பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்
>> Tuesday, May 29, 2007
பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்
அந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால் விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம்.
அவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.
அப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்து உயிரைக் காப்பாற்றி விடுமாம்.
எல்லாம் நஞ்சுமயம் ----நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
குடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு. -இழுக்கின்ற மூச்சில் நஞ்சு .
சாப்பிடுகின்ற உணவில் நஞ்சு.இப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில் .
இதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சு சேர்ந்து அவை சிர்குலைகின்றன. இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.
ஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா?
அதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும். அது என்ன?
பத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 பிடி சாதத்துடனோ பிசைந்து சாப்பிட்டால் போதும். காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லா நஞ்சுகளும் முறியும்.------மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
நல்ல மருத்துவம். அறியத்தந்தமைக்கு நன்றி.
Post a Comment