**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காற்று தென்றல் வீசினால்...அதே காற்று புயலாக வீசினால்..

>> Sunday, June 3, 2007

காற்று தென்றல் வீசினால்... ''ஆஹா! என்ன இதமாக இருக்கிறது என எழுந்துவர மனதில்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.

அதே காற்று புயலாக வீசினால்... ''ஐயையோ! என்ன பாதிப்பு வருமோ?... என்ற எண்ணம்தான் முதலில் வரும்.

காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்று ஒன்று தான். அது வீசும் விதத்தில் தான் வெளிப்படும் தன்மை மாறுபடுகிறது. வேகமான வீசினால் அது புயல். சாதாரணமாக வீசினால் அது ஆடிகாற்று. இதமாக வீசினால் அது தென்றால். ஆனால் மூன்றுமே காற்றுதான்.
அதன் தன்மையும் ஒன்றுதான்.

இதைத்தான் ஞானிகள் 'நீயும், நானும் ஒன்று' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். 'நானும் அதே ஆனந்த சக்திதான். நீயும் அதே ஆனந்த சக்திதான்' என்று சொல்கிறார்கள்.

காலம் காலமாக எல்லா ஞானிகளும் இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.

சுபாவத்தாலே தான் துக்கமயமானவன் என்று நம்புகிறார்கள். அதான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள்ளும் ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால் வெளிப்படும் விதத்தில் அது புயல் போல் இருந்தால் முரட்டுத்தனம் முன்னிற்கிறது.

அதே காற்று இதமாக, மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால் முரடனும் இனிமையான மனிதனாக மாறிவிடுவான்.

இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, தென்றலின் தன்மை கொண்டு பதமாக வந்தால்... அடடா! இந்தக் காற்று நம் கூடவே இருக்காதா?! என்று சொல்லக் கூடிய 'ஞானி'யாக மாறிவிடமுடியும்.

உங்களுக்குள்ளிருந்து பொங்கும் சக்தியும். உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்கு கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே தெரியவரும். அதன் விளைவாக மனரீதியான, உடல்ரீதியான பிரச்னகளும் சேர்ந்து வெளிப்பட்டு விடும்.

அதனால் நம் மனக்கடலில் காற்றின் தன்மையை கட்டுப்பாடுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சாத்தியமே.

இதை வைத்து காற்று கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சொல்ல முடியாது ; கட்டுப்படுத்தப்படவில்ல என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால் அது உள்ளுக்குள் இனிமயான உணர்வுகைளையும், இனிமயான அதிர்வுகளையும் உருவாக்கும்.

அந்த இனிமையான உணர்வும் இனிமையான அதிர்வும் ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கும்.

ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள். தனக்குள் இனிமையாக இருக்கும் நல்ல மனிதரைச் சுற்றி இருப்பதற்கே நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும்.

அதனால்தான் நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி நன்றாகச் சேர்கிறார்கள்.

பொதுவாக எந்த இடத்தில் தென்றல் வீசுகின்றதோ அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.

ஆனால், எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடிவிடுவார்கள். புயலாய்த் தென்படும் முரட்டுத்தனமும் முரண்பாடும் கொண்ட மனிதர்களின் அருகாமையைக் கூட யாரும் விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை.

Business deal செய்தே ஆக வேண்டும் என அதிகபட்சமாக நான்கு ஐந்து பேர்தான் அவரோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.

அப்படிப் பட்டவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.

வாழ்க்கையில் சஞ்சலம், சபலம், தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால் தங்களுக்குள் இருக்கும் மனக்கடலில், புயலின் சூழலை உருவாக்குபவர்களுக்குத்தான் வரும்.

புரிந்து கொள்ளுங்கள். சுழல் உருவாகுவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது அந்த இடத்தில் சக்தியை கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலோ கடல் அமைதியாகும். மனக்கடல் அமைதியானால் போதும். நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள்.. SOURCE: INTERNET.
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP