பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.
>> Thursday, May 31, 2007
பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. மனக் கவலையோடு வந்தான் ஒருவன்.
'எனக்குப் பிரச்னைகள் அதிகமாகிவிட்டன. எந்தப் பிரச்னையயும் என்னால் தீர்க்க முடியவில்லை.''
''அப்படியா?''
''ஆமாம் . எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருப்பதாகவே தெரியவில்லை. என் பிரச்னைகளுக்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்'' என்றான்.
யோசித்தார். ''என்னுடன் வா'' என்று, அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அவனிடம் ஒரு சல்லடையைக் கொடுத்தார்.
'இந்த சல்லடையைக் கடல் நீரால் நிரப்பு'' என்றார்.
அவன் சல்லடையால் கடல் நீரை அள்ளி அள்ளிப் பார்த்தான். ஆனால் நீர் நிற்கவில்லை. சல்லடைத் துளைகள் வழியே வழிந்தோடியது.
''சல்லடையில் எப்படி நீரை நிரப்ப முடியும்? இது முடியாத காரியம்!''
''இல்லை. முடியும்'' என்று சொல்லி, சல்லடையை கடலுக்குள் தூக்கி எறிந்தார். அது கடலுக்குள் மூழ்கியது.
''இப்போ சொல். சல்லடை முழுவதும் கடல் நீர்தானே இருக்கிறது?''
''இப்படியொரு வழியா?'' என்று, திகைத்து நின்றான் வந்தவன்.
''ஆம். பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் விடை கிடைக்கும்'' என்றார்
SOURCE:>> INTERNET
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment