**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நின்று கொண்டே இருப்பவரா? படியுங்கள்

>> Monday, December 31, 2007

மனித இதயம் இடது, வலது என இரண்டு பகுதிகளைக் கொண்டது. சுத்த இரத்தத்தை இடது பக்க இதயம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தக் குழாய்கள் மூலம் அனுப்புகிறது. இக்குழாய்கள் ஆர்ட்டரிகள் எனப்படும் (


தமனிகள்).வலது பக்க இதயத்துக்கு அசுத்த ரத்தம் சிரைகள் மூலம் கொண்டு வரப்பட்டு நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தச் சுத்த ரத்தம் நுரையீரல்களிலிருந்து இதயத்தின் இடது பக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டு உடலில் பாகங்களுக்குத் தமனிகள் மூலம் அனுப்பப்படும்.இந்தச் சுழற்சி எல்லாருக்கும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மனித உடம்பின் கால்களில் தமனிகளும் சிரைகளும் இருக்கின்றன. தூய ரத்தமும் தூய்மையற்ற ரத்தமும் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. கால்களில் தோலுக்கு நெருக்கமாக சிறப்பு சிரைகள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. ஒரு வழிப் பாதையாக ரத்தம் ஓடும் வகையில் தடுப்பான்கள் (வால்வுகள்) உள்ளன. அசுத்த ரத்தம் இதயத்தின் வலது பக்கத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் அப்படிச் செல்லும் வகை யில் தடுப்பான்கள் அமைந்துள்ளன.

எதிர்ப் பக்கத்தில் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கும் போக் குவரத்துக் காவலர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்க்கு இந்தச் சிரைகள் பழுதுபட்டு விடுகின்றன

பாதிக்கப்பட்டவுடன் ரத்த செல்லும் பாதை மாறி எதிர்த் திசையில் ரத்த ஓட்டம் நிகழ் கிறது.இதயத்தின் வலது பகுதிக்குச் செல்ல வேண்டிய அசுத்த ரத்தம் இந்தச் சிறப்பு சிரைகளுக்குள் சென்று விடுகிறது.

தொடர்ந்து சென்று அங்கேயே தங்கி, சிரைகள் புடைத்தும், விரிந்தும் கால்களில்தெரிகின் றன. இந்த வகைப் பாதிப்புக்கு சுருள் சிரை என்று பெயர்.50 முதல் 55 விழுக்காடு வரை பெண்களுக்கும் 40 முதல் 45 விழுக்காடு வரை ஆண்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

தொடர்ந்து நின்று கொண்டேயிருந்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வலி ஏற்படும். பகலிலும் மாலையிலும் இரவிலும் அதிகத் துன்பம் தரும்.

காலையில் சுமாராக இருக்கும்.இதனால் கால்களில் தோல் கறுப்பாகவும், புள்ளிகள் நிறைந்ததாகவும் மாறி விடும். அரிப்பு ஏற்பட்டுப் புண்களும் ஏற்படும். ஆனாலும் ஆபத்தற்ற நிலைதான்.இதைக் குணப்படுத்திட மருந்து எதுவும் கிடையாது. அறுவைச் சிகிச்சை மூலமோ, லேசர் சிகிச்சை மூலமே பாதிக்கப்பட்டப் பகுதிகளை அப்புறப்படுத்தலாம்.

SOURCE: INTERNET. .மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!

மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!
கண்ணாடி ஒரு விந்தையான பொருள். எந்த வடிவத்திலும் அதைத் தயாரிக்கலாம் என்பதே விந்தைதானே!

இது மணலால் செய்யப்படுகிறது என்பது தெரியுமா? கிறிஸ்டலின் சிலிகா எனும் பொருள் நூற்றுக்கு நூறு அடங்கிய மணலால்தான் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மணல் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிடைக்கிறது. மணலால் கயிறுதான் திரிக்க முடியாது கண்ணாடி தயாரிக்கலாம்!

மெசபடாமியாவில்தான் முதன் முதலில் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. கண்ணாடியால் ஆன சிறுமணிகள் (மணிமாலையில் உள்ளவை) முத்திரைகள் கட்டடங்களை அழகுபட அமைக்கும் அலங்காரப் பொருள்கள் கண்ணாடியால் செய்யப்பட்டன.

கிறித்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே இவை செய்யப்பட்டன. இதே கால கட்டத்தில் அமெரிக்காவின் பூர்வகுடிகள் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள்.

கண்ணாடியின் இயற்கையான நிறம் பச்சை, நீலம் கலந்த பச்சை மட்டுமே!

மணலில் மறைந்து கலந்துள்ள இரும்புக் சத்தினால் விளைந்த வண்ணம் இது! கண்ணாடி தயாரிப்பாளர்கள் பல வண்ணங்களில் தயாரிக்கின்றார்கள் உலோகக் கலவையையும் கனிமப் பொருள்களையும் சேர்த்துச் செய்வதால் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கிடைக்கின்றன.

எகிப்து நாட்டில் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி பயன்படத் தொடங்கியது. நீலமணிகள் கண்ணாடியால் உருவாக்கப்பட்டன. மந்திர சக்தி உடையவை எனப் பிரச்சாரம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டன.

ரோம நாகரிக காலத்திலும், °கான்டி நேவியன் நாடுகளிலும் (நார்வே, சுவீடன் போன்ற) பிரிட்டிஷ் தீவுகளிலும் சீனாவிலும்கூட கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. வெனிஸ் நகரத்தின் அருகில் டார்செல்லோ தீவில் ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் கண்ணாடிப் பொருள்கள் செய்யப்பட்டன.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதிய தொழில் நுட்பம் புகுந்தது. வெள்ளைக் கூழாங் கற்களையும் எரித்த செடி,கொடிகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சோடா கண்ணாடி வடக்கு அய்ரோப்பிய நாடுகளில் உருவானது.

நடுக்கடல் நாடுகளில் தயாரிக்கப்படும் (போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு போன்றவை) கண்ணாடிகளைவிட வட அய்ரோப்பிய நாட்டுக் கண்ணாடிகள் வேறுபட்டு இருக்கின்றன.

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடங்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வண்ணக் கண்ணாடி-கள் ஒரு பக்கம் இருந்தாலும் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட கண்ணாடிகள் சாளரங்களில் பயன்படுத்தப்படத் தொடங்கின. இவை கட்டடங்களின் அழகைப் பெரிதும் கூட்டுகின்றன. சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் ஒரு எடுத்துக்காட்டு. இது போலப் பல கட்டடங்களைக் காட்ட முடியும்.

நம் நாட்டவர், எந்தக் காலத்தில் கண்ணாடி செய்யக் கற்றுக் கொண்டனர்?
SOURCE: INTERNET. மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

காற்று தென்றல் வீசினால்...அதே காற்று புயலாக வீசினால்..

>> Sunday, June 3, 2007

காற்று தென்றல் வீசினால்... ''ஆஹா! என்ன இதமாக இருக்கிறது என எழுந்துவர மனதில்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.

அதே காற்று புயலாக வீசினால்... ''ஐயையோ! என்ன பாதிப்பு வருமோ?... என்ற எண்ணம்தான் முதலில் வரும்.

காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்று ஒன்று தான். அது வீசும் விதத்தில் தான் வெளிப்படும் தன்மை மாறுபடுகிறது. வேகமான வீசினால் அது புயல். சாதாரணமாக வீசினால் அது ஆடிகாற்று. இதமாக வீசினால் அது தென்றால். ஆனால் மூன்றுமே காற்றுதான்.
அதன் தன்மையும் ஒன்றுதான்.

இதைத்தான் ஞானிகள் 'நீயும், நானும் ஒன்று' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். 'நானும் அதே ஆனந்த சக்திதான். நீயும் அதே ஆனந்த சக்திதான்' என்று சொல்கிறார்கள்.

காலம் காலமாக எல்லா ஞானிகளும் இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.

சுபாவத்தாலே தான் துக்கமயமானவன் என்று நம்புகிறார்கள். அதான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள்ளும் ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால் வெளிப்படும் விதத்தில் அது புயல் போல் இருந்தால் முரட்டுத்தனம் முன்னிற்கிறது.

அதே காற்று இதமாக, மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால் முரடனும் இனிமையான மனிதனாக மாறிவிடுவான்.

இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, தென்றலின் தன்மை கொண்டு பதமாக வந்தால்... அடடா! இந்தக் காற்று நம் கூடவே இருக்காதா?! என்று சொல்லக் கூடிய 'ஞானி'யாக மாறிவிடமுடியும்.

உங்களுக்குள்ளிருந்து பொங்கும் சக்தியும். உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்கு கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே தெரியவரும். அதன் விளைவாக மனரீதியான, உடல்ரீதியான பிரச்னகளும் சேர்ந்து வெளிப்பட்டு விடும்.

அதனால் நம் மனக்கடலில் காற்றின் தன்மையை கட்டுப்பாடுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சாத்தியமே.

இதை வைத்து காற்று கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சொல்ல முடியாது ; கட்டுப்படுத்தப்படவில்ல என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால் அது உள்ளுக்குள் இனிமயான உணர்வுகைளையும், இனிமயான அதிர்வுகளையும் உருவாக்கும்.

அந்த இனிமையான உணர்வும் இனிமையான அதிர்வும் ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கும்.

ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள். தனக்குள் இனிமையாக இருக்கும் நல்ல மனிதரைச் சுற்றி இருப்பதற்கே நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும்.

அதனால்தான் நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி நன்றாகச் சேர்கிறார்கள்.

பொதுவாக எந்த இடத்தில் தென்றல் வீசுகின்றதோ அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.

ஆனால், எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடிவிடுவார்கள். புயலாய்த் தென்படும் முரட்டுத்தனமும் முரண்பாடும் கொண்ட மனிதர்களின் அருகாமையைக் கூட யாரும் விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை.

Business deal செய்தே ஆக வேண்டும் என அதிகபட்சமாக நான்கு ஐந்து பேர்தான் அவரோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.

அப்படிப் பட்டவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.

வாழ்க்கையில் சஞ்சலம், சபலம், தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால் தங்களுக்குள் இருக்கும் மனக்கடலில், புயலின் சூழலை உருவாக்குபவர்களுக்குத்தான் வரும்.

புரிந்து கொள்ளுங்கள். சுழல் உருவாகுவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது அந்த இடத்தில் சக்தியை கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலோ கடல் அமைதியாகும். மனக்கடல் அமைதியானால் போதும். நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள்.. SOURCE: INTERNET.
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது.

>> Saturday, June 2, 2007

நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது.

என் மகனால் எந்தக் காரியத்தையுமே செய்ய முடியவில்லை என்று வந்தான் ஒருவன்.

அப்படியா? எந்தக் காரியங்களை அவனால் செய்ய இயலவில்லை? என்று கேட்டார் .

எதையுமே முடியவில்ல. நான் விரும்புவதை அவனால் செய்ய இயலவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நான் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்லுகிறேன். அப்படியும் அவனால் எதுவும் செய்ய முடியவில்ல.

பிரச்னை புரிந்தது.

சூரியனைப் பார்த்திருக்கிறாயா? காலைச் சூரியன், நடுப்பகல் சூரியன், மாலைச் சூரியன் என்று நிறைய நேரங்களில் சூரியன் தெரிந்தாலும் நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது. தெரியுமா?

ஆமாம் நடுப்பகல்ல தலைக்கு மேல வந்து சுட்டெரிக்கும்.

சரியாகச் சொன்னாய். சூரியன் நம்ம வாழ்க்கைக்கு ரொம்பத் தேவைதான். ஆனால் அதுவே நம் அருகில், தலைக்கு மேலே நின்றிருக்கும் போது நம்மால் வெப்பத்தைத் தாங்க இயலவில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கும் போது தான் நம்மால் செயல்பட முடிகிறது. அது போலதான் பெற்றோரும் பிள்ளகளுக்கு இருக்க வேண்டும்.

வந்தவனுக்கு செய்தி புரிந்தது. SOURCE:>> INERNET.
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்

>> Friday, June 1, 2007

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்

ஞானியிடம் சீடன் கேட்டார், ''குருவே, நான் பொய்யை மிகவும் விரும்புகிறேன். எதையும் நேரடியாய்ப் பேசுவதவிட கொஞ்சம் சேர்த்துச் சொன்னால்தான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி?''

ஞானி, ''மற்றவரை விட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறைகாயாய்க் காண்பித்துக் கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்'' எனச் சொன்னார்.

ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும். ஒவ்வொரு முறை நாம் பொய் சொல்லும்போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு!

மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனி கலையாகத் திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.

இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்கள ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை:

முதல் பாட வேளைக்கான மணி அடித்து பத்து நிமிடம் ஆகியும் கணக்கு வாத்தியார் வரவில்லை.

மாணவர்கள் குறும்பர்கள்.

அதில் ஒரு மாணவன், ''டேய் கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே! ஜுரமா இருக்குமோ!'' என்றான்.

அடுத்த மாணவன், ''கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா சீரியஸ் ஆகி இருப்பாரே!'' என்று சொன்னான்.

இதைக் கேட்ட மற்றொரு மாணவன், 'சீரியஸா இருக்கிறார் என்றால், இன்னேரம் அவர் செத்துப் போயிருக்கலாம்'' என்று சொல்ல,

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே பள்ளி முழுவதும் செய்தி காட்டுத்தீப் போன்று பரவியது.

எனவே பள்ளிக்கு விடுமுறைவிட்டு விட்டு, எல்லோரும் கணக்கு வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினர்.

மாலையும் கையுமாக பள்ளியின் வெளியில் மாணவர்கள் அனைவரும் புறப்பட்டுத் தயாராக நின்று கொண்டிருக்க விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார் கணக்கு வாத்தியார்.

நீங்கள் பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா? என்பது கேள்வியல்ல.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பை விட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து உங்களை உங்களிடமிருந்தே பிரிக்கும் அரக்கனாகும்.

பொய்ப் பேசுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள எதையுமே திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இனி எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைப்படுத்தி என்னைப் பேசச் சொல்லித் தூண்டும் செயலை முழுமையாய் கவனிப்பேன். அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்'' எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள். வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும் மற்றவரும் சேர்ந்து நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும். SOURCE:> INTERNET.
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.

>> Thursday, May 31, 2007

பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. மனக் கவலையோடு வந்தான் ஒருவன்.

'எனக்குப் பிரச்னைகள் அதிகமாகிவிட்டன. எந்தப் பிரச்னையயும் என்னால் தீர்க்க முடியவில்லை.''

''அப்படியா?''

''ஆமாம் . எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருப்பதாகவே தெரியவில்லை. என் பிரச்னைகளுக்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்'' என்றான்.

யோசித்தார். ''என்னுடன் வா'' என்று, அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அவனிடம் ஒரு சல்லடையைக் கொடுத்தார்.

'இந்த சல்லடையைக் கடல் நீரால் நிரப்பு'' என்றார்.

அவன் சல்லடையால் கடல் நீரை அள்ளி அள்ளிப் பார்த்தான். ஆனால் நீர் நிற்கவில்லை. சல்லடைத் துளைகள் வழியே வழிந்தோடியது.

''சல்லடையில் எப்படி நீரை நிரப்ப முடியும்? இது முடியாத காரியம்!''

''இல்லை. முடியும்'' என்று சொல்லி, சல்லடையை கடலுக்குள் தூக்கி எறிந்தார். அது கடலுக்குள் மூழ்கியது.

''இப்போ சொல். சல்லடை முழுவதும் கடல் நீர்தானே இருக்கிறது?''

''இப்படியொரு வழியா?'' என்று, திகைத்து நின்றான் வந்தவன்.

''ஆம். பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் விடை கிடைக்கும்'' என்றார்
SOURCE:>> INTERNET
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?

என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா? ஒரு அம்மா வந்தார். ஒவ்வொரு நாளும் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்துனுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இதுதான். என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?'' என்று கேட்டார்.

''என்னம்மா உன் பிரச்னை. உன் பிரச்னைகளை முதலில் தெளிவாகச் சொல்லம்மா. அப்போதான் உனக்கு என்னால் முடிந்த தீர்வைத் தரமுடியும்'' என்று சொன்னோம்.

அப்போது அந்த அம்மா சொன்னார். 'நான் எதைச் செய்தாலும் அது வினையாகி விடுகிறது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் '' என்று அழத் துவங்கினார்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் இது ஏதோ ஒருவரின் பிரச்னை அல்ல.நம் பெரும்பாலானோரின் பிரச்னையும் இதுதான். நரகவேதனையாக இருக்கிறது.எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று சொல் வதெல்லாம் புரிந்து கொள்ளுதல் இல்லாமல் இருப்பதனால்தான்.

உணவு இருக்கும் இடத்திலிருந்து திரும்பும் வழியில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இந்த வொர்க்கர் ஆன்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.

எறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து Dufour gland எனும் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பிசுபிசுப்புத் தன்மை வாய்ந்தது. worker ants தன் இடம் நோக்கித் திரும்பும்போது இந்தத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாகக் குறிக்கப்பட்டு வரும். தன் இருப்பிடத்தை அடைந்ததும் தன் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும் துணுக்கு உணவினையும் தந்தி antenna வழிச் செய்தியில் பரிமாறிக் கொள்ளும்.

பின் சக நண்பர்களோடு கூட்டாகச் சேர்ந்து உணவு இருக்கும் இடம் தேடி அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும் தன் உடலிலிருந்து திரவத்தை சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக்கொள்ளும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்தத் திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள் தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள் உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவற்றைப் பாதையாக கொண்டுதான் உள்ளே வாழ்வதும் வெளியே சிரிப்பதும் புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது. துக்கமான உணர்வுகள் வந்தால் மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல் நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.

எறும்பின் பிரயாணம் அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொறுத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொறுத்தது.

ஆனந்த மயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி துக்கத்திற்குள் விழ முடியாது.

எறும்பு போல் வேலை செய்யும் துறும்பு மனத்திற்குள் ஆனந்தம் அரும்ப நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளைச் சுரக்கச் செய்யுங்கள். SOURCE:>> INTERNET.
-----------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்

>> Tuesday, May 29, 2007

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்

அந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால் விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம்.

அவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.

அப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்து உயிரைக் காப்பாற்றி விடுமாம்.

எல்லாம் நஞ்சுமயம் ----நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

குடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு. -இழுக்கின்ற மூச்சில் நஞ்சு .
சாப்பிடுகின்ற உணவில் நஞ்சு.இப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில்
.

இதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சு சேர்ந்து அவை சிர்குலைகின்றன. இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.

ஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா?
அதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும். அது என்ன?

பத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 பிடி சாதத்துடனோ பிசைந்து சாப்பிட்டால் போதும். காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லா நஞ்சுகளும் முறியும்.------மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

விளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' ?

>> Monday, May 28, 2007

விளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' ?

கதவு திறக்கிறது. கழுத்தில் ஸ்டெத்தாஸ் கோப்பும், முகத்தில் புன்னகையும் இழைய அவர் வெளியே வருகிறார்.

கசங்கிய ஆடையும், கலங்கிய முகமாய் இருபுறமும் ஒதுங்கி நிற்கும் எளிய மக்கள் அவரைக் கைகூப்பி வணங்குகின்றனர். ஆறுதலும் நட்பும் கலந்த பார்வையை அவர்களுடன் பரிமாறியபடியே அவர்களைக் கடந்து செல்கிறார் அவர்.

கிராமப்புறத்திலும் சரி, நகர்ப்புறத்திலும் சரி, எளிய மக்களுக்கு ''கண்கண்ட தெய்வம்'' இன்றைக்கும் டாக்டர்கள்தான்!

மருத்துவமும், மருத்துவர்களும், மருத்துவத் துறையும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வகிக்கும் சமூகப் பாத்திரம் முக்கியமானது. அதைவிட முக்கியமானது._

இத்தகைய மருத்துவத்தையும், மருத்துவர் களையும் பற்றிய செய்திகளை, விழிப்புணர்வு சார்ந்த கவனத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஊடகங்களின் பங்கு!

ஊடகங்கள் இத்தகைய தங்களின் பங்களிப்பைச் சரியாக செய்கின்றனவா?
சங்கடமான கேள்விதான்.

இருபத்தி ஓராவது தலைமுறையாக தொடரும் 'பரம்பரை வைத்தியசாலை' போன்ற பெயர்களுடன் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரமாய் வெளியிடப்படும் தகவல்கள் ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமானதன்று!

முண்டாசும் குடுமியுமாய் இருக்கும் முதியவர் ஒருவரின் படத்துடன் தொடங்கி, கோட்சூட் டை சகிதமாய் இன்றையத் தலைமுறைக்கேற்ற தோற்றத்துடன் ஒருவர் வர பல்வேறு காலப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் அந்த விளம்பரத்தில் இருக்கும் இருபத்தி ஓராவது தலைமுறையாயிற்றே! அந்த விளம்பரம் என்னவெல்லாம் சொல்கிறது? ''இளைஞர்களே தூக்கத்தில் உங்களுக்கு வெளியாகி விடுகிறதா? சிறுநீருடன் வெள்ளையாக ஏதாவது வெளியேறுகிறதா? கண்களுக்குக் கீழ் கருவளையமா?....''

எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த அப்பாவி இளைஞர்களை பாலியல் கிளர்ச்சி கலந்த சந்தேகங்களுடன் சுண்டி இழுக்கும் இத்தகைய விளம்பரங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களுக்கான பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் பெருகிவழியும் மருத்துவ அபத்தங்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை.

சில மருத்துவக் குறிப்புகள்தான் முறையான கல்வியும், அனுபவமும் பெற்ற மருத்துவர்களின் பெயருடன் வெளியிடப்படுகின்றன.

''வாம்மா... மின்னல்...'' என்பது மாதிரி கண்சிமிட்டும் நேரத்தில் வந்து மறையும் பெயர் தெரியாத மருத்துவப் பத்திரிகைகள் பலவற்றில் இடம் பெற்றிருக்கும் எத்தனையோ கட்டுரைகளிலும், குறிப்புகளிலும், எந்த மருத்துவர் பெயரும் இருப்பதில்லை. யாரோ ஒரு வழிப்போக்கர் போகிற போக்கில் அதை எழுதி இருப்பார்.

பெரும்பாலும் தான் கேள்விப்பட்ட தகவல்களயும், நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறைகளயும் குறிப்புகளாகவும், கட்டுரையாகவும் அவர் எழுதியிருப்பார். அந்தக் குறிப்புகளைப் பார்த்து, தன்னுடய 'சருமத்தை பளபளப்பாக்குவதற்காக' எதையாவது ஒரு பெண் செய்து பார்த்தால்... கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது வெறும் விளம்பரத்தோடும், மருத்துவக் குறிப்புகளோடும் இந்த அபாயம் முடிந்துவிடவில்லை!

முறையான மருத்துவக் கல்வியோ, பட்டப்படிப்போ இல்லாத பலர் 'பிரபல டாக்டர்' என்ற பட்டத்தை தங்களுக்கு தாங்களே சூட்டிக் கொண்டு மேற்சொன்ன 'மின்னல்' பத்திரிகைகளில் பேட்டியும் கொடுத்து விளம்பரமும் கொடுக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. விளம்பரம் கொடுக்காவிட்டால் அவருடைய பேட்டி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவராது என்பது வேறு செய்தி!

இதையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்கள் இல்லையா என்று கேட்கிறீர்களா?

இங்கு எதற்குத்தான் சட்டங்கள் இலலை. சட்டங்கள தெரிந்து கொள்ளு முன்பே அவற்றின் ஓட்டைகளுக்குள் ஊடுருவுவது எப்படி என்பது தெரிந்து கொள்வதானே நமது ஜனநாயக எதார்த்தம்!

ஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்திரிககைகள் மட்டும்தான் இப்படியா?

வலைத்தளங்கள், தொலைக் காட்சிகளிலெல்லாம் மருத்துவம் பற்றிய செய்திகள் மிக நேர்மையோடு வெளியிடப்படுகின்றனவா? என்று அடுத்த கேள்வி எழுவது இயல்பானது. அச்சு ஊடகங்களுக்கு சற்றும் சளைக்காமல் காட்சி ஊடகங்களும், இன்டர்நெட் என்ற மின்னணு ஊடகமும் இந்த அவலத்தை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

இரவு 11 மணிக்கு மேல், அதிகாலையில், முற்பகலில் என்று டி.வி. சேனல்களின் பெரும்பகுதி நேரம் 'மருத்துவச் சேவை' செய்வதில்தான் கழிகின்றது. ஒரே ஒரு ஆறுதல். டி.வி. நிகழ்ச்சிகளில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனகள் வழங்கும் டாக்டர் நேரில் தோன்றுவார். மேலும் எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு 'இது குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு நடை முறைப்படுத்துங்கள்' என்று ஒரு வாசகத்தையும் சேர்த்தே சொல்லிவிடுவார்.

இது மருத்துவ ஆலோசனை கேட்பதன் மூலம் அந்த நேயருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாகக் குறைத்து விடுகிறது.

'நெட்'டில் விரியும் மருத்துவ குறிப்புகளும், அதற்கு தொடர்பானவை என்ற பெயரில் வெளியிடப்படும் சற்றும் தொடர்பற்ற காட்சிகளும் ஒரு சதவீத மருத்துவ நியாயத்தை கூட இந்த சமூகத்துக்கு செய்யப் போவதில்லை என்பதை சத்தியம் செய்து சொல்லிவிடலாம். பாலியல் கிளர்ச்சி ஊட்டுவதன் மூலம் தங்கள் வணிக எல்லையை விரிவாக்கிக் கொள்வதை தவிர இந்த வளைத்தளங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்க வாய்ப்பில்ல.

நாடு, மொழி என்ற எல்லைக்குட்பட்ட கட்டுப்பாடுகளோ, தேவைகளோ வலைத் தளங்களுக்கு இல்லை என்பதால், பிரதேசம் சார்ந்த சமூக அக்கறையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. என்ன ஒன்று... வலைத்தளத்திற்குள் சென்று 'சர்ச்' செய்யவும், 'சாட்' செய்யவும் வசதி இல்லாத வீட்டுப் பிள்ளைகளால் இயலாது என்பதால் இப்போதைக்கு இதனால் பெரிய ஆபத்து அடித்தட்டு மக்களுக்கு இல்லை என்பது ஒரு முரணான ஆறுதல்.

ஆனால் அச்சு ஊடகம் இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது.

முடிவெட்டுவதற்கு சலூனுக்குச் செல்லும் போதும், பேருந்துக்காக, ரயிலுக்காக காத்திருக்கும் போதும், அவற்றில் பயணம் செய்யும் போதும், டீக்கடை, பெட்டிக் கடை என அடித்தட்டு, நடுத்தட்டு சமூகத்தின் அன்றாடத்தோடு பின்னிப் பிணைந்து ஊடுருவிக் கிடப்துபதான் அச்சு ஊடகம். எனவேதான் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பிற ஊடகங்களைவிட பத்திரிகைகளின் பங்கு அழுத்தமானதாக கருதப்படுகிறது.

அதிக பணச்செலவு செய்து தனியார் மருத்துவர்களிடமும் மருத்துவ மனைகளுக்கும் செல்ல முடியாத எளிய மக்கள்தான் பெரும்பாலும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக மருத்துவ நிவாரணம் தேட முயற்சிக்கிறார்கள்.

அப்படி என்றால் மருத்துவச் செய்திகளை வெளியிடுவதில பத்திரிகைகள் எத்தகைய கவனத்தைக் கையாள வேண்டும்?

நமது ஆண் பெண் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 950க்கும் குறைவான பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது என்பது பற்றி எத்தனை கிராமத்துப் பெண்களுக்கு தெரியும்?

பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து கொல்ல முயல்வது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் என்ற விழிப்புணர்வு நமது அடித்தட்டு மக்களில் எத்தனை பேர் அறிவார்கள்?

உயிர் காக்கும் மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் தடையின்றிக் கிடைக்கும் என்ற நிலை இருந்தும் உலகமையச் சூழலால் அவற்றின் விலை எகிறிக் கொண்டே போகிறது என்ற கவலைக்குரிய செய்தியை அவர்களில் எத்தனபேர் அறிவார்கள்?

இந்தியாவில் மட்டுமே உற்பத்தியாகும் எத்தனையோ அற்புத மூலிக மரங்கள், செடிகளின் காப்புரிமை கூட நம்மிடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற விபரீதத்தை இவர்களில் எவ்வளவு பேருக்கு விளங்க வைத்திருக்கிறோம்?

கவலையாக இருக்கிறது.

வல்லரசாக கனவு காணும் இந்தியாவின் மண் வடிவத்தைப் போலவே, தொழில் வளத்தைப் போலவே மனிதவளமும் மிக முக்கியமானது. மனித வளம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை மருத்துவத்தைச் சார்ந்தே இருக்கிறது.

ஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகயை மருத்துவம் பற்றி ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அதைத் தாங்கிப் பிடிக்கும் நான்காவது தூணின் நேர்மையான அக்கறை பற்றி! 
SOURCE:>> INTERNET.
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

போலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .

போலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .

நோய் வந்தால் அதன் காரணம் என்ன என்று ஆய்ந்து பார்த்து அந்தக் ``காரணத்தை’’ப் போக்குவதற்கான மருந்து தந்து குணப்படுத்துவது தான் நோய் தீர்க்கும் முறை. உலகம் முழுவதும் கடைபிடிக்கும் முறை.

இதற்கு மாறாக, சாம்பல் (விபூதி) கொடுத்துக் குணம் ஆக்கும் முறை, தண்ணீர் கொடுத்துக் குணமாக்கும் முறை, மந்திரம் உச்சரித்துக் குணமாக்கும் முறை, தொட்டு குணமாக்கும் முறை என்றெல்லாம் பல மோசடி வழிகளில் நோயைக் குணப்படுத்துகிறேன் என்று ஏமாற்றும் பேர் வழிகள் இந்த நாட்டில் உண்டு.

இந்த மாதிரி மோசடி மன்னர்களை நம்பி மோசம் போகும் மூட நம்பிக்கையாளர்கள் நிறையப் பேர் நாட்டில் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஓர் ஏமாற்று ஆள் பிகார் மாநில மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்குடன் சம்பாதித்து வருகிறார்.

இதனை இங்கிலீசு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளிப்படுத்தியுள் ளது. மூன்று, நான்கு மாதக் குழந்தையை ஒரு தாய் தருகிறார். அதைத் தரையில் படுக்க வைக்கிறார்கள். அதன்மேல் ஏறி நின்று கொண்டு ஒரு ஆள் தன் இரண்டு கால்களாலும் மிதிக்கிறார்.

பின்னர் நகர்ந்து குழந்தையின் தொண்டையில் தன் காலால் மிதிக்கிறார். நோய் குணமாகி விட்டது என்கிறார். இரண்டு அய்ம்பது ரூபாய்த் தாள்களை (நூறு ரூபாய்)க் கொடுத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிப் போகிறார்கள்.
மற்றொரு காட்சி: ஒரு நடுத்தர வயதுப் பெண் படுக்க வைக்கப்படுகிறார். அவரின் வயிற்றின் மீது ஏறி நின்று கொண்டு இந்தப் போலி வைத்தியர் மிதித்துத் துவைக்கிறார். வலி தாங்க முடியாமல் அலறி அழும் அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்டுகிறார்கள். பிறகு போலி வைத்தியர் அந்தப் பெண்ணின் மார்பில் நின்று கொண்டு இரண்டு கால்களா லும் மிதிக்கிறார். அவர் கீழே இறங்கிய பின் அந்தப் பெண் எழுந்து போகிறார். நோய் குண மாகிவிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து போகிறார்.

ஒரு நோயாளியைப் படுக்க வைத்து இருக்கிறார்கள். இதே போலி வைத்தியர் அவர் மேல் ஏறி நின்று குதித்துக் கொண்டே, தன் கையில் வைத்திருக்கும் போர் வாளால் நோயாளியின் வயிற்றுப் பகுதியில் குத்துகிறார். இரத்தம் குபுகுபுவென்று வழிகிறது. கையில் கொஞ்சம் சாம்பலை எடுத்து அந்தக் காயத்தில் வைத்துவிட்டு, போலி மருத்துவர் வாளைச் சுழற்றிக் கூத்து ஆடுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பீதி நிறைந்த கண்களுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் தொலைக்காட்சியில் காட்டினர்.

51 ரூபாய், 101 ரூபாய், 501 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார். நல்ல வரு மானம். முதலீடு மக்களின் மூடத்தனம். தொலைக்காட்சியில் அம்பலப் படுத்தப்பட்ட மோசடியை நல வாழ்வுத் துறையும், காவல்துறையும் கண்டு போலி மருத்துவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். செய்தியைத் தெரிந்துகொண்ட போலி மருத்துவர் காணோம். எங்கோ பதுங்கி விட்டார்.
அவர் பெயர் தல்வார் பாபா. இயற்பெயர் தெரியவில்லை. இவரது மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது அய்.பி.என்., சி.என்.என்., தொலைக் காட்சியாகும். SOURCE:>> INTERNET.
--------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பாதிரியாரிடம் மூன்று கேள்விகள்.

>> Sunday, May 27, 2007

ஒருமுறை மெத்த படித்த மேதாவி ஒருவர், 'கடவுள் கிடையவே கிடையாது' என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காக சென்றிருந்தார்.

பாதிரியாரிடம், ''ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிளை நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு, எனக்குப் புரியும்படி பதில் சொல்லவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.

உடனே அந்த மேதாவி, ''என் முதல் கேள்வி. கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவருடய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.''

இரண்டாவது கேள்வி : ''விதி, விதி என்று சொல்கிறார்களே விதி என்றால் என்ன?''

மூன்றாவது கேள்வி : ''பைபிளில் சொல்லியுள்ளபடி பார்த்தால் சாத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். ஆனால், சாத்தானைத் தண்டிக்க இறைவன் அவனை மீண்டும் நெருப்பிலேயே போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இதுகுறித்து கடவுள் யோசிக்கவில்லயா?'' என்று கேட்டார்.

இந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதான் தாமதம். பாதிரியார் பளார் என்று மேதாவியினுடய கன்னத்தில் அறைந்தார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.

''கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது?'' என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.

அதற்கு பாதிரியார், ''நீ என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால் உன்ன நான் அறையவில்லை. உன்மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீதான், உனக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னாய். அதனால்தான் உன்னை அடிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொல்.

நான் அடித்தபோது உனக்கு வலித்ததா?'' என்று கேட்டார்.

''இது என்ன கேள்வி? வலி உயிர் போய்விட்டது'' என்று மேதாவி பதிலளித்தார்.

''ஓ! அப்படியா? அப்படியானால் நீ வலி இருக்கிறது என்பதை நம்புகிறாய். உணர்கிறாய். ஆனால், எங்கே வலியினுடய உருவத்தைக் காட்டு? இதான் உன் முதல் கேள்விக்குப் பதில்.''

''சரி, என்னுடய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.'' ''நேற்று உன் கனவில் என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா?'' என்று கேட்டார்.

மேதாவி, ''இல்லை'' என்று சொன்னார்.

''சற்று நேரத்திற்கு முன்பு வரை நீ அடி வாங்கப் போவது உனக்குத் தெரியாது. ஆனால் அடி வாங்கிவிட்டாய். இதற்குப் பேர்தான் விதி.''

''இனி, என்னுடய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்''.

''உன்ன அறைந்த என்னுடய கை எதனால் ஆனது?''

''இரத்தத்தாலும், சதையாலும்'' என்று சொன்னார்.

''அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உன்னுடய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் என் கை உன்னை அறந்தபோது, உனக்கு வலித்தது. அதேபோல்தான், தீயில் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.''

இந்தப் பதில்களக் கேட்டு புத்தி பெற்று பாதிரியாருக்கு நன்றி கூறி விடை பெற்றார் மேதாவி.

உண்மயை உணர்வதற்கு அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராதவிதமாக ஒரு பாதிரியார் வந்தார்.

ஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்ல. அந்த மனிதரைப்போல நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்பு கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.

பொறுப்பில்லாதவர்களும் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும் அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது' என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.

'நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்ற ஆழ் மனத் தேடுதலாக இருக்கும் உண்மையை, அனுபவமாக உணரத் துடிக்கும் கேள்விகள் தான் சந்தேகங்கள். SOURCE:>> INTERNET.
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்?

அப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்? கடையிலிருந்து மதியம் களைப்பாய் திரும்பிய தந்தையிடம் மகன் கேட்ட கேள்வி இது.

இது என்ன வெட்டிக்கேள்வி! எரிச்சலுற்றார் தந்தை.

கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்...

அரைமணிநேரம் கடையில் உக்காந்தா நூறு ரூபாய் சம்பாதிச்சுடுவேன். இது மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாதே மறுபடியும் கோபித்தார் தந்தை.

அப்பா, எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்களேன்!

தந்தைக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

பேசாம போய்விளயாடு. உனக்கு எதுக்குப் பணம்? நச்சரிக்காதே! இரண்டாவது படிக்கும் மகனை விரட்டியடித்தார்.

அடிபட்ட பார்வையுடன் மகன் விலகினான்.

இரவு வந்த. மகனைக் காயப்படுத்திவிட்டோமே என்ற உணர்வுடன் வீடு வந்தார் தந்தை. ஏதோ விளயாட்டுப் பொருள் வாங்க அவனுக்கு ஐம்பது ரூபாய் தேவை. அதற்குப் போய் கோபப்பட்டு விட்டோமே என்ற வருத்தம் அவருக்கு.

படுத்திருந்த மகனை எழுப்பினார். இந்தா உனக்கு என்று ஐம்பது ரூபாய் நோட்டு அவனிடம் நீட்டினார். மகன் முகத்தில் அத்தனை சந்தோஷம். சட்டென்று தன் தலையணைக்கடியிலிருந்து இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்தான் அவன். இரண்டையும் சேர்த்து அப்பாவிடம் கொடுத்தான்.

இந்தாப்பா நூறு ரூபாய், என் கூட அரை மணிநேரம் விளயாடறீங்களா?
என்று ஆர்வத்துடன் கேட்டான். SOURCE:>> INTERNET.
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பெண்களுக்கும் வழுக்கை விழுமா?

பெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கே விழுகிறது. பெண்களுக்கும் வழுக்கை விழுமா?

பெண்களுக்கு வழுக்கை விழுவதில்ல என்று சொல்வது தவறு. ஆண்களுக்கு வழுக்கை விழுவது போல பெண்களுக்கும் வழுக்கை விழவே செய்கிறது ஒரே வித்தியாசம் பெண்களுக்கு விழும் வழுக்கை ஆண்களுக்கு விழும் வழுக்கை போல இருக்காது.

ஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் தலையச் சுற்றி மட்டும் முடி இருக்கும். மற்றபடி பொட்டலாகிவிடும்.

ஆனால் பெண்களுக்கு முன்னாடி கொஞ்சம் முடி இருக்கும். நடுவில் காலியாகிவிடும். பின்னாடி கொஞ்சம் முடி இருக்கும். பார்த்தால் பட்டவர்த்தனமாக வெளியே தெரியாது. அவ்வளவுதான்.SOURCE:>> INTERNET.
-------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

உலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.

>> Wednesday, May 23, 2007

உலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.

அவர்கள் இதுவரை 20 நாடுகள்மீது குண்டு வீசியுள்ளார்கள். 1985ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் கார் குண்டைப் பயன்படுத்தி 80 அப்பாவிகளைக் கொன்றார்கள். அவர்கள் 1980-இல் கவுதமாலா நாட்டில் மயன் இனத்தவர்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என்று அய்.நா. நியமித்த கமிஷன் குற்றம் சாட்டியது.

நிலங்களில் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற 1997 கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஒரே ஜி7 நாடு அமெரிக்காதான்.

சதாம் உசேன் இருபது ஆண்டுகளில் கொன்ற ஈராக்கியர்களைவிட அமெரிக்கா அதிகமான ஈராக்கியர்களை மூன்றாண்டுகளிலேயே கொன்றுள்ளது. அதைவிட உலகத்திலேயே புராதனமான நாகரீகத்தை அழித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படுகொலையை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேநேரம் ஈரான் மீதும் தாக்குதல் நடத்த அது தீர்மானித்துள்ளது. சவுதி அரேபியாவுடன் சேர்ந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் பிளவுபடுத்தியுள்ளார்கள்.

யூதர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் ஷியாக்களுக்கு எதிராக சன்னிகளையும் மோத விடுகிறார்கள். இந்தியாவில் சவுதி அரேபியாவிலிருந்து வஹாபி மதப் பிரசாரகர்களை அனுப்பி, அவர்கள் கல்வியறிவு இல்லாத தனித்து வாழும் முஸ்லிம்களைப் பயன்படுத்தி, இந்தப் பகுதியை நிலைகுலையச் செய்ய முற்படுகிறார்கள்.
- ஆமீர் ராஸா ஹுசைன், நாடகக் கலைஞர், ‘த சண்டே இந்தியன்’,
15 ஏப்ரல் 2007

---------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா

>> Friday, May 18, 2007

ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா

யாரங்கே? பர்தாவை ( ‘ஹிஜாப் ‘ / 'அபாயா') வைத்து பொல்லாங்கு கூறும் பொல்லாத அற்பர்கள் எங்கே? எங்கே?-இறை நேசன்
ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-----ஜெஸிலா

என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும் போது என்னில் என்ன பார்க்கிறாய்?


நான் சுதந்திரப் பறவையா? கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா? இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக பிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு?


மேலும் படிக்க... Read more...

குழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா?

>> Tuesday, May 15, 2007

குழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா? (ருசித்துப்பார்க்காமல்) என்று தெரிந்து கொள்ள ஒரு வழி உண்டு.

குழம்பின் மத்தியில் கொதித்துக் கொண்டிருந்தால் உப்பு போட்டிருக்கிறீர்கள் என்றும், பாத்திரத்தின் பக்கங்களில் கொதித்தால் போடவில்ல என்றும் தெரிந்து கொள்ளலாம் SOURCE:>> INTERNET
-------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கும் என்று எப்படித் துல்லியமாகக் கணக்கு எடுக்கிறார்கள்?

இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கும் என்று எப்படித் துல்லியமாகக் கணக்கு எடுக்கிறார்கள்?

துல்லியமாகக் கணக்கெடுக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பழம்பொருட்களின் அடையாளங்கள் விட்டுச்சென்றவை, புதைத்தவை நமக்குக் கிடக்கின்றன. அரிக்க மேடு அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் ஓர் உதாரணம். அவைகளத் தேதிப்படுத்த ரேடியோ கார்பன், தெர்மோ லுமினிசன் போன்ற முறைகள் உள்ளன.

ரேடியோ கார்பன் முறை மிகவும் பிரசித்தமான. அந்தக் காலத்தைச் சேர்ந்த கரி கிடைத்தால்போதும், அதில் சி14 ஐஸோடோப்பின் அளவு, அதன் பழமையப் பொறுத்தது. 5730 வருஷத்துக்குப் பாதியாகக் குறையும். இதை வைத்துக்கொண்டு தேதி குறிக்கிறார்கள். ,

ஒருமுறை. இதனோடு படிம அடுக்குகள் ஃபாஸில் அடையாளங்கள் என்று பலம் சேர்த்து பழமையச் சொல்கிறார்கள். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஆயிரம் வருஷத்துக்குள் அகப்பட்டுவிடும்.- INTERNET
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! -- வ.அரசு.

>> Sunday, May 13, 2007

இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! -- வ.அரசு.

இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.

கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.

பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.

SOURCE:>> http://viduthalai.com/20070512/snews11.htm
----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (WISDOM TOOTH) தேவைதானா?

>> Friday, May 11, 2007

இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (WISDOM TOOTH) தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்க முடியுமா?

பொதுவாக பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது கடைவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.

இதனால் எல்லாம் பிரச்னை இல்லை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது உங்களுக்குப் பிரச்னயை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார். SOURCE: INTERNET
---------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சுகம்?--நிச்சயம் வெளியேயில்லை. துக்கம்?--நிச்சயம் உள்ளுக்குள்தான் இருக்கிறது.

கண்ணிருந்தும் குருடு?--மோகம். காதிருந்தும் செவிடு?--வேகம்.

நாவிருந்தும் ஊமை?--மந்தம். எதுவுமில்லாமல் ஆனந்தம்?--ஞானம்.

சுகம்?--நிச்சயம் வெளியேயில்லை.
துக்கம்?--நிச்சயம் உள்ளுக்குள்தான் இருக்கிறது.

துக்கமில்லா ஆனந்த சுகம் பெறுவது எப்படி?
துக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால் அங்கேயே காத்துக் கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டுக் கிளம்பும்.

நீதி?--அது ஒரு பெரிய அநீதி. அப்படியா! நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்த சமுதாயம்.

அப்படியென்றால் ஒழுக்கம் தவறா? ஒழுக்கம் பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதனுக்கான. ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.

மன்னிப்பு?----வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.---இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

கனிவு?--பணிவு கலந்தது. பணிவு?--கனிவு கலந்தது.

தைரியம்?--பயப்பட வேண்டியதற்கு பயப்பட வேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தைத் தாண்டும் துணிவையும் உள்ளடக்கியது.

பற்று?--நிம்மதியை உறிஞ்சும் அட்டை.

வெற்றி?--இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.--SOURCE: internet
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

கலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்பது எப்படி?

>> Wednesday, May 9, 2007

கலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்பது எப்படி?

ரொம்ப, ரொம்பச் சுலபம். நீங்கள் எந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போடுவதாக இருந்தாலும் சரி, அங்கே பெட்ரோல் ஃபில்டர் பேப்பர் என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தப் பேப்பரில் ஒரு சொட்டு பெட்ரோல ஊற்றினால், நல்ல பெட்ரோலாக இருந்தால் எந்த சுவடையும் ஏற்படுத்தாமல் காணாமல் போய்விடும். ஆனால் கலப்பட பெட்ரோலாக இருந்தால் பேப்பரில் சுவடு தங்கிவிடும்.

இதேபோல டென்ஸிட்டி டெஸ்ட் என்று ஒன்றும் இருக்கிற. பெட்ரோலின் அடர்த்தியை வைத்து நல்ல பெட்ரோலா, கலப்பட பெட்ரோலா என்று சொல்வதுதான் இந்த டெஸ்ட். பெட்ரோலின் அடர்த்தி சரியாக எவ்வளவு இருக்க வேண்டும்? இப்போ எவ்வளவு அடர்த்தி இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எழுதி வைப்பார்கள். அடர்த்தி பற்றி உங்களுக்கு ஏதாவ சந்தேகம் வந்தால், அடர்த்தியை அளந்து பார்க்கும் கருவிகள் அந்த பெட்ரோல் பங்கிலேயே இருக்கும். அதை வைதது; உண்மையை கண்டறியலாம்.

பெட்ரோலையும், டீசலையும் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்சொன்ன இரண்டு கருவிகளையும் உரிமையோடு கேட்கலாம். அந்த பெட்ரோலில் ஏதாவது பிரசினை இருந்தால் உடனடியாக சேல்ஸ் ஆபிஸரின் செல்போனுக்கு (அதையும் பெட்ரோல் பங்க்கில் எழுதிப் போட்டிருப்பார்கள்!) போன் செய்து புகார் சொல்லலாம். அவர் உடனடியாக பெட்ரோல் அல்லது டீசல் எடுத்து, அதைப் பரிசோதனக்கு அனுப்பி பரிசோதித்து, தக்க நடவடிக்கை எடுப்பார். SOURCE: INTERNET.
--------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது

>> Sunday, May 6, 2007

உலகின் முதல் ராக்கெட(ஏவுகணை) தென் இந்தியாவில்இருந்துதான் ஏவப்பட்டது -வ செங்கோ
சீதையின் தலை மயிரை ஒரு கையில் பற்றித் தூக்கித் தன் தொடையில் உட்கார வைத்துப் புஷ்பக விமானத்தில் ஏறிப் போனார் இராவணன் என இராமாயணம் கதைக்கிறது.

வானூர்தியில் சீவகன் பயணம் செய்தான் என சிந்தாமணி கூறுகிறது. வேங்கை மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை வானுலகத்தில் இருந்து வந்து இறங்கிய கோவலன் தன்னுடன் ஏற்றிக் கொண்டு வான்வழியே விண்ணுலகம் சென்றான் என்று சிலப்பதி காரம் சித்தரிக்கிறது. இவையெல்லாம் கதைகள், கற்பனைகள். அளப்புகள். நடப்புகள் அல்ல.

ஆனால் உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் பகுதியில் இருந்துதான் ஏவப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான். மைசூர் புலி என வரலாறு போற்றும் அய்தர் அலியின் மகன்.

பொது ஆண்டு 1790+இல் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தவர் திப்பு.

914 மீட்டர் தூரத்திற்குச் சென்று இலக்கைத் தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகணைக்கு இருந்தது. இதற்குக் காரணம் இதன் கூடு (வெளிப்பகுதி) கனத்த இருப்புத் தகட்டினால் செய்யப்பட்டது. வெடி மருந்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருந்தது. அய்ரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டவைபோல, மரக்கூடு அல்ல.

மராத்தா போர்களில் 18+ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப் பட்ட `ராக்கெட்’டின் உரு ஒன்று ஊல்விக் பகுதியில் ரோடுண்டா விலுள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு அறிவியலாளர், பொறியாளர் என்பதை அறிவோம். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வுக்கு அவர் சென்றபோது ஏவுகணையை எரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் படத்தைப் பார்த்தாராம்; அவர்கள் திப்புவின் சிப்பாய்கள் என்பதை எடுத்துச் சொன்னார்களாம்.

கருநாடகா மாநிலம் சிறீரங்கப் பட்டனத்தில் உள்ள அய்தர் அலி திப்புசுல்தான் நினைவிடங்களில் உள்ள காட்சியகங்களில் அவற்றின் படத்தைக் காணலாம்.-http://viduthalai.com/20070505/snews07.htm
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று கனவிலும் நினத்ததில்லை.

>> Saturday, May 5, 2007

அந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று ஈஸ்வரன் கனவிலும் நினத்ததில்லை.

'சார் எனக்கு பெரிய வசதியெல்லாம் ஒன்னும் கிடையாது. அதனால எனக்கு மருந்துக்கு மட்டும் எழுதி குடுத்திட்டீங்கன்னா நான் வீட்டுலேயே சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கறேன்.''

''நோ... நோ..செலவை பத்தி கவலையை விடுங்க மிஸ்டர் ஈஸ்வரன். முதல்ல உடம்பு குணமாகட்டும்.

இந்த கலியுகத்தில் இப்படி ஒரு டாக்டரா.

''மிஸ்டர் ஈஸ்வரன் நீங்க ரெடியாகிட்டீங்க. நர்ஸ்... சாரோட பில் எமௌண்ட் எவ்வளவு?''

''சார்.. தேர்ட்டி தவுஸண்ட்..''

இதை நீங்க பணமாவே தரணும்னு கூட இல்லை. நான் டெஸ்ட் பண்ணினதில் உங்க ரெண்டு கிட்னியும் நல்லா இருக்கு. அதுல ஒன்னை தானமா கொடுத்தீங்கன்னா மேற்கொண்டு பத்தாயிரம் நாங்க தருவோம்..''

ஈஸ்வரனுக்குத் தலைசுத்த ஆரம்பித்தது. SOURCE: INTERNET
------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்!

கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ “வெறுமையானது”. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும்.

அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது “புதிய” மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.

இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.

சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தை கள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்வர்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள்.

அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும். SOURCE: INTERNET
-------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலுக்கு நல்லதா?

>> Friday, May 4, 2007

பெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலுக்கு நல்லதா?

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத ப்ளாட்டான செருப்பை அணிவதே நல்லது. அரை இன்ச் அளவுக்குப் பின்னங்கால் உயரம் அதிகம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், இரண்டு இன்ச், மூன்று இன்ச் உயரத்துக்கும் அதிகமாக ஹை ஹீல் செருப்பு போட்டால் நிச்சயம் பல பிரச்னைகள் வந்து சேரும்.

முக்கியமாக, இடுப்பு வலி வரும். குதிகால் உயரமான செருப்புகளப் போடும்போது, நம் உடல் எடை முழுக்க பூமியில் நிற்காது. எடைய நம் இடுப்பிலும், கால் பகுதியிலும் முட்டுக் கொடுத்து நமக்கு நாமே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் இடுப்பு வலி, தொடைக்குக் கீழே கால் பகுதிகளில் வலி வந்து உயிரை எடுக்கும்.

மேலும், குதிகால் செருப்பு போட்டு நடக்கத் தெரியாத காலத்தில், கொஞ்சமாக கால் இடறினால்கூட, கால் பகுதியில் பாதிப்பு பலமாக இருக்கும்.

நம்முடய பெண்களில் சிலர், வெளிநாட்டுப் பெண்கள் போல ஸ்டலாக ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் எப்போதும் ஹை ஹீல்ஸ் அணிவதில்லை. வேலக்குப் போகிற பெண்கள் மட்டும் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள்.

குடும்பப் பெண்கள் ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மட்டுமே ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்வார்கள். அவர்களைக்கூட உயரமான குதிகால் செருப்பு அணிய வேண்டாம் என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள்.

அதிகம் சாப்பிடாமல் உடம்பக் கச்சிதமாக வைத்திருப்பதன் மூலமும், தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உடலின் எடைய சீராகப் பராமரித்து அவர்கள் பிரச்சினையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். நம் பெண்களிடம் அது மாதிரியான விஷயங்கள் இல்லாததால் குதிகால் செருப்பை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. ஸ்டைல் என்பது நம்முடைய உடையிலும், செருப்பிலும் இல்லை. நம் மனசிலே இருக்கணும்.
----------------------------------------------------
--மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

வீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். அதைப் போக்க என்ன வழி?

வீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். இத்தனைக்கும் சைவமும் கூட. நாற்றம் ஏன்? அதைப் போக்க என்ன வழி?

ஃப்ரிட்ஜில் காய்கறிகளயோ, பழங்களயோ, அசைவ உணவுகளயோ வைக்க வேண்டும் என்றால், ஒரு பிளாஸ்டிக் பையில் நன்றாக மூடி வைப்பது நல்லது. பால் போன்ற திரவப் பொருட்கள் ஒரு சொட்டு சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை கட்டாயமாக சோப்பு ஆயிலோ அல்லது சோப்புத் தூளையோ கொண்டு முழுவதுமாக, சுத்தம் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜை வாரம் ஆறு அல்லது ஏழு மணி நேரம் திறந்தே வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால் எந்த துர்நாற்றமும் வராது !
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு

ஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சாதனை

மதுரை,மே 4- மனித புரதத்தையும், ஒட்டகப் பாலையும் பயன்படுத்தி புதிய மூலக்கூறு வடிவத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளது.

புரத மூலக்கூறு வடிவம்

இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தகவல் தொழில் நுட்பத்துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கூறியதாவது:-

உயிரி தொழில் நுட்பத்துறை மற்ற துறை படிப்புக்களை போன்று இல்லை. ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பில் அதிக ஈடுபாடு இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒவ்வொரு புரத மூலக்கூறுக்கும் 3 பரிமாண வடிவங்கள்; கண்டுபிடிப்பது உலகில் இன்றைக்கு முக்கியமான ஆராய்ச்சியாக உள்ளது. உலகில் இதுவரை 43 ஆயிரம் புரத மூலக்கூறுகளின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 300 மூலக்கூறுகள மெம்பரரேன் மூலக்கூறுகள் ஆகும்.

மதுரை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ஒட்டகத்தின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட லாக்டோ பெரேன் என்னும் புரத மூலக்கூறையும், மனித உடலில் உள்ள ஈ-கோலை பாக்டீரியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஆம்ப்ஸி என்னும் புரத மூலக்கூறையும் ஒன்றிணைத்து லாக்டோ பெரேன்-ஆம்ப்ஸி காம்ப்ளக்ஸ் என்ற புது மூலக்கூறு வடிவம் கண்டுபிடித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இந்த மூலக்கூறு வடிவத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய மூலக்கூறுகளையும், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் புரத வடிவங்களையும் உருவாக்க முடியும்.

முக்கியத்துவம்

பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு உயிரி தொழில் நுட்பத்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் ஊக்கமளித்து வருகிறது. மருத்துவ ரீதியாக இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மேல் நாடுகளில் அதிக தேவை உள்ளது. அதிக சம்பளத்துடன் உடனடியாக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மருதமுத்து கூறும்போது, இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம். அதிக நிதி ஒதுக்கீடு செய்து பேராசிரியர்களையும், இளம் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கமளித்து வருகிறோம் என்றார்.
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு

>> Thursday, May 3, 2007

நெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு

பச்சை நெல்லிக்கனியில் உள்ள அனைத்து சத்துப் பொருள் களும் அப்படியே அழியாமல் நெல்லி வற்றலிலும் பாதுகாக்கும் திறனை `நெல்லிக்கனி’ பெற்றுள்ளது.

இதனை உண்பதால், உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். திசுக்களில் வாழும் திறன் மீட்சி அடைவதால், உடல் முதுமை அடையும் தன்மை தள்ளிப் போகிறது.

நெல்லிக்கனியைச் சாப்பிடுவதால், அதிலுள்ள வேதிப் பொருள்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரணங்கள், புண்கள், புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கின்றதாம்.
குறிப்பாக வயிற்றில் ஏற்படும் ரணங்கள் விரைந்து ஆறிட நெல் லிக்கனி துரிதமாகச் செயல்படுகின்றதாம்

செழிப்பான, கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருநது;, மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், இதயம், இதய நாளங்கள், கல்லீரல், கணயம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களயும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, 'நெல்லிக்கனி'.

'நெல்லியால் நெடும்பகை போகும்' என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும்.

நெல்லிக்கனி என்பது 'நல்வாழ்வுக்கனி' என்ற உண்மை, அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!

''தினம் ஒரு நெல்லிக்கனி தீர்க்காயுளை அள்ளித்தரும்'' என்பது அனுபவமொழி ஆகும். ---SOURCE: INTERNET
-----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவான தொண்டு.

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவான தொண்டு.

தினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கட்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம். தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது.

மூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந் தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.

இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது

குறிப்பு: கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ள வர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

After Reading THIS, you'll NEVER look at a banana in the same way again

Bananas. Containing three natural sugars - sucrose, fructose and glucose combined with fiber, a banana gives an instant, sustained and substantial boost of energy.

Research has proven that just two bananas provide enough energy for a strenuous 90-minute workout. No wonder the banana is the number one fruit with the world's leading athletes.

But energy isn't the only way a banana can help us keep fit. It can also help overcome or prevent a substantial number of illnesses and conditions, making it a must to add to our daily diet.Depression: According to a recent survey undertaken by MIND amongst people suffering from depression, many felt much better after eating a banana.

This is because bananas contain tryptophan, a type of protein that the body converts into serotonin, known to make you relax, improve your mood and generally make you feel happier.

PMS: Forget the pills - eat a banana. The vitamin B6 it contains regulates blood glucose levels, which can affect your mood.

Anemia: High in iron, bananas can stimulate the production of haemoglobin in the blood and so helps in cases of anemia.Blood Pressure: This unique tropical fruit is extremely high in potassium yet low in salt, making it the perfect to beat blood pressure. So much so, the US Food and Drug Administration has just allowed the banana industry to make official claims for the fruit's ability to reduce the risk of blood pressure and stroke.
Brain Power: 200 students at a Twickenham (Middlesex) school were helped through their exams this year by eating bananas at breakfast, break, and lunch in a bid to boost their brain power! Research has shown that the potassium-packed fruit can assist learning by making pupils more alert.
Constipation: High in fiber, including bananas in the diet can help restore normal bowel action, helping to overcome the problem without resorting to laxatives.
Hangovers: One of the quickest ways of curing a hangover is to make a banana milkshake, sweetened with honey. The banana calms the stomach and, with the help of the honey, builds up depleted blood sugar levels, while the milk soothes and re-hydrates your system.
Heartburn: Bananas have a natural antacid effect in the body, so if you suffer from heartburn; try eating a banana for soothing relief.
Morning Sickness: Snacking on bananas between meals helps to keep blood sugar levels up and avoid morning sickness.
Mosquito bites: Before reaching for the insect bite cream, try rubbing the affected area with the inside of a banana skin. Many people find it amazingly successful at reducing swelling and irritation.
Nerves: Bananas are high in B vitamins that help calm the nervous system.
Overweight and at work? Studies at the Institute of Psychology in Austria found pressure at work leads to gorging on comfort food like chocolate and crisps. Looking at 5,000 hospital patients, researchers found the most obese were more likely to! Be in high-pressure jobs. The report concluded that, to avoid panic-induced food cravings, we need to control our blood sugar levels by snacking on high carbohydrate foods every two hours to keep levels steady.
Ulcers: The banana is used as the dietary food against intestinal disorders because of its soft texture and smoothness. It is the only raw fruit that can be eaten without distress in over-chronicler cases. It also neutralizes over-acidity and reduces irritation by coating the lining of the stomach.
Temperature control: Many other cultures see bananas as a "cooling" fruit that can lower both the physical and emotional temperature of expectant mothers. In Thailand, for example, pregnant women eat bananas to ensure their baby is born with a cool temperature.
Seasonal Affective Disorder (SAD): Bananas can help SAD sufferers because they contain the natural mood enhancer tryptophan.
Smoking: Bananas can also help people trying to give up smoking. The B6, B12 they contain, as well as the potassium and magnesium found in them, help the body recover from the effects of nicotine withdrawal.
Stress: Potassium is a vital mineral, which helps normalize the heartbeat, sends oxygen to the brain and regulates your body's water balance. When we are stressed, our metabolic rate rises, thereby reducing our potassium levels. These can be rebalanced with the help of a high-potassium banana snack.
Strokes: According to research in The New England Journal of Medicine, "eating bananas as part of a regular diet can cut the risk of death by strokes by as much as 40%!"
Warts: Those keen on natural alternatives swear that if you want to kill off a wart, take a piece of banana skin and place it on the wart, with the yellow side out. Carefully hold the skin in place with a plaster or surgical tape!
So, a banana really is a natural remedy for many ills When you compare it to an apple, it has four times the protein, twice the carbohydrate, three times the phosphorus, five times the vitamin A and iron, and twice the other vitamins and minerals. It is also rich in potassium and is one of the best value foods around.So maybe its time to change that well known phrase so that we say, "A banana a day keeps the doctor away!
"PS: Bananas must be the reason monkeys are so happy all the time!

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. SOURCE: INTERNET
-----------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள்

>> Wednesday, May 2, 2007

பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதி.

இல.கணேசன் மீது மான நஷ்டஈடு வழக்கு.
தமுமுக தலைவர் அறிவிப்பு

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாருல்லாஹ் முத்துப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இல.கணேசன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது...

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கடந்த 21-04-2007 அன்று உடைத்து சேதப்படுத்தப் பட்டிருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குயதாகும்.

ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன் என பன்முக தளங்களில் போராடிய பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான முத்துப்பேட்டையில் விஷமிகள் சிலர் அவரது சிலையை சேதப்படுத்தியிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதியாகவே இதைப் பார்க்கிறோம்.

இவ்விஷயமாக முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மனோகரன் என்பவரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மீரா உசேன் என்பவரும் அவசர கோலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைரேகை நிபுணர்கள் சோதனைகள் நடத்த வருவதற்கு முன்பே, மீரா உசேனை குற்றவாளி என தேடி அலைந்த காவல்துறை, கைரேகை நிபுணர்களின் முடிவைக் கூட கேட்காமல் அவரைக் கைது செய்துள்ளதாக அவ்வூர்மக்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் மனோகருக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என முத்தரையர் சமுதாய மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நிலவரம் இப்படியிருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவரான இல.கணேசன் இச்சிலை உடைப்பு தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார்.

இது கடும் கண்டனத்திற்குயதாகும். தமுமுகவின் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ இவ்விஷயத்தில் கைது செய்யப்படாத போது, மீரா உசேன் என்பவருக்கும் தமுமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது இல.கணேசன் பொய் பழி சுமத்தியிருப்பது அவரது பதற்றத்தைக் காட்டியுள்ளது. அவரது திசை திருப்பும் முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமுமுக மீது பொய் பழி சுமத்திய இல.கணேசன் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு விரைவில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். T.M.M.K
----------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்


இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்

பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International - DCI) குற்றம் சாட்டியுள்ளது.

உலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.

இச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்போது உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான்.
ஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.

விசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் அவன் தெரிவித்தான்.

மேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.

DCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.

செப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
NANDRI: SATYAMARGAM.
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'

>> Tuesday, May 1, 2007

தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'

ஏப்ரல் 30, 2007 அகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.

போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

இவர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா. வன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா. வன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

வன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம். காரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.

அதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

வன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர்நிலை பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார். 11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

தற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.

வன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார். இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம்.

இக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக. வன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார். 11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.

அவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன். இலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.

இதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2007/04/30/gujarat.html
----------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக

>> Monday, April 30, 2007

தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிறு, 29 ஏப்ரல் 2007--- புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திரு டெனட், அமெரிக்க துணை அதிபர் டிக் செனியையும் வெளியுறவு அமைச்சரான கொன்ண்டலீசா ரைசையும் வெளிப்படையாகவே சாடினார்.

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கற்பனையான காரணம் கூறி அதன் மீது போர் தொடுத்த புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு திரு டெனட் CIA தலைவராக இருந்த போது அவர் அளித்த உளவு அறிக்கையின் அடிப்படையிலேயே போர் தொடுத்ததாக அறிவித்தது.

இதைத் தற்போது வன்மையாக மறுத்துள்ள திரு டெனட், புஷ், செனி மற்றும் ரைஸ் ஆகிய மூவரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று சாடியுள்ளார். தான் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்றும், உண்மையில் அதற்கு மாற்றமான அறிக்கையே அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராக் மீதான தாக்குதல் அட்டவணை குறித்த செய்தி தமக்குக் கிடைத்ததும் இது தவறான தகவலின் பேரில் தொடுக்கப்பட்ட போர் என்று தாம் வலியுறுத்தியதாகவும், அப்போது புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரைஸ், காலம் கடந்துவிட்டதாகக் கூறி தனது அறிக்கையை நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

பொய்யான தகவல்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட இராக் போரில் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து வரும் புஷ் அரசு தன்னை பதவிவிலகச் செய்து பலிகடா ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க செனட் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.-------NANDRI: SATYAMARGAM
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்கம்

>> Saturday, April 28, 2007

ஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்கம்.

எத்தனை சியா சுன்னிகள் சண்டை வந்தாலும் இஸ்லாத்தின்அடிப்படையை யாராலும் மாற்ற முடியாது. இதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. இந்த அடிப்படையிலிருந்து சிலர் மாறுபடுவதால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
What's the Difference Between Shia and Sunni Muslims?

A. Both Sunni and Shia Muslims share the most fundamental Islamic beliefs and articles of faith.

The differences between these two main sub-groups within Islam initially stemmed not from spiritual differences, but political ones.

Over the centuries, however, these political differences have spawned a number of varying practices and positions which have come to carry a spiritual significance.

The division between Shia and Sunni dates back to the death of the Prophet Muhammad, and the question of who was to take over the leadership of the Muslim nation.

Sunni Muslims agree with the position taken by many of the Prophet's companions, that the new leader should be elected from among those capable of the job. This is what was done, and the Prophet Muhammad's close friend and advisor, Abu Bakr, became the first Caliph of the Islamic nation.

The word "Sunni" in Arabic comes from a word meaning "one who follows the traditions of the Prophet."

On the other hand, some Muslims share the belief that leadership should have stayed within the Prophet's own family, among those specifically appointed by him, or among Imams appointed by God Himself.

The Shia Muslims believe that following the Prophet Muhammad's death, leadership should have passed directly to his cousin/son-in-law, Ali. Throughout history, Shia Muslims have not recognized the authority of elected Muslim leaders, choosing instead to follow a line of Imams which they believe have been appointed by the Prophet Muhammad or God Himself.

The word "Shia" in Arabic means a group or supportive party of people.

The commonly-known term is shortened from the historical "Shia-t-Ali," or "the Party of Ali." They are also known as followers of "Ahl-al-Bayt" or "People of the Household" (of the Prophet).

From this initial question of political leadership, some aspects of spiritual life have been affected and now differ between the two groups of Muslims.

Shia Muslims believe that the Imam is sinless by nature, and that his authority is infallible as it comes directly from God. Therefore, Shia Muslims often venerate the Imams as saints and perform pilgrimages to their tombs and shrines in the hopes of divine intercession.

Sunni Muslims counter that there is no basis in Islam for a hereditary privileged class of spiritual leaders, and certainly no basis for the veneration or intercession of saints. Sunni Muslims contend that leadership of the community is not a birthright, but a trust that is earned and which may be given or taken away by the people themselves.

Shia Muslims also feel animosity towards some of the companions of the Prophet Muhammad, based on their positions and actions during the early years of discord about leadership in the community. Many of these companions (Abu Bakr, Umar, Aisha, etc.) have narrated traditions about the Prophet's life and spiritual practice. Shia Muslims reject these traditions (hadith) and do not base any of their religious practices on the testimony of these individuals.

This naturally gives rise to some differences in religious practice between the two groups. These differences touch all detailed aspects of religious life: prayer, fasting, pilgrimage, etc.

Sunni Muslims make up the majority (85%) of Muslims all over the world. Significant populations of Shia Muslims can be found in Iran and Iraq, and large minority communities in Yemen, Bahrain, Syria, and Lebanon.

It is important to remember that despite all of these differences in opinion and practice, Shia and Sunni Muslims share the main articles of Islamic belief and are considered by most to be brethren in faith.

In fact, most Muslims do not distinguish themselves by claiming membership in any particular group, but prefer to call themselves simply, "Muslims."

மேலும் படிக்க... Read more...

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

>> Friday, April 27, 2007

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.

வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன.

அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை.

இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன.

ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில்
இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது
இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும்.

MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன.

இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர்.

அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்கவழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே பொய்க்கடவுளர்களின்கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா?

ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.

இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான "இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.

பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான்.

இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள்.

எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே!

அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே!

ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல்உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை.

அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள்.

இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த
இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.

மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை.

அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது.

அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்?

இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை.

அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள்.

இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்
"எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. "

"மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு." அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள்.

ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர்.

தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.

இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல் "என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர்." (25:30 அல்குர்ஆன்) என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை.

எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்
"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். " என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம்.

மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.

அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா?

(நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
NANDRI: http://www.readislam.net/untouchable.htm
------------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP