வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்
>> Friday, June 1, 2007
வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்
ஞானியிடம் சீடன் கேட்டார், ''குருவே, நான் பொய்யை மிகவும் விரும்புகிறேன். எதையும் நேரடியாய்ப் பேசுவதவிட கொஞ்சம் சேர்த்துச் சொன்னால்தான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி?''
ஞானி, ''மற்றவரை விட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறைகாயாய்க் காண்பித்துக் கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்'' எனச் சொன்னார்.
ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும். ஒவ்வொரு முறை நாம் பொய் சொல்லும்போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு!
மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனி கலையாகத் திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.
இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்கள ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம்.
ஒரு சின்ன கதை:
முதல் பாட வேளைக்கான மணி அடித்து பத்து நிமிடம் ஆகியும் கணக்கு வாத்தியார் வரவில்லை.
மாணவர்கள் குறும்பர்கள்.
அதில் ஒரு மாணவன், ''டேய் கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே! ஜுரமா இருக்குமோ!'' என்றான்.
அடுத்த மாணவன், ''கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா சீரியஸ் ஆகி இருப்பாரே!'' என்று சொன்னான்.
இதைக் கேட்ட மற்றொரு மாணவன், 'சீரியஸா இருக்கிறார் என்றால், இன்னேரம் அவர் செத்துப் போயிருக்கலாம்'' என்று சொல்ல,
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே பள்ளி முழுவதும் செய்தி காட்டுத்தீப் போன்று பரவியது.
எனவே பள்ளிக்கு விடுமுறைவிட்டு விட்டு, எல்லோரும் கணக்கு வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினர்.
மாலையும் கையுமாக பள்ளியின் வெளியில் மாணவர்கள் அனைவரும் புறப்பட்டுத் தயாராக நின்று கொண்டிருக்க விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார் கணக்கு வாத்தியார்.
நீங்கள் பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா? என்பது கேள்வியல்ல.
பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பை விட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.
அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து உங்களை உங்களிடமிருந்தே பிரிக்கும் அரக்கனாகும்.
பொய்ப் பேசுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள எதையுமே திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இனி எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைப்படுத்தி என்னைப் பேசச் சொல்லித் தூண்டும் செயலை முழுமையாய் கவனிப்பேன். அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்'' எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள். வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும் மற்றவரும் சேர்ந்து நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும். SOURCE:> INTERNET.
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment