ஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு
>> Friday, May 4, 2007
ஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சாதனை
மதுரை,மே 4- மனித புரதத்தையும், ஒட்டகப் பாலையும் பயன்படுத்தி புதிய மூலக்கூறு வடிவத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளது.
புரத மூலக்கூறு வடிவம்
இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தகவல் தொழில் நுட்பத்துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கூறியதாவது:-
உயிரி தொழில் நுட்பத்துறை மற்ற துறை படிப்புக்களை போன்று இல்லை. ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பில் அதிக ஈடுபாடு இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒவ்வொரு புரத மூலக்கூறுக்கும் 3 பரிமாண வடிவங்கள்; கண்டுபிடிப்பது உலகில் இன்றைக்கு முக்கியமான ஆராய்ச்சியாக உள்ளது. உலகில் இதுவரை 43 ஆயிரம் புரத மூலக்கூறுகளின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 300 மூலக்கூறுகள மெம்பரரேன் மூலக்கூறுகள் ஆகும்.
மதுரை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ஒட்டகத்தின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட லாக்டோ பெரேன் என்னும் புரத மூலக்கூறையும், மனித உடலில் உள்ள ஈ-கோலை பாக்டீரியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஆம்ப்ஸி என்னும் புரத மூலக்கூறையும் ஒன்றிணைத்து லாக்டோ பெரேன்-ஆம்ப்ஸி காம்ப்ளக்ஸ் என்ற புது மூலக்கூறு வடிவம் கண்டுபிடித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இந்த மூலக்கூறு வடிவத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய மூலக்கூறுகளையும், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் புரத வடிவங்களையும் உருவாக்க முடியும்.
முக்கியத்துவம்
பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு உயிரி தொழில் நுட்பத்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் ஊக்கமளித்து வருகிறது. மருத்துவ ரீதியாக இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மேல் நாடுகளில் அதிக தேவை உள்ளது. அதிக சம்பளத்துடன் உடனடியாக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மருதமுத்து கூறும்போது, இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம். அதிக நிதி ஒதுக்கீடு செய்து பேராசிரியர்களையும், இளம் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கமளித்து வருகிறோம் என்றார்.
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment