்த நீர் பித்தப் பையில் போகும். திப்பி மலக் குடலுக்குப் போகும்.

கழிவு நீர்கள் வியர்வையாக சிறுநீராகப் பிரியும். அப்படி பிரியும் கழிவு நீர்கள் சில சமயம் தசை நார்களுடன் சேர்ந்து கீழே போகாமல் மேலே போய்விடும்.

இது தலையில் மூளைக்குள், மண்டை ஓட்டுக்கும் நடுவிலுள்ள பகுதியில் தங்கி கீழே இறங்க முடியாமல் அப்படியே தங்கிவிடும்.

இந்த கழிவு நீர்கள் தான் தசை நார்களை தாக்க ஆரம்பிக்கும். அதனால் அத்துடன் பக்கத்திலுள்ள நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும். இதுவே வலியாக மாறிவிடும்.

தலைவலி பல வகைப்படும்
1. ஒற்றைத் தலைவலி
2. இரட்டைத் தலைவலி
3. மண்டையிடி
4. மண்டைக் குத்தல்
5. தலைபாரம்
.

இவ்வாறு பல வகையாக பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்ற வகையில்தான் இவை இருக்கின்றன.

ஆகவே, தலைவலி வராமல் நமது உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க...

அதிக குளிர்ச்சி தருகின்ற உணவு வகைகளை அல்லது பழச்சாறு வகைகளை குறைத்து அல்லது அறவே நீக்கிவிட வேண்டும்.

அதைப் போல அதிக சூடு உண்டு பண்ணுகின்ற உணவு வகைகளை அல்லது குளிர்பானங்களை (அய் ஸ் வாட்டர்) போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

மேலும் குளிர்ச்சியைத் தருகின்ற உணவு வகைகளை குறைத்துச் சாப்பிடவேண்டும்.

குறிப்பாக முள்ளங்கி, முட்டைக் கோசு, பீட்ருட் இவற்றை அளவுடன் சாப்பிடவேண்டும்.

இப்படி உணவு முறைகளில் கட்டுப்படாத ஒற்றைத் தலைவலியை எளிய சித்த மருத்துவ முறைப்படி எளிதாக குணப்படுத்திவிடலாம்.

பல வகையான மருத்துவ முறை இருந்தும் நமக்குத் தெரிந்த சில முறைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர குணம் ஏற்படும்.

மெல்லிய ஊசி எடுத்து அதன் முனையில் ஒரு மிளகைக் குத்தி நெய்யில் நனைத்து அப்படியே நெருப்பில் காட்டினால் புகை வரும்.

இந்தப் புகையை மூக்கின் நுனியில் வைத்து இழுக்கும்போது தும்மல் வரும்.
இத்துடன் உடம்பில் வியர்வை வரும். தொடர்ந்து சில நிமிடங்கள் செய்ய தலைவலி நோய் குறைந்துவிடும்.

ஓர் எலுமிச்சம் பழத்தின் தோலை மட்டும் எடுத்து நன்றாக மைபோல அரைத்து வலியுள்ள பக்கத்தில் ஒரு ரூபாய் அகலத்திற்கு கனமாக வட்டமாக ஒரு பற்றுப் போட்டுவிட்டால், கால் மணிநேரத்தில் ஒற்றைத் தலைவலி போய்விடும்.

வெற்றிலை, நல்வேளை இலை, அருகம்புல் இம்மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சேர்த்து கசக்கிப் பிழிந்தால் வருகின்ற சாறை எந்தப் பக்கம் வலியுள்ளதோ அதற்கு எதிர்பக்கம் காதில் சில துளிகள் விடவும்.

இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வர குணமாகும்.

அரிவாள் மூக்குப் பச்சிலையை தேவையான அளவு எடுத்து அத்துடன் சுக்கைச் சேர்த்து அரைத்து நெற்றியில் கனமான பற்று போட்டு பின்னர் சாம்பிராணி புகை காட்ட குணமாகும்.

நல்ல நயம் சாம்பிராணியுடன் பூண்டுத் தோலை சமமாகக் கலந்து கரி நெருப்பில் போட்டால் இலேசாக புகை வரும். அதை முகர்ந்து வர குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லியை 300 மில்லி கொதிக்கின்ற வெந்நீரில் இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊறியிருக்கும் கொத்தமல்லியை நன்கு அரைத்து ஊறிய நீரில் கரைத்து வடிகட்டவும்.

சக்கையை மறுபடியும் அரைத்து அதே நீரில் கரைத்து வடிகட்டவும் இதுபோல மூன்று முறை செய்து வடிகட்டிய நீரில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும், மூன்று நாள் சாப்பிட குணமாகும்.

ஜாதி மல்லி இலையை எடுத்து அத்துடன் கொஞ்சம் சுக்குச் சேர்த்து அரைத்து பொட்டில் தடவி தணல் சூடு காண்பித்தால் குணமாகும்.
-- சீ.மா.கு.பெ.ந. விஜயராஜன் SOURCE: INTERNET.
--------------------------------
படிக்க:>> மருத்துவம்
----------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> மருத்துவம்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP