மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!
>> Monday, December 31, 2007
மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!
கண்ணாடி ஒரு விந்தையான பொருள். எந்த வடிவத்திலும் அதைத் தயாரிக்கலாம் என்பதே விந்தைதானே!
இது மணலால் செய்யப்படுகிறது என்பது தெரியுமா? கிறிஸ்டலின் சிலிகா எனும் பொருள் நூற்றுக்கு நூறு அடங்கிய மணலால்தான் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மணல் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிடைக்கிறது. மணலால் கயிறுதான் திரிக்க முடியாது கண்ணாடி தயாரிக்கலாம்!
மெசபடாமியாவில்தான் முதன் முதலில் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. கண்ணாடியால் ஆன சிறுமணிகள் (மணிமாலையில் உள்ளவை) முத்திரைகள் கட்டடங்களை அழகுபட அமைக்கும் அலங்காரப் பொருள்கள் கண்ணாடியால் செய்யப்பட்டன.
கிறித்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே இவை செய்யப்பட்டன. இதே கால கட்டத்தில் அமெரிக்காவின் பூர்வகுடிகள் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள்.
கண்ணாடியின் இயற்கையான நிறம் பச்சை, நீலம் கலந்த பச்சை மட்டுமே!
மணலில் மறைந்து கலந்துள்ள இரும்புக் சத்தினால் விளைந்த வண்ணம் இது! கண்ணாடி தயாரிப்பாளர்கள் பல வண்ணங்களில் தயாரிக்கின்றார்கள் உலோகக் கலவையையும் கனிமப் பொருள்களையும் சேர்த்துச் செய்வதால் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கிடைக்கின்றன.
எகிப்து நாட்டில் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி பயன்படத் தொடங்கியது. நீலமணிகள் கண்ணாடியால் உருவாக்கப்பட்டன. மந்திர சக்தி உடையவை எனப் பிரச்சாரம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டன.
ரோம நாகரிக காலத்திலும், °கான்டி நேவியன் நாடுகளிலும் (நார்வே, சுவீடன் போன்ற) பிரிட்டிஷ் தீவுகளிலும் சீனாவிலும்கூட கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. வெனிஸ் நகரத்தின் அருகில் டார்செல்லோ தீவில் ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் கண்ணாடிப் பொருள்கள் செய்யப்பட்டன.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதிய தொழில் நுட்பம் புகுந்தது. வெள்ளைக் கூழாங் கற்களையும் எரித்த செடி,கொடிகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சோடா கண்ணாடி வடக்கு அய்ரோப்பிய நாடுகளில் உருவானது.
நடுக்கடல் நாடுகளில் தயாரிக்கப்படும் (போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு போன்றவை) கண்ணாடிகளைவிட வட அய்ரோப்பிய நாட்டுக் கண்ணாடிகள் வேறுபட்டு இருக்கின்றன.
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடங்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வண்ணக் கண்ணாடி-கள் ஒரு பக்கம் இருந்தாலும் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட கண்ணாடிகள் சாளரங்களில் பயன்படுத்தப்படத் தொடங்கின. இவை கட்டடங்களின் அழகைப் பெரிதும் கூட்டுகின்றன. சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் ஒரு எடுத்துக்காட்டு. இது போலப் பல கட்டடங்களைக் காட்ட முடியும்.
நம் நாட்டவர், எந்தக் காலத்தில் கண்ணாடி செய்யக் கற்றுக் கொண்டனர்?
SOURCE: INTERNET. மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment