பாதிரியாரிடம் மூன்று கேள்விகள்.
>> Sunday, May 27, 2007
ஒருமுறை மெத்த படித்த மேதாவி ஒருவர், 'கடவுள் கிடையவே கிடையாது' என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காக சென்றிருந்தார்.
பாதிரியாரிடம், ''ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிளை நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு, எனக்குப் புரியும்படி பதில் சொல்லவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.
உடனே அந்த மேதாவி, ''என் முதல் கேள்வி. கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவருடய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.''
இரண்டாவது கேள்வி : ''விதி, விதி என்று சொல்கிறார்களே விதி என்றால் என்ன?''
மூன்றாவது கேள்வி : ''பைபிளில் சொல்லியுள்ளபடி பார்த்தால் சாத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். ஆனால், சாத்தானைத் தண்டிக்க இறைவன் அவனை மீண்டும் நெருப்பிலேயே போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இதுகுறித்து கடவுள் யோசிக்கவில்லயா?'' என்று கேட்டார்.
இந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதான் தாமதம். பாதிரியார் பளார் என்று மேதாவியினுடய கன்னத்தில் அறைந்தார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.
''கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது?'' என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.
அதற்கு பாதிரியார், ''நீ என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால் உன்ன நான் அறையவில்லை. உன்மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீதான், உனக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னாய். அதனால்தான் உன்னை அடிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொல்.
நான் அடித்தபோது உனக்கு வலித்ததா?'' என்று கேட்டார்.
''இது என்ன கேள்வி? வலி உயிர் போய்விட்டது'' என்று மேதாவி பதிலளித்தார்.
''ஓ! அப்படியா? அப்படியானால் நீ வலி இருக்கிறது என்பதை நம்புகிறாய். உணர்கிறாய். ஆனால், எங்கே வலியினுடய உருவத்தைக் காட்டு? இதான் உன் முதல் கேள்விக்குப் பதில்.''
''சரி, என்னுடய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.'' ''நேற்று உன் கனவில் என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா?'' என்று கேட்டார்.
மேதாவி, ''இல்லை'' என்று சொன்னார்.
''சற்று நேரத்திற்கு முன்பு வரை நீ அடி வாங்கப் போவது உனக்குத் தெரியாது. ஆனால் அடி வாங்கிவிட்டாய். இதற்குப் பேர்தான் விதி.''
''இனி, என்னுடய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்''.
''உன்ன அறைந்த என்னுடய கை எதனால் ஆனது?''
''இரத்தத்தாலும், சதையாலும்'' என்று சொன்னார்.
''அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உன்னுடய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் என் கை உன்னை அறந்தபோது, உனக்கு வலித்தது. அதேபோல்தான், தீயில் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.''
இந்தப் பதில்களக் கேட்டு புத்தி பெற்று பாதிரியாருக்கு நன்றி கூறி விடை பெற்றார் மேதாவி.
உண்மயை உணர்வதற்கு அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராதவிதமாக ஒரு பாதிரியார் வந்தார்.
ஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்ல. அந்த மனிதரைப்போல நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்பு கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.
பொறுப்பில்லாதவர்களும் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும் அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது' என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.
'நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்ற ஆழ் மனத் தேடுதலாக இருக்கும் உண்மையை, அனுபவமாக உணரத் துடிக்கும் கேள்விகள் தான் சந்தேகங்கள். SOURCE:>> INTERNET.
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
Many people think that God is a separate entity like things in the external world. However, they refuse to realize that God is the absolute active dynamic force (more scientifically Power) beyond all dimensions including time, space and others which are relative to each other.
It would be unwise to approach by logical questions as logic gets developed based on the knowledge we posses which is very much limited.
Nor any scientific approach will solve as this is bound by logic and mathematics. Simply putting, Science tells how the universe was created and how man "evolved" not who created the universe and man.
However, God or "God-ism" can be realized only by deep understanding of self with meditation (concentrated Dikr) and by being very alert to self and living in the present. This needs to be absolute submission of one's self to God and this is what Islam preaches. First step is detachment from this material life including pride, fame, greed, lust. Second, one should realize that all credits go to Him; surely not to us! We are just a mean through whom a good deed and event is happening. Human soul gets credit (read: Paradise) for being non-attachment for every deed.
With attachment to this material life, one will execute nothing but Satanism.
Post a Comment