**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' ?

>> Monday, May 28, 2007

விளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' ?

கதவு திறக்கிறது. கழுத்தில் ஸ்டெத்தாஸ் கோப்பும், முகத்தில் புன்னகையும் இழைய அவர் வெளியே வருகிறார்.

கசங்கிய ஆடையும், கலங்கிய முகமாய் இருபுறமும் ஒதுங்கி நிற்கும் எளிய மக்கள் அவரைக் கைகூப்பி வணங்குகின்றனர். ஆறுதலும் நட்பும் கலந்த பார்வையை அவர்களுடன் பரிமாறியபடியே அவர்களைக் கடந்து செல்கிறார் அவர்.

கிராமப்புறத்திலும் சரி, நகர்ப்புறத்திலும் சரி, எளிய மக்களுக்கு ''கண்கண்ட தெய்வம்'' இன்றைக்கும் டாக்டர்கள்தான்!

மருத்துவமும், மருத்துவர்களும், மருத்துவத் துறையும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வகிக்கும் சமூகப் பாத்திரம் முக்கியமானது. அதைவிட முக்கியமானது._

இத்தகைய மருத்துவத்தையும், மருத்துவர் களையும் பற்றிய செய்திகளை, விழிப்புணர்வு சார்ந்த கவனத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஊடகங்களின் பங்கு!

ஊடகங்கள் இத்தகைய தங்களின் பங்களிப்பைச் சரியாக செய்கின்றனவா?
சங்கடமான கேள்விதான்.

இருபத்தி ஓராவது தலைமுறையாக தொடரும் 'பரம்பரை வைத்தியசாலை' போன்ற பெயர்களுடன் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரமாய் வெளியிடப்படும் தகவல்கள் ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமானதன்று!

முண்டாசும் குடுமியுமாய் இருக்கும் முதியவர் ஒருவரின் படத்துடன் தொடங்கி, கோட்சூட் டை சகிதமாய் இன்றையத் தலைமுறைக்கேற்ற தோற்றத்துடன் ஒருவர் வர பல்வேறு காலப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் அந்த விளம்பரத்தில் இருக்கும் இருபத்தி ஓராவது தலைமுறையாயிற்றே! அந்த விளம்பரம் என்னவெல்லாம் சொல்கிறது? ''இளைஞர்களே தூக்கத்தில் உங்களுக்கு வெளியாகி விடுகிறதா? சிறுநீருடன் வெள்ளையாக ஏதாவது வெளியேறுகிறதா? கண்களுக்குக் கீழ் கருவளையமா?....''

எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த அப்பாவி இளைஞர்களை பாலியல் கிளர்ச்சி கலந்த சந்தேகங்களுடன் சுண்டி இழுக்கும் இத்தகைய விளம்பரங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களுக்கான பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் பெருகிவழியும் மருத்துவ அபத்தங்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை.

சில மருத்துவக் குறிப்புகள்தான் முறையான கல்வியும், அனுபவமும் பெற்ற மருத்துவர்களின் பெயருடன் வெளியிடப்படுகின்றன.

''வாம்மா... மின்னல்...'' என்பது மாதிரி கண்சிமிட்டும் நேரத்தில் வந்து மறையும் பெயர் தெரியாத மருத்துவப் பத்திரிகைகள் பலவற்றில் இடம் பெற்றிருக்கும் எத்தனையோ கட்டுரைகளிலும், குறிப்புகளிலும், எந்த மருத்துவர் பெயரும் இருப்பதில்லை. யாரோ ஒரு வழிப்போக்கர் போகிற போக்கில் அதை எழுதி இருப்பார்.

பெரும்பாலும் தான் கேள்விப்பட்ட தகவல்களயும், நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறைகளயும் குறிப்புகளாகவும், கட்டுரையாகவும் அவர் எழுதியிருப்பார். அந்தக் குறிப்புகளைப் பார்த்து, தன்னுடய 'சருமத்தை பளபளப்பாக்குவதற்காக' எதையாவது ஒரு பெண் செய்து பார்த்தால்... கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது வெறும் விளம்பரத்தோடும், மருத்துவக் குறிப்புகளோடும் இந்த அபாயம் முடிந்துவிடவில்லை!

முறையான மருத்துவக் கல்வியோ, பட்டப்படிப்போ இல்லாத பலர் 'பிரபல டாக்டர்' என்ற பட்டத்தை தங்களுக்கு தாங்களே சூட்டிக் கொண்டு மேற்சொன்ன 'மின்னல்' பத்திரிகைகளில் பேட்டியும் கொடுத்து விளம்பரமும் கொடுக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. விளம்பரம் கொடுக்காவிட்டால் அவருடைய பேட்டி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவராது என்பது வேறு செய்தி!

இதையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்கள் இல்லையா என்று கேட்கிறீர்களா?

இங்கு எதற்குத்தான் சட்டங்கள் இலலை. சட்டங்கள தெரிந்து கொள்ளு முன்பே அவற்றின் ஓட்டைகளுக்குள் ஊடுருவுவது எப்படி என்பது தெரிந்து கொள்வதானே நமது ஜனநாயக எதார்த்தம்!

ஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்திரிககைகள் மட்டும்தான் இப்படியா?

வலைத்தளங்கள், தொலைக் காட்சிகளிலெல்லாம் மருத்துவம் பற்றிய செய்திகள் மிக நேர்மையோடு வெளியிடப்படுகின்றனவா? என்று அடுத்த கேள்வி எழுவது இயல்பானது. அச்சு ஊடகங்களுக்கு சற்றும் சளைக்காமல் காட்சி ஊடகங்களும், இன்டர்நெட் என்ற மின்னணு ஊடகமும் இந்த அவலத்தை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

இரவு 11 மணிக்கு மேல், அதிகாலையில், முற்பகலில் என்று டி.வி. சேனல்களின் பெரும்பகுதி நேரம் 'மருத்துவச் சேவை' செய்வதில்தான் கழிகின்றது. ஒரே ஒரு ஆறுதல். டி.வி. நிகழ்ச்சிகளில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனகள் வழங்கும் டாக்டர் நேரில் தோன்றுவார். மேலும் எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு 'இது குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு நடை முறைப்படுத்துங்கள்' என்று ஒரு வாசகத்தையும் சேர்த்தே சொல்லிவிடுவார்.

இது மருத்துவ ஆலோசனை கேட்பதன் மூலம் அந்த நேயருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாகக் குறைத்து விடுகிறது.

'நெட்'டில் விரியும் மருத்துவ குறிப்புகளும், அதற்கு தொடர்பானவை என்ற பெயரில் வெளியிடப்படும் சற்றும் தொடர்பற்ற காட்சிகளும் ஒரு சதவீத மருத்துவ நியாயத்தை கூட இந்த சமூகத்துக்கு செய்யப் போவதில்லை என்பதை சத்தியம் செய்து சொல்லிவிடலாம். பாலியல் கிளர்ச்சி ஊட்டுவதன் மூலம் தங்கள் வணிக எல்லையை விரிவாக்கிக் கொள்வதை தவிர இந்த வளைத்தளங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்க வாய்ப்பில்ல.

நாடு, மொழி என்ற எல்லைக்குட்பட்ட கட்டுப்பாடுகளோ, தேவைகளோ வலைத் தளங்களுக்கு இல்லை என்பதால், பிரதேசம் சார்ந்த சமூக அக்கறையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. என்ன ஒன்று... வலைத்தளத்திற்குள் சென்று 'சர்ச்' செய்யவும், 'சாட்' செய்யவும் வசதி இல்லாத வீட்டுப் பிள்ளைகளால் இயலாது என்பதால் இப்போதைக்கு இதனால் பெரிய ஆபத்து அடித்தட்டு மக்களுக்கு இல்லை என்பது ஒரு முரணான ஆறுதல்.

ஆனால் அச்சு ஊடகம் இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது.

முடிவெட்டுவதற்கு சலூனுக்குச் செல்லும் போதும், பேருந்துக்காக, ரயிலுக்காக காத்திருக்கும் போதும், அவற்றில் பயணம் செய்யும் போதும், டீக்கடை, பெட்டிக் கடை என அடித்தட்டு, நடுத்தட்டு சமூகத்தின் அன்றாடத்தோடு பின்னிப் பிணைந்து ஊடுருவிக் கிடப்துபதான் அச்சு ஊடகம். எனவேதான் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பிற ஊடகங்களைவிட பத்திரிகைகளின் பங்கு அழுத்தமானதாக கருதப்படுகிறது.

அதிக பணச்செலவு செய்து தனியார் மருத்துவர்களிடமும் மருத்துவ மனைகளுக்கும் செல்ல முடியாத எளிய மக்கள்தான் பெரும்பாலும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக மருத்துவ நிவாரணம் தேட முயற்சிக்கிறார்கள்.

அப்படி என்றால் மருத்துவச் செய்திகளை வெளியிடுவதில பத்திரிகைகள் எத்தகைய கவனத்தைக் கையாள வேண்டும்?

நமது ஆண் பெண் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 950க்கும் குறைவான பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது என்பது பற்றி எத்தனை கிராமத்துப் பெண்களுக்கு தெரியும்?

பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து கொல்ல முயல்வது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் என்ற விழிப்புணர்வு நமது அடித்தட்டு மக்களில் எத்தனை பேர் அறிவார்கள்?

உயிர் காக்கும் மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் தடையின்றிக் கிடைக்கும் என்ற நிலை இருந்தும் உலகமையச் சூழலால் அவற்றின் விலை எகிறிக் கொண்டே போகிறது என்ற கவலைக்குரிய செய்தியை அவர்களில் எத்தனபேர் அறிவார்கள்?

இந்தியாவில் மட்டுமே உற்பத்தியாகும் எத்தனையோ அற்புத மூலிக மரங்கள், செடிகளின் காப்புரிமை கூட நம்மிடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற விபரீதத்தை இவர்களில் எவ்வளவு பேருக்கு விளங்க வைத்திருக்கிறோம்?

கவலையாக இருக்கிறது.

வல்லரசாக கனவு காணும் இந்தியாவின் மண் வடிவத்தைப் போலவே, தொழில் வளத்தைப் போலவே மனிதவளமும் மிக முக்கியமானது. மனித வளம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை மருத்துவத்தைச் சார்ந்தே இருக்கிறது.

ஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகயை மருத்துவம் பற்றி ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அதைத் தாங்கிப் பிடிக்கும் நான்காவது தூணின் நேர்மையான அக்கறை பற்றி! 
SOURCE:>> INTERNET.
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP