**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

போலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .

>> Monday, May 28, 2007

போலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .

நோய் வந்தால் அதன் காரணம் என்ன என்று ஆய்ந்து பார்த்து அந்தக் ``காரணத்தை’’ப் போக்குவதற்கான மருந்து தந்து குணப்படுத்துவது தான் நோய் தீர்க்கும் முறை. உலகம் முழுவதும் கடைபிடிக்கும் முறை.

இதற்கு மாறாக, சாம்பல் (விபூதி) கொடுத்துக் குணம் ஆக்கும் முறை, தண்ணீர் கொடுத்துக் குணமாக்கும் முறை, மந்திரம் உச்சரித்துக் குணமாக்கும் முறை, தொட்டு குணமாக்கும் முறை என்றெல்லாம் பல மோசடி வழிகளில் நோயைக் குணப்படுத்துகிறேன் என்று ஏமாற்றும் பேர் வழிகள் இந்த நாட்டில் உண்டு.

இந்த மாதிரி மோசடி மன்னர்களை நம்பி மோசம் போகும் மூட நம்பிக்கையாளர்கள் நிறையப் பேர் நாட்டில் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஓர் ஏமாற்று ஆள் பிகார் மாநில மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்குடன் சம்பாதித்து வருகிறார்.

இதனை இங்கிலீசு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளிப்படுத்தியுள் ளது. மூன்று, நான்கு மாதக் குழந்தையை ஒரு தாய் தருகிறார். அதைத் தரையில் படுக்க வைக்கிறார்கள். அதன்மேல் ஏறி நின்று கொண்டு ஒரு ஆள் தன் இரண்டு கால்களாலும் மிதிக்கிறார்.

பின்னர் நகர்ந்து குழந்தையின் தொண்டையில் தன் காலால் மிதிக்கிறார். நோய் குணமாகி விட்டது என்கிறார். இரண்டு அய்ம்பது ரூபாய்த் தாள்களை (நூறு ரூபாய்)க் கொடுத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிப் போகிறார்கள்.
மற்றொரு காட்சி: ஒரு நடுத்தர வயதுப் பெண் படுக்க வைக்கப்படுகிறார். அவரின் வயிற்றின் மீது ஏறி நின்று கொண்டு இந்தப் போலி வைத்தியர் மிதித்துத் துவைக்கிறார். வலி தாங்க முடியாமல் அலறி அழும் அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்டுகிறார்கள். பிறகு போலி வைத்தியர் அந்தப் பெண்ணின் மார்பில் நின்று கொண்டு இரண்டு கால்களா லும் மிதிக்கிறார். அவர் கீழே இறங்கிய பின் அந்தப் பெண் எழுந்து போகிறார். நோய் குண மாகிவிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து போகிறார்.

ஒரு நோயாளியைப் படுக்க வைத்து இருக்கிறார்கள். இதே போலி வைத்தியர் அவர் மேல் ஏறி நின்று குதித்துக் கொண்டே, தன் கையில் வைத்திருக்கும் போர் வாளால் நோயாளியின் வயிற்றுப் பகுதியில் குத்துகிறார். இரத்தம் குபுகுபுவென்று வழிகிறது. கையில் கொஞ்சம் சாம்பலை எடுத்து அந்தக் காயத்தில் வைத்துவிட்டு, போலி மருத்துவர் வாளைச் சுழற்றிக் கூத்து ஆடுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பீதி நிறைந்த கண்களுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் தொலைக்காட்சியில் காட்டினர்.

51 ரூபாய், 101 ரூபாய், 501 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார். நல்ல வரு மானம். முதலீடு மக்களின் மூடத்தனம். தொலைக்காட்சியில் அம்பலப் படுத்தப்பட்ட மோசடியை நல வாழ்வுத் துறையும், காவல்துறையும் கண்டு போலி மருத்துவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். செய்தியைத் தெரிந்துகொண்ட போலி மருத்துவர் காணோம். எங்கோ பதுங்கி விட்டார்.
அவர் பெயர் தல்வார் பாபா. இயற்பெயர் தெரியவில்லை. இவரது மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது அய்.பி.என்., சி.என்.என்., தொலைக் காட்சியாகும். SOURCE:>> INTERNET.
--------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP