என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?
>> Thursday, May 31, 2007
என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா? ஒரு அம்மா வந்தார். ஒவ்வொரு நாளும் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்துனுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இதுதான். என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?'' என்று கேட்டார்.
''என்னம்மா உன் பிரச்னை. உன் பிரச்னைகளை முதலில் தெளிவாகச் சொல்லம்மா. அப்போதான் உனக்கு என்னால் முடிந்த தீர்வைத் தரமுடியும்'' என்று சொன்னோம்.
அப்போது அந்த அம்மா சொன்னார். 'நான் எதைச் செய்தாலும் அது வினையாகி விடுகிறது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் '' என்று அழத் துவங்கினார்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் இது ஏதோ ஒருவரின் பிரச்னை அல்ல.நம் பெரும்பாலானோரின் பிரச்னையும் இதுதான். நரகவேதனையாக இருக்கிறது.எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று சொல் வதெல்லாம் புரிந்து கொள்ளுதல் இல்லாமல் இருப்பதனால்தான்.
உணவு இருக்கும் இடத்திலிருந்து திரும்பும் வழியில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இந்த வொர்க்கர் ஆன்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.
எறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து Dufour gland எனும் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பிசுபிசுப்புத் தன்மை வாய்ந்தது. worker ants தன் இடம் நோக்கித் திரும்பும்போது இந்தத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாகக் குறிக்கப்பட்டு வரும். தன் இருப்பிடத்தை அடைந்ததும் தன் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும் துணுக்கு உணவினையும் தந்தி antenna வழிச் செய்தியில் பரிமாறிக் கொள்ளும்.
பின் சக நண்பர்களோடு கூட்டாகச் சேர்ந்து உணவு இருக்கும் இடம் தேடி அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும் தன் உடலிலிருந்து திரவத்தை சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக்கொள்ளும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்தத் திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள் தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள் உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அவற்றைப் பாதையாக கொண்டுதான் உள்ளே வாழ்வதும் வெளியே சிரிப்பதும் புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது. துக்கமான உணர்வுகள் வந்தால் மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல் நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.
எறும்பின் பிரயாணம் அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொறுத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொறுத்தது.
ஆனந்த மயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி துக்கத்திற்குள் விழ முடியாது.
எறும்பு போல் வேலை செய்யும் துறும்பு மனத்திற்குள் ஆனந்தம் அரும்ப நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளைச் சுரக்கச் செய்யுங்கள். SOURCE:>> INTERNET.
-----------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment