உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது
>> Sunday, May 6, 2007
உலகின் முதல் ராக்கெட(ஏவுகணை) தென் இந்தியாவில்இருந்துதான் ஏவப்பட்டது -வ செங்கோ
சீதையின் தலை மயிரை ஒரு கையில் பற்றித் தூக்கித் தன் தொடையில் உட்கார வைத்துப் புஷ்பக விமானத்தில் ஏறிப் போனார் இராவணன் என இராமாயணம் கதைக்கிறது.
வானூர்தியில் சீவகன் பயணம் செய்தான் என சிந்தாமணி கூறுகிறது. வேங்கை மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை வானுலகத்தில் இருந்து வந்து இறங்கிய கோவலன் தன்னுடன் ஏற்றிக் கொண்டு வான்வழியே விண்ணுலகம் சென்றான் என்று சிலப்பதி காரம் சித்தரிக்கிறது. இவையெல்லாம் கதைகள், கற்பனைகள். அளப்புகள். நடப்புகள் அல்ல.
ஆனால் உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் பகுதியில் இருந்துதான் ஏவப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான். மைசூர் புலி என வரலாறு போற்றும் அய்தர் அலியின் மகன்.
பொது ஆண்டு 1790+இல் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தவர் திப்பு.
914 மீட்டர் தூரத்திற்குச் சென்று இலக்கைத் தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகணைக்கு இருந்தது. இதற்குக் காரணம் இதன் கூடு (வெளிப்பகுதி) கனத்த இருப்புத் தகட்டினால் செய்யப்பட்டது. வெடி மருந்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருந்தது. அய்ரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டவைபோல, மரக்கூடு அல்ல.
மராத்தா போர்களில் 18+ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப் பட்ட `ராக்கெட்’டின் உரு ஒன்று ஊல்விக் பகுதியில் ரோடுண்டா விலுள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு அறிவியலாளர், பொறியாளர் என்பதை அறிவோம். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வுக்கு அவர் சென்றபோது ஏவுகணையை எரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் படத்தைப் பார்த்தாராம்; அவர்கள் திப்புவின் சிப்பாய்கள் என்பதை எடுத்துச் சொன்னார்களாம்.
கருநாடகா மாநிலம் சிறீரங்கப் பட்டனத்தில் உள்ள அய்தர் அலி திப்புசுல்தான் நினைவிடங்களில் உள்ள காட்சியகங்களில் அவற்றின் படத்தைக் காணலாம்.-http://viduthalai.com/20070505/snews07.htm
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்